என் மலர்
புதுச்சேரி
- சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, 5 சிறுமிகளை மீட்டனர்.
- இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்துப்பண்ணை நடத்திவருகிறார். மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் வாத்து பண்ணை பணிகளை கவனித்து வந்தனர். வாத்துகளை மேய்ப்பதற்காக புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளில் இருந்து சிறுமிகளை வேலைக்கு வரவழைப்பது வழக்கம். இவ்வாறு வாத்து மேய்க்கும் சிறுமிகளை கொத்தடிமை போன்று அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக குழந்தைகள் நல காப்பகத்தில் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் வாத்துப் பண்ணைக்கு சென்று, சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை ஆய்வு செய்து, அங்கிருந்த 5 சிறுமிகளை மீட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கு கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக 2020ஆம் ஆண்டு புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார், உறவினர்கள் பசுபதி, அய்யனார் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கன்னியப்பன் மனைவி சுபாவுக்கு ஆயுள் தண்டனையும், காத்தவராயன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடும், மற்ற 4 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
- முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி.
- அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன் ரகசியங்களை வெளியிடும் வகையில் தோலை உரிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து புதுவை மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் தோலை உரிப்பேன் என பேசியது நாகரீகமற்ற செயல். அவர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அவர் என்ன செய்தார்? என்பதை வெளியிட ரொம்பகாலம் ஆகாது. மாநில அந்தஸ்து தொடர்பாக ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதமே எழுதி கொடுத்துள்ளார். என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் தோல்தான் உரிந்துபோயுள்ளது. முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி. அவர் தோலை மக்கள்தான் உரித்து காட்டியுள்ளனர். நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம்.
எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடக்கும். அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தமிழ் பாடம் நிச்சயம் இருக்கும். தேவைப்படுவோர் தமிழை தேர்வு செய்து படிக்கலாம்.
புதுவை, காரைக்காலில் உள்ளவர்கள் தமிழை தேர்வு செய்வார்கள். மாகியில் உள்ளவர்கள் மலையாளம், ஏனாமை சேர்ந்தவர்கள் தெலுங்கு பாடத்தை தேர்வு செய்யலாம். பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அதிகம் விரும்புகின்றனர். நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள இந்த பாடத் திட்டத்தை அதிகளவு தேர்வு செய்கின்றனர். எனவே புதுவை மாநில மக்களின் தேவைகளை அறிந்தே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
- இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்
புதுச்சேரி:
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பச்சரிசி, வெல்லம், உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதுபற்றி பேசிய புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
- புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
- சமூக முன்னேற்றக் குறியீட்யீ டின் படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை, லட்சத்தீவு மற்றும் கோவா ஆகியவை சிறப்பாகச் செயல்படுகின்றன
புதுச்சேரி:
புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
சமீபத்தில் போட்டித்தி றன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான நிறுவனம் தயாரித்து, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவினால் ஒப்புதல் வழங்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுவை, லட்சத்தீவு, கோவா ஆகிய யூனியன் பிரேதேசங்கள் முதலிடம் பிடித்துள்ளன.
சமூக முன்னேற்றக் குறியீட்யீ டின் படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை, லட்சத்தீவு மற்றும் கோவா ஆகியவை சிறப்பாகச் செயல்படுகின்றன என்றும், அதே நேரத்தில் ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகியவை மோசமாக உள்ளன என்று பிரதமருக்கான பொருளா தார ஆலோசனைக் குழுதெரிவித்துள்ளது.
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள்' என்ற தலைப்பிலான அறிக்கையில், ஐஸ்வால் (மிசோரம்), சோலன் (இமாச்சலப் பிரதேசம்) மற்றும் சிம்லா (இமாச்சலப் பிரதேசம்) ஆகியவை சிறந்த 3 மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம், குடிநீர், தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் விருப்பத்தைப் பயன்படுத்துதல், தங்குமிடம், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தரமான சூழலை உறுதி செய்தல் போன்ற பல்வேறு சமூக முன்னேற்றக் குறிகாட்டி களின் அடிப்படையில் இந்தியாவின் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 707 மாவட்டங்களை இந்த அறிக்கை குறியீட்டின்படி தரவரிசைப்படுத்துகிறது.
அந்த அறிக்கையின் குறியீட்டின்படி, புதுவை நாட்டிலேயே அதிகபட்சமாக 65.99 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. சமூக முன்னேற்றத்தின் 3 பரிமாணங்களான அடிப்படை மனித தேவைகள், நல்வாழ்வின் அடித்தளங்கள் மற்றும் வாய்ப்புகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் செயல்திறனை மதிப்பி ட்டுள்ளது.
அறிக்கையின்படி, மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் புதுவை சுகாதாரம், குடிநீர் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றில் சிறந்த செயல்திறன் கொண்ட முதல் 4 மாநிலங்களில் ஒன்றாக வந்துள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்ததும், அரசின்
செயல்திறனும் இதற்கு முக்கிய காரணம். இது முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு கிடைத்த வெற்றி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதுவை-விழுப்புரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
- மின்துறை அலுவலகம் எதிரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதுவை-விழுப்புரம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
சாலையின் இருபுறமும் 'யு' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நடக்கிறது. அதில் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி.என். பாளையம் பஞ்சாயத்து தட்டாஞ்சாவடி மின்துறை அலுவலகம் எதிரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களை காலி செய்துவிட்டு வாய்க்கால் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.
எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர் சிவா அப்பகுதி மக்களுடன், தேசிய நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியத்தை அவரின் அலுவலகத்தில் சந்தித்தார். மின்துறை அலுவலகம் எதிரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே அப்பகுதியில் வசிக்கும் 18 குடும்பத்திற்கு பட்டா பெற்றுத்தந்த பின் காலி செய்ய வேண்டும், அதன்பின் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. ஆதிதிராவிடர் அணி மாநில துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், எழில்மாறன், தங்ககதிர்வேல், சந்தோஷ்குமார், மதிவதணன், முத்தழகன், தமிழ்வாணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பாகூர் குருவிநத்தம் பெரியார் நகரில் வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் அரிதாஸ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர். பாகூர் குருவிநத்தம் பெரியார் நகரில் வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- புதுவை கவுண்டன் பாளையத்தில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது.
- நிகழ்ச்சியில் மாண வர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி கிறிஸ்து பிறப்பு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையத்தில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தாகூர் நகர் பரிசுத்த ஆவி ஆலயத்தின் நிர்வாக தந்தை ஜான்சன் கலந்து கொண்டு பள்ளியில் புதிதாக செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலை ஆசீர்வதித்து மாணவர்க ளுக்கு கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாண வர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி கிறிஸ்து பிறப்பு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
- உணவகத்தில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
- சமையலறைக்கு வரும் எலிகளை பிடிக்க பாம்பு பின்புறம் உள்ள வாய்க்கால் வழியாக வந்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை எல்லைப்பில்ளை சாவடியில் எலும்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை உள்ளது.
இங்குள்ள உணவகத்தில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை கண்டு அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையிலிருந்து வந்த ஊழியர் கண்ணன் சமையல் அறை அருகே விளம்பர பேனர் பின்புறம் மறைந்திருந்த பாம்பை போராடி பிடித்தார். பெண் செவிலியர் பாம்பை பிடிக்க உதவினார். பிடிபட்டது 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பாகும்.
- மத்தியில் 1989-ல் பா.ஜனதா ஆட்சியில் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது.
- மாநில அந்தஸ்து பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கபட வேடம் போடுகின்றன.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் 1989-ல் பா.ஜனதா ஆட்சியில் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது மத்தியில் பா.ஜனதாஆட்சி உள்ளதால் மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசின் முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது பா.ஜனதாவின் கடமையாகும்.
மாநில அந்தஸ்து பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கபட வேடம் போடுகின்றன.
மாநில அந்தஸ்து என்பது நம் உரிமை பிரச்சனையாகும். அதில் தயவு செய்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம் தி.மு.க.வும், காங்கிரசும் போலித்தனமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றாமல் மாநில மக்களை நலனுக்காக அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே. சிங் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தற்போது எந்தவொரு அரசுக்கு சொந்தமான விநியோக உரிமையையும் தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை.
- ரூ.30 ஆயிரம் கோடி புதுவை மக்களின் சொத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு ஏஜெண்ட் வேலை செய்ய கூடாது.
புதுச்சேரி:
மார்க்சிஸ்ட்டு கம்யூனி ஸ்ட்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே. சிங் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தற்போது எந்தவொரு அரசுக்கு சொந்தமான விநியோக உரிமையையும் தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. அவை முந்தையதைப் போலவே செயல்படும் எந்தவொரு சொத்து அல்லது நெட்வொர்க்கின் உரிமையையும் மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி உள்ளார்.
மத்திய அரசே எந்த ஒரு மாநில மின் விநியோக த்துறையும் தனியார் மயமாக்க போவது இல்லை என்று அறிவித்துள்ள நிலையில் புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு உடனடியாக புதுவை மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
ரூ.30 ஆயிரம் கோடி புதுவை மக்களின் சொத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு ஏஜெண்ட் வேலை செய்ய கூடாது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக பல்வேறு பொய்களை நீதிமன்றத்தில் தெரிவித்து எப்படியாவது மின்துறையை விற்க வேண்டும் என்று செயல்ப டும் தலைமைச் செயலாளர், மின்துறை செயலர் மற்றும் சில மின்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.
- திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் 22 பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா ரூ. 3 லட்சம் வீதத்திற்கான ஆணையை வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி வழங்கினார்.
- இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் 22 பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா ரூ. 3 லட்சம் வீதத்திற்கான ஆணையை வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி வழங்கினார்.
இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிவாசகம், முருகன் பொறியாளர்கள் பாஸ்கர், சக்திவேல், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மோகனா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தி.மு.க. ஒன்றிய சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் ஹென்றிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்சிற்றம்பலம் ஊராட்சி செயலர் ஏழுமலை நன்றி கூறினார்.
- 14 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
- சிறுமியை அவரது பெற்றோர் புதுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சேதராப்பட்டு:
புதுவை லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தில் நரிக்குறவர்கள், பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் ஒரு சிலர் கூலி வேலைக்காகவும், தாங்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காகவும் வெளியூருக்கு சென்று அங்கேயே பல நாட்கள் தங்கி வருவது வழக்கம்.
இந்த நிலையில் கருவடிப்குப்பம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த விஜயகுமார் மகன் முத்தழகன் (வயது 23) மற்றும் அவரது உறவினர்கள் ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையத்தில் சாலையோரத்தில் தங்கி அங்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இவர்கள் தயாரித்த கழுத்தில் அணியும் மணி, பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். முத்தழகன் அங்குள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் அங்கு இருந்த 14 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறுமியை அவரது பெற்றோர் புதுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து புதுவை குழந்தைகள் நல ஆணையம் மூலம் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது ஓட்டல் ஊழியர் முத்தழகன் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






