என் மலர்
நீங்கள் தேடியது "Communist insistence"
- புதுவை மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட மொத்தம், சில்லறை விற்பனை மதுபான கடைகள் உள்ளன.
- இக்கடைகள் செயல்படுவதற்கான விதிமுறைகள் கலால் துறையின் மூலம் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட மொத்தம், சில்லறை விற்பனை மதுபான கடைகள் உள்ளன. இக்கடைகள் செயல்படுவதற்கான விதிமுறைகள் கலால் துறையின் மூலம் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
நெடுஞ்சாலைகள், வழி பாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகளில் மதுபான கடைகள் செயல் பட முடியாத நிலையில் விதிமுறைகள் இருந்தது.
தற்போது ஆளும் என். ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசாங்கம் மாநில மக்கள் நலனை பற்றி சிறிதும் சிந்திக்காமல் மதுபான கடை உரிமையாளர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு விதிமுறைகளை மாற்றியுள்ளது.
புதுவையின் அனைத்து சாலைகளிலும் ஏராளமான மதுக்கடைகள் உள்ள நிலையில் மேலும் 100 மதுபான கடைகளுக்கு புதியதாக உரிமம் வழங்கிடவும் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே ரெஸ்ட்டோ பார் மற்றும் டி.ஜே. நடனம் நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே புதிய மதுபான கடைகளை அனுமதிக்கும் செயலினை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான புதிய மதுபான கடைகளுக்கான அரசு உரிமங்களை வழங்க கூடாது. புதியதாக வழ ங்கிய உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே. சிங் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தற்போது எந்தவொரு அரசுக்கு சொந்தமான விநியோக உரிமையையும் தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை.
- ரூ.30 ஆயிரம் கோடி புதுவை மக்களின் சொத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு ஏஜெண்ட் வேலை செய்ய கூடாது.
புதுச்சேரி:
மார்க்சிஸ்ட்டு கம்யூனி ஸ்ட்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே. சிங் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தற்போது எந்தவொரு அரசுக்கு சொந்தமான விநியோக உரிமையையும் தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. அவை முந்தையதைப் போலவே செயல்படும் எந்தவொரு சொத்து அல்லது நெட்வொர்க்கின் உரிமையையும் மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி உள்ளார்.
மத்திய அரசே எந்த ஒரு மாநில மின் விநியோக த்துறையும் தனியார் மயமாக்க போவது இல்லை என்று அறிவித்துள்ள நிலையில் புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு உடனடியாக புதுவை மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
ரூ.30 ஆயிரம் கோடி புதுவை மக்களின் சொத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு ஏஜெண்ட் வேலை செய்ய கூடாது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக பல்வேறு பொய்களை நீதிமன்றத்தில் தெரிவித்து எப்படியாவது மின்துறையை விற்க வேண்டும் என்று செயல்ப டும் தலைமைச் செயலாளர், மின்துறை செயலர் மற்றும் சில மின்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.






