என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மத்தியில் 15 ஆண்டாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தி.மு.க. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தற்போது 2 கட்சிகளும் புதுவை மக்களிடையே நாடகமாடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் சட்ட விதிகளின்படி கவர்னரின் அதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்த சமயங்களில் மாநில வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

    ஆனால் வேறு, வேறு கட்சிகள் ஆட்சி செய்த போது அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகுவதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்படுகிறது. கவர்னர், முதல்-அமைச்சர் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது மாநில நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. ஜனநாயகமே கேள்விக்குறியாகிறது.

    இதை கருத்தில் கொண்டே 1998-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மாநில அந்தஸ்தை வலியுறுத்தினார். மத்திய அமைச்சரவையிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மாநில அந்தஸ்து கிடைப்பது முடக்கப்பட்டது.

    மத்தியில் 15 ஆண்டாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தி.மு.க. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது 2 கட்சிகளும் புதுவை மக்களிடையே நாடகமாடுகின்றனர். மக்கள் நலன், அதிகாரம், ஜனநாயகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை அவசியமாக உள்ளது.

    இதை வலியுறுத்தி மீண்டும் பலகட்ட போராட்டங்கள் நடைபெற தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) புதுவை மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் பந்த் போராட்டம் நடைபெறும். அ.தி.மு.க. சார்பில் கட்சிகளுக்கு போராட்டத்தை ஆதரிக்கக்கோரி அழைப்பு அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மழலையர் வகுப்பை சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் அணிந்த மாணவர் ஒருவர் மழலையர்களுக்கு பரிசுகளை அவர்களுக்குள் பரிமாறி கொடுத்து மகிழ்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மழலையர் வகுப்பை சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் குழந்தைகள், இயேசு கிறிஸ்துவை பற்றி பாடல்கள் பாடியும் அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆர்வத்தோடு படித்தும், முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தும், காட்டினர்.

    கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் அணிந்த மாணவர் ஒருவர் மழலையர்களுக்கு பரிசுகளை அவர்களுக்குள் பரிமாறி கொடுத்து மகிழ்ந்தார்.

    அப்பரிசு பொருட்களை பெற்ற மழலையர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆராவரத்துடனும் இருந்தனர்.அவ்வழகிய மழலை மலர்களை பள்ளியின் சார்பாக புகைப்படம் எடுக்கப்பட்டும், பரிசு வழங்கப்பட்டும், இனிப்புகள் வழங்கப்பட்டும் மகிழ்விக்கப்பட்டது.

    பல்வேறு வேடங்களை அணிந்து வந்து அவர்களின் திறமையை வெளிப்படுத்திய மழலையர்களுக்கு ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.விழாவில் குழந்தைகளின், பெற்றோர்களும் கலந்து ெகாண்டனர்.

    • வில்லியனூரை அடுத்த அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் பல்வேறு செயல் திட்டங்கள் மாணவர்களின் கை வண்ணங்களால் உருவாக்கப்பட்டு பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டது.
    • மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சி பார்வையிட்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் பல்வேறு செயல் திட்டங்கள் மாணவர்களின் கை வண்ணங்களால் உருவாக்கப்பட்டு பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டது.

    இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக சட்டம் ஒழுங்கு சீனியர் சூப்பிரண்டு தீபிகா, கல்கி கெமிக்கல்ஸ் இயக்குனரும், யங் இந்தியா அமைப்பின் தலைவருமான திலீப், அனிருத்தா, ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை பார்வையிட்டனர்.

    பள்ளியின் தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன், பள்ளி முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் தலைமை தாங்கினர். இந்த கண்காட்சியில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலயன், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சி பார்வையிட்டனர்.

    • தவளக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.
    • ஜல்லி போடுவதற்கு முன்பாக அவர் மாடிக்கு சென்று அந்த இடத்தினை பார்வையிட்டுக்கொண்டி ருந்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.

    புதுவை-தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் 4 முனை ரோட்டில் முரளி என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் முதல்மாடி தளத்துக்கு இன்று காலை ஜல்லி போடும் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கட்டிட தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அதுபோல் இந்த பணிக்கு புதுவை ஒட்டம் பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பலராமன் (வயது52) என்பவர் வந்திருந்தார்.

    ஜல்லி போடுவதற்கு முன்பாக அவர் மாடிக்கு சென்று அந்த இடத்தினை பார்வையிட்டுக்கொண்டி ருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் பலராமனின் கை உரசியதாக தெரிகிறது.

    இதனால் மின்சாரம் தாக்கியதில் பலராமன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இப்பகுதியில் உயர்மின்னழுத்த கம்பி குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்வதால் பாதிப்பு இல்லாத வகையில் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை மின்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டும், அதனை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் இந்த சம்பவம் நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • புதுவை மக்கள் தமிழ்சங்கம் சார்பில் மாநில அந்தஸ்து கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.
    • புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அனுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் தமிழ்சங்கம் சார்பில் மாநில அந்தஸ்து கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு சிவசர வணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் செல்வமணி, ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ஜெயமுருகேசன், நிர்வாகிகள் கணேசன், முருகன், ஆறுமுகம், குமரன், முருகானந்தம், செல்வகுமார், ராஜ்குமார், செழியன், பிரபா, தேவேந்திரன், லட்சுமணன், புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை தபால்நிலையத்தில் ஜனாதிபதிக்கு நிர்வாகிகள், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அனுப்பினர்.

    • பூட்டை 2 பேர் உடைத்து மோட்டார் சைக்கிளை திருட முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
    • திருடர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

    புதுச்சேரி:

    கடலூர் ரெட்டிச்சாவடி கரிக்கன்நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 24) இவர் உருளையன்பேட்டை முருகன் கோவில் வீதியில் தங்கி சைன்போர்ட் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல வேலை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

    அதிகாலை 12.30 மணிக்கு வாசலில் ஏதோ உடைப்பது போல சத்தம் கேட்டது. உடனே அவர் எழுந்து வெளியில் சென்று பார்த்தபோது பூட்டை 2 பேர் உடைத்து மோட்டார் சைக்கிளை திருட முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் திருடன் திருடன் என சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் எழுந்து ஓடிவந்தனர்.

    உடனே திருடர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து திருடர்கள் 2 பேரையும்பொதுமக்களிடமிருந்து மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    விசாரணையில், அவர்கள் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அரவிந்தசாமி (வயது19), அரிகரசுதன் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் திருட பயன்படுத்திய ஸ்குருடிரைவர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர்.
    • மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபமாக பலமாக எழுந்துள்ளது.

    அரசியல் கட்சிகளிடையே இதுதொடர்பாக நாள்தோறும் விவாதமும் நடந்து வருகிறது. சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில், மாநில அந்தஸ்து வேண்டும் என்ற குரலை உயர்த்தியுள்ளனர்.

    இந்நிலையில் புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அந்த பக்தர்கள் கோவிலின் 18-ம் படிக்கு கீழே புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு பேனரை பிடித்துள்ளனர்.

    இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த பேனரில், புதுவை மக்கள் சுயமரியாதையை காக்க மாநில அந்தஸ்து வேண்டும். இது புதுவை மக்களின் குரல் என குறிப்பிட்டுள்ளனர்.

    மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பாராளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அதை விடுத்து கோவில் முன்பு பேனர் பிடிப்பதால் மாநில அந்தஸ்து கிடைத்துவிடுமா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.

    • பிரிண்டர் மிஷின் ராணுவ தளமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது. மற்ற எல்க்ட்ரானிக் கழிவு பொருட்களை கொண்டு குடிலின் மற்ற பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.
    • கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல் கையில் செல்போனுடன், ஹெட்போனில் பாடல் கேட்பது போல் தத்துரூபமாக செய்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம், உப்புகார வீதியில் வசிப்பவர் சுந்தரராசு. அரசு பள்ளி ஆசிரியர். இவர் ஆண்டுதோறும் விதவிதமான பொருட்களை கொண்டு தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது வழக்கம்.

    ஆசிரியர் சுந்தரராசு ஒரு கன செ.மீட்டரில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை விருது பெற்றவர். காய்கறி, பிளாஸ்டிக் பாட்டில்கள் தேங்காய், 25 வகையான சிறு தானியம், 700 புத்தகங்கள், 1000 துணி பைகள், நொறுக்கு தீணிகள், டிஸ்போசல் சிரிஜ் ஊசி ஆகியவற்றை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் குடில் வடிவமைத்து உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து தற்போது 10-வது ஆண்டாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வித்தியாசமான முறையில் கம்ப்யூட்டர் மற்றும் பழுதான மின்னணு பொருட்களை கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

    அதில் கம்யூட்டர் மற்றும் பழைய மானிட்டர் டூம் பகுதியை குடில் தொழுவாகவும், ஹார்டு டிஸ்க்கு, கேமிரா பென்ட்ரைவ், டேப், எல்.சி.டி மானிட்டர், லேப்டாப், இன்டர்நெட் மோடம், ஸ்கேனர் மற்றும் மதர் போர்டுகளை கொண்டு சிட்டி பில்டிங், சி.டி.யை கிறிஸ்துமஸ் மரமாக உருவாக்கியுள்ளார்.

    பிரிண்டர் மிஷின் ராணுவ தளமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது. மற்ற எல்க்ட்ரானிக் கழிவு பொருட்களை கொண்டு குடிலின் மற்ற பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல் கையில் செல்போனுடன், ஹெட்போனில் பாடல் கேட்பது போல் தத்துரூபமாக செய்துள்ளார்.

    இந்தியா அனைத்தும் டிஜிட்டல் மையமாக திகழும் இந்த சூழலில் அவற்றை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் இந்த கிறிஸ்துமஸ் குடில் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர் சுந்தரராசு தெரிவித்தார்.

    இந்த விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடிலை இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என அனைத்து மதத்தை சார்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ஆசிரியர் சுந்தரராசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வட்டம் -3 சார்பில் மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சுபமங்களா மஹாலில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வட்டம் -3 சார்பில் மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சுபமங்களா மஹாலில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்காக நடைபெற்ற மாறுவேட போட்டி மற்றும் ஆரோக்கிய குழந்தை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை திட்ட அதிகாரி கிளாரா, மாநில பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தாய்மார்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • தென்மாநில அளவிலான சிவப்பு நாடா மன்றங்களின் வினாடி-வினா போட்டி புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் ஜெயராம் ஓட்டலில் நடந்தது.
    • தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாட்டு நிறுவனத்தின் தகவல் தொடர்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் ஜோதிகா சீமா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    தென்மாநில அளவிலான சிவப்பு நாடா மன்றங்களின் வினாடி-வினா போட்டி புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் ஜெயராம் ஓட்டலில் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா,தெ லுங்கானா, அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் பங்கு பெற்றன.

    போட்டிகளை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் சித்ரா தேவி, தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாட்டு நிறுவனத்தின் தகவல் ெதாடர்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் ஜோதிகா சீமா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் 65 புள்ளிகளுடன் புதுவை முதல் இடத்தை பிடித்தது. புதுவை அணி சார்பில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவி ஹர்ஷிதா, வில்லியனூர் கஸ்தூரிபாய் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மணி ராஜஸ்ரீ ஆகியோர் முதல் பரிசை வென்று புதுவைக்கு பெருமை சேர்த்தனர். 2-வது இடத்தை அந்தமான் நிகோபர் அணியும், 3-வது இடத்தை ஆந்திராவும், 4-வது இடத்தை கோவாவும் பிடித்தன.

    போட்டிக்கான ஏற்பாடுகளை புதுவை எய்ட்ஸ் கட் டுப்பாட்டு சங்கத்தின் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குனர் சேதுராமன், உதவியாளர் சைமன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையின் டாக்டர் சவுந்தர்யா நன்றி கூறினார்.

    • உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் மனு அளித்தார்.
    • மேலும் உப்பளம் மெயின் ரோட்டில் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் இருந்து பிரான்சுவா தோப்பிற்கு குடிநீர் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் மனு அளித்தார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    உப்பளம் தொகுதியில் பிரான்சுவா தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, முருகசாமி நகர், ஜெகநாதர் படையாச்சி வீதி, நாராயணசாமி வீதி, என்ஜினீயர் தோட்டம், நேரு வீதி, அன்னை இந்திரா நகர், பல்லவன் வீதி, எல்லையம்மன் கோவில் தோப்பு, ஆட்டுப்பட்டி, ரோடியர் பேட், தாமரை நகர், தமிழ்த்தாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதற்காக வாணரப்பேட்டை, தாவரவியல் பூங்கா, தாமரை நகரில் ஆழ் துளை கிணறு அமைக்க வேண்டும்.

    மேலும் உப்பளம் மெயின் ரோட்டில் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் இருந்து பிரான்சுவா தோப்பிற்கு குடிநீர் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார். அப்போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி ராஜி, மீனவர் அணி விநாயகம், சகாயம், ராகேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர். 

    • தேசிய வினாடி வினா போட்டியில் வென்ற புதுவை அமலோற்பவம் பள்ளி மாணவன் பூவராகவனை, முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.
    • இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களில் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கடந்த 17-ந் தேதி மும்பையில் நடந்த விவோ புரோ கபடி லீக் இறுதி போட்டியை இலவசமாக நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தேசிய வினாடி வினா போட்டியில் வென்ற புதுவை அமலோற்பவம் பள்ளி மாணவன் பூவராகவனை, முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.

    பிட் இந்தியா இயக்கம், விவோ புரோ கபடி லீக் இணைந்து தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டியை கடந்த 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடந்தியது.

    இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களில் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கடந்த 17-ந் தேதி மும்பையில் நடந்த விவோ புரோ கபடி லீக் இறுதி போட்டியை இலவசமாக நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்ற இந்த வினாடி வினா போட்டியில் புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவன் பூவராகவன் வெற்றியாளராக ேதர்வாகி கடந்த 17-ந் தேதி மும்பையில் நடந்த விவோ புரோ கபடி லீக் இறுதி போட்டியை குஜராத், ஒடிசா, பஞ்சாப், மத்திய பிரேதச வெற்றி வீரர்களோடு சேர்ந்து கண்டுகளித்தார்.

    மாணவர் உடன் பள்ளி ஆசிரியர் ராகுலும் போட்டியை கண்டுகளிக்கும் வாய்ப்பு பெற்றார். தேசிய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் பூவராகவனை அமலோற்பவம் பள்ளியின் முதுநிலை முதல்வா லூர்துசாமி வாழ்த்தி பாராட்டினார்.

    ×