என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • உப்பளம் தொகுதிகுட்பட்ட வம்பா கீரப்பாளையம்-திப்புராயப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் பாதாள வடிகால் வாய்க்காலில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி இருந்தது.
    • பாதாள வடிகால் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்ட கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிகுட்பட்ட வம்பா கீரப்பாளையம்-திப்புராயப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் பாதாள வடிகால் வாய்க்காலில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி இருந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிபால் கென்னடி சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை பாதாள வடிகால் பிரிவு அதிகாரிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு கழிவு நீரை அகற்ற கேட்டுக்கொண்டார். இதன்படி பொதுப்பணி த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து வாகனம் மூலம் கழிவுநீரை அப்புறப்படுத்தினர்.

    பாதாள வடிகால் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்ட கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. கிளைச்செயலாளார் மணிகண்டன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் நோயல், ராகேஷ், கவுதமன், ஈசாக், செல்லப்பன், குணசீலன், பாலாஜி, ரகுமான், ஆகியோர் உடனிருந்தனர்.

    • கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் 149-வது ஆராதனை விழா மற்றும் யோகமகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குருமகராஜின் 29-வது ஆராதனை விழா தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில் நடைப்பெற்றது.
    • நிகழ்ச்சியில் புலவர் பட்டாபிராமன் , ஜெகதீசன், காரைக்கால் மேலவாஞ்சூர் ரெங்கையாமடம் தமிழினியன் சாமிகள் காளிதாசன், ராஜேந்திரன், ஜோதிர்மை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    புதுச்சேரி:

    கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் 149-வது ஆராதனை விழா மற்றும் யோகமகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குருமகராஜின் 29-வது ஆராதனை விழா தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில் நடைப்பெற்றது.

    காலை 6 மணிக்கு மடத்தில் கொடியுடன் வலம் வந்து கொடி ஏற்றமும் அதனை தொடர்ந்து பக்தி பாடல்கள் அபிஷேகம் சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் கம்பளி சுவாமி மடத்தின் மடாதிபதி டாக்டர் ஆனந்த பால யோகி கிரி தீபாராதனை செய்தார்.

    சமபந்தி விருந்து நடைப்பெற்றது. 3000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.நிகழ்ச்சியில் புலவர் பட்டாபிராமன் , ஜெகதீசன், காரைக்கால் மேலவாஞ்சூர் ரெங்கையாமடம் தமிழினியன் சாமிகள் காளிதாசன், ராஜேந்திரன், ஜோதிர்மை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை டாக்டர் ஆனந்த பால யோகி கிரி தலைமையில் சண்முகம், கஜேந்திரன், செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • மாநில அந்தஸ்து விவகாரம் பல ஆண்டு பிரச்சினை..
    • மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது.

    புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கேக் வெட்டினார்கள். பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 




    புதுச்சேரி வளர்ச்சி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு நல்ல நிர்வாகம், நல்ல ஆட்சி நடப்பதுதான் காரணம். எனவே ஒன்றும் நடக்கவில்லை என்பதெல்லாம் உண்மை அல்ல. முதலமைச்சருடன் சுகாதார மேம்பாட்டுக்காக ஆலோசனை நடத்தியுள்ளேன். கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்து குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. ஏழை மாணவர்களின் நிலை உயர இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் நசுக்கப்படும் என்பதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலும் தமிழ் படிக்கலாம். கடந்த 10 வருடமாக தமிழை ஏன் கட்டாய பாடமாக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 


    மாநில அந்தஸ்து விவகாரத்தில் எம்.பி.யாக இருந்தவர்கள் எல்லாம் பாராளுமன்றத்தில் இதற்காக எத்தனை முறை பேசினார்கள்? புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாநில அந்தஸ்து விவகாரம் பல ஆண்டு பிரச்சினை. அதை உடனடியாக செய்ய முடியாது.

    அதற்காக பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும். அங்கு அனுமதிபெறவேண்டும். இது அரசியலுக்காக சொல்லப்படுகிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது. நாங்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறோம். ஆனால் நான் சார்ந்த தமிழகத்தின் முதலமைச்சர் இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார் என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாகூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் பாகூர் மூலநாதர் சிவன் கோவில் மற்றும் ஏழை மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.
    • இதில் தொகுதி தலைவர் கண்ணன், மாநில வக்கீல்கள் பிரிவு துணைத் தலைவர் ராமலிங்கம், வார்டு செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் பாகூர் மூலநாதர் சிவன் கோவில் மற்றும் ஏழை மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் நடேசன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தொகுதி தலைவர் கண்ணன், மாநில வக்கீல்கள் பிரிவு துணைத் தலைவர் ராமலிங்கம், வார்டு செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொகுதி நிர்வாகிகள் குணசேகரன், உமாநாத், சிவகுமார், திருவேங்கடம், மாரிமுத்து, ராமச்சந்திரன், காசிநாதன், மாசிலாமணி, ஜெகதீசன், செல்வம், அனந்தராமன், வேலாயுதம், அன்பரசன், குருமூர்த்தி, பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

    முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ராஜராஜன் நன்றி கூறினார்.

    • புதுவை தவளக்குப்பத்தில் உள்ள பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக விவசாயிகள் தினம், 6-ம் ஆண்டு கல்லூரி தொடக்க விழா மற்றும் மாணவர்கள் பயிற்சி பண்ணை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    • விழாவில் முதல்-அமைச்சர் பேசும் போது வரும் காலங்களில் மாணவர்கள் விவசாயத் துறையில் சாதனை படைத்து, ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பத்தில் உள்ள பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக விவசாயிகள் தினம், 6-ம் ஆண்டு கல்லூரி தொடக்க விழா மற்றும் மாணவர்கள் பயிற்சி பண்ணை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் அக்ரி கணேஷ் நோக்கு உரைஆற்றினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் பேசும் போது வரும் காலங்களில் மாணவர்கள் விவசாயத் துறையில் சாதனை படைத்து, ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் காரைக்கால் பஜன் கோ வேளாண் கல்லூரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார் .

    மேலும் கல்லூரியின் முந்தைய ஆண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசளித்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் மணிகண்டன், ஜெயசவிதா மோனிகா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் கல்லூரியின் உதவி பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • புதுவை அரசு பொதுப்பணித்துறை சார்பில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ4. 47 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடந்தது.
    • இந்த நிலையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். இந்த புகாருக்கான விளக்கம் சில தினங்களுக்கு முன்பு கிடைத்தது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பொதுப்பணித்துறை சார்பில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ4. 47 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியில் முறைகோடு நடந்தாக கூறப்படுகிறது.

    இது பற்றி கரிக்கலாம்பாக்கம்,-மடுகரை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜீஸ் கடை உரிமையாளரும் சமூக ஆர்வலருமான தணிகாசலம் என்பவர். அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தார். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். இந்த புகாருக்கான விளக்கம் சில தினங்களுக்கு முன்பு கிடைத்தது. ஆனால் அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

    தரமற்ற சாலை போட்டதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தணிகாசலம் இன்று காலை கரிக்கலாம்பாக்கம் 4 முனை சந்திப்பில் தனது சொந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி கொளுத்தி போராட்டம் நடத்தினார்.

    பலரும் இந்த வாகனம் எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்த கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோட்டார் சைக்கிள் எரித்த தமிழ்வாணனை கைது செய்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேடு நடந்ததை மக்களுக்கு வெளிப்படுத்திய தணிகாசலத்தை கைது செய்ததற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மதுக்கடையை சூறையாடியது, ஊழியர்களிடம் தகராறு செய்தது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • மதுக்கடை ஊழியர்களை தாக்கிய காயப்படுத்திய விநாயகம் என்ற சங்கர் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டையில் ஏழை மாரியம்மன் கோவில் அருகே புதிதாக ரேஸ்டோபார் பப்பு நடனத்துடன் கூடிய பார் திறக்க புதுவை கலால்துறை அனுமதி வழங்கி இருந்தது.

    இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மதுபாரை திறப்பதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் வந்ததும் அப்பகுதி பெண்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மதுக்கடை உடைத்து அங்கிருந்த பொருட்களை உருட்டு கட்டையால் அடித்து உடைத்து நொறுக்கினர்.

    இதனை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் நடுரோட்டில் அமர்ந்து நடுரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனும் போராட்டத்தில் பங்கேற்றார்.

    இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனிடமும், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதிய மதுக்கடை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் மதுக்கடையை சூறையாடியது, ஊழியர்களிடம் தகராறு செய்தது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் மதுக்கடை ஊழியர்களை தாக்கிய காயப்படுத்திய விநாயகம் என்ற சங்கர் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • காலாப்பட்டு அருகே பல் வலியால் அவதியடைந்ததால் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமிக்கு பல் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாலில் எலி மருந்து கலந்து குடித்து விட்டார்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு அருகே பல் வலியால் அவதியடைந்ததால் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    காலாப்பட்டு அருகே பிள்ளைசாவடி தெருக்குளம் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (வயது32). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். முருகன் கடப்பாக்கத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக லட்சுமி பல்வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பல்வலி முற்றிலுமாக குணமாகவில்லை. அடிக்கடி பல் வலி ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமிக்கு பல் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாலில் எலி மருந்து கலந்து குடித்து விட்டார்.

    பின்னர் இதுபற்றி அதே பகுதியில் வசிக்கும் தனது தந்தை கோவிந்தசாமிக்கு எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதை போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே அவரது தந்தை கோவிந்தசாமி விரைந்து வந்து மயங்கி கிடந்த லட்சுமியை அவரது தாய் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு லட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால், பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பொது சுகாதாரத் தயார்நிலை, உலகளாவிய சூழ்நிலை மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டாவியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
    • மத்திய அரசு காட்டும் அனைத்து வழிமுறை களையும் புதுவை அரசு பின்பற்றும். புதுவையில் கொரோனா பரிசோ தனைகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால், பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பொது சுகாதாரத் தயார்நிலை, உலகளாவிய சூழ்நிலை மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டாவியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனை கூட்டத்தில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ. அரசுச் செயலர் உதயகுமார், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடனிருந்தனர்.

    கூட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப் படுத்துவது, மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது படுக்கை மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டன.

    பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகிய கோவிட்-19 தடுப்பு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற அறிவுறுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

    கூட்டத்தில், கோவிட் பரவலை எதிர்கொள்ள புதுவை அரசு அனைத்து நிலைகளிலும் தயார்நி லையில் உள்ளதாகவும், கோவிட் மருத்துவமனை போதிய அனைத்து வசதிகளுடன் உள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்க ப்பட்டது.

    மத்திய அரசு காட்டும் அனைத்து வழிமுறை களையும் புதுவை அரசு பின்பற்றும். புதுவையில் கொரோனா பரிசோ தனைகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதுவையில் 3 ஆயிரத்து 620 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த கூடுதலாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை. அதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    கொரோனா வைரசை கண்டறிவதற்கான பரிசோ தனைக் கூடம் புதுவையில் வருகிற 28-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கப்பட உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதன்படி இந்திரகாந்தி அரசு மருத்துவக் கல்லூ ரியில் ரூ.3 ½கோடியில் உருமாறிய கொரோனா வைரசை கண்டறியும் அதிநவீன கருவிகளுடன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு நுண்கிருமியை துல்லியமாக அறிந்து அதன் இயல்புகளை கண்டறியலாம். இதற்காக டாகடர்கள், தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

    • உப்பளம் தொகுதி அவ்வை நகரில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த குழந்தைகளுக்கும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசு-இனிப்புகள் வழங்கினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி அவ்வை நகரில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த குழந்தைகளுக்கும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசு-இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க ஆதிதிராவிட பிரிவு துணை அமைப்பளர் தங்க வேலு, ஊர் தலைவர் அரிகிருஷ்ணன், ஆட்டோ சங்க தலைவர் மிஷேல், லாரன்ஸ், ரகுமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-
    • கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-

    கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.

    கொள்முதல் மையங்கள் உணவு தானியங்களை விலைக்கு வாங்கும்பொழுது இழப்பு விகிதம் அதிகமாக இருப்பது ஒரு கவலைக்குரிய செய்தி ஆகும். துரதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மழைக் காலங்களில் ஆயிரக்கணக்கில் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்தவெளியில் குவிக்கப் பட்டுள்ளன.

    கொள்முதல் மையங்களில் குறைந்த செலவில் கொட்டகைகளை நிறுவுவதன் மூலம் இத்தகைய இழப்பை எளிதில் தவிர்க்கலாம். இதன் மூலம் அரசுக்கு அதிக நிதிச்சுமை இல்லாமல் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும்.

    எனவே,கொள்முதல் மையங்களில் சேமிப்பு வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு மூலம் கிடங்குகளையும் குளிர்பதனக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • தவளக்குப்பம், நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா, கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக மரிய அந்தோணி ராஜ், ஜார்ஜ் பெர்னாண்டோ, ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம், நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா, கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் மேலாண் இயக்குனர் கிரண்குமார் தலைமை தாங்கி கிறிஸ்துமஸ் குறித்து சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் எழிலரசி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மரிய அந்தோணி ராஜ், ஜார்ஜ் பெர்னாண்டோ, ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, பள்ளியில், கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆசிரியைகள் ரோமினா, அருணா கிறிஸ்து பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தனர். இதில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் தலைமை ஆசிரியர் உமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    ×