என் மலர்
புதுச்சேரி

கம்பளி சாமி மடத்தில் குரு பூஜை விழா நடந்த போது எடுத்த படம்.
குரு பூஜை விழா
- கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் 149-வது ஆராதனை விழா மற்றும் யோகமகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குருமகராஜின் 29-வது ஆராதனை விழா தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில் நடைப்பெற்றது.
- நிகழ்ச்சியில் புலவர் பட்டாபிராமன் , ஜெகதீசன், காரைக்கால் மேலவாஞ்சூர் ரெங்கையாமடம் தமிழினியன் சாமிகள் காளிதாசன், ராஜேந்திரன், ஜோதிர்மை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
புதுச்சேரி:
கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் 149-வது ஆராதனை விழா மற்றும் யோகமகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குருமகராஜின் 29-வது ஆராதனை விழா தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில் நடைப்பெற்றது.
காலை 6 மணிக்கு மடத்தில் கொடியுடன் வலம் வந்து கொடி ஏற்றமும் அதனை தொடர்ந்து பக்தி பாடல்கள் அபிஷேகம் சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் கம்பளி சுவாமி மடத்தின் மடாதிபதி டாக்டர் ஆனந்த பால யோகி கிரி தீபாராதனை செய்தார்.
சமபந்தி விருந்து நடைப்பெற்றது. 3000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.நிகழ்ச்சியில் புலவர் பட்டாபிராமன் , ஜெகதீசன், காரைக்கால் மேலவாஞ்சூர் ரெங்கையாமடம் தமிழினியன் சாமிகள் காளிதாசன், ராஜேந்திரன், ஜோதிர்மை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை டாக்டர் ஆனந்த பால யோகி கிரி தலைமையில் சண்முகம், கஜேந்திரன், செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.






