என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எலி மருந்து தின்று பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    எலி மருந்து தின்று பெண் தற்கொலை

    • காலாப்பட்டு அருகே பல் வலியால் அவதியடைந்ததால் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமிக்கு பல் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாலில் எலி மருந்து கலந்து குடித்து விட்டார்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு அருகே பல் வலியால் அவதியடைந்ததால் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    காலாப்பட்டு அருகே பிள்ளைசாவடி தெருக்குளம் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (வயது32). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். முருகன் கடப்பாக்கத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக லட்சுமி பல்வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பல்வலி முற்றிலுமாக குணமாகவில்லை. அடிக்கடி பல் வலி ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமிக்கு பல் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாலில் எலி மருந்து கலந்து குடித்து விட்டார்.

    பின்னர் இதுபற்றி அதே பகுதியில் வசிக்கும் தனது தந்தை கோவிந்தசாமிக்கு எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதை போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே அவரது தந்தை கோவிந்தசாமி விரைந்து வந்து மயங்கி கிடந்த லட்சுமியை அவரது தாய் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு லட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×