search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rat medicine"

    • காலாப்பட்டு அருகே பல் வலியால் அவதியடைந்ததால் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமிக்கு பல் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாலில் எலி மருந்து கலந்து குடித்து விட்டார்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு அருகே பல் வலியால் அவதியடைந்ததால் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    காலாப்பட்டு அருகே பிள்ளைசாவடி தெருக்குளம் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (வயது32). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். முருகன் கடப்பாக்கத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக லட்சுமி பல்வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பல்வலி முற்றிலுமாக குணமாகவில்லை. அடிக்கடி பல் வலி ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமிக்கு பல் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாலில் எலி மருந்து கலந்து குடித்து விட்டார்.

    பின்னர் இதுபற்றி அதே பகுதியில் வசிக்கும் தனது தந்தை கோவிந்தசாமிக்கு எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதை போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே அவரது தந்தை கோவிந்தசாமி விரைந்து வந்து மயங்கி கிடந்த லட்சுமியை அவரது தாய் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு லட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவாணர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (வயது 23). இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் இருந்த அசோக் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

    இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    வில்லியனூரில் குடும்ப தகராறில் இளம்பெண் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் தெற்குமாட வீதியை சேர்ந்தவர் கண்ணப்பன் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காயத்திரி (வயது22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவிக்கிடேயே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த காயத்திரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலிமருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கதினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை காயத்திரி பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலய்யன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி கண்ணதாசன் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது56), டெய்லர். இவருக்கு அஞ்சலாட்சி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

    இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கத்தினால் ஆறுமுகத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நோய் கொடுமை அதிகமானதால் விரக்தி அடைந்த ஆறுமுகம் வீட்டில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் ஏட்டு சக்திமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வீராம்பட்டினத்தில் எலி மருந்து தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வீராம்பட்டினம் சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆனந்து. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி செவ்வந்தி (வயது 24) இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. இதற்கிடையே செவ்வந்தி ஒற்றை தலைவலியால் அவதி அடைந்து வந்தார். மருந்து- மாத்திரை சாப்பிட்டும் நோய் குணமாகவில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று செவ்வந்திக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செவ்வந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி பேஸ்டை (வி‌ஷம்) தின்று விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த செவ்வந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை செவ்வந்தி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×