திருவெண்ணைநல்லூர் அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை

அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
திருவெண்ணைநல்லூர் அருகே  விஷம் தின்று வாலிபர் தற்கொலை
Published on

விழுப்புரம்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவாணர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (வயது 23). இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் இருந்த அசோக் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com