என் மலர்
புதுச்சேரி
- பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் வாஜ்பாய் பிறந்த தினம், மனதின் குரல் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- விழாவில் மடுவு பேட்டை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி பட்டியல் அணியின் சார்பில் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் வாஜ்பாய் பிறந்த தினம், மனதின் குரல் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மடுவுபேட்டில் நடந்த நிகழ்ச்சியில் கட்சிக்கு பா.ஜனதாவின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவர் நிகழ்ச்சியில் வாஜ் பாய் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி. மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மடுவு பேட்டை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி பட்டியல் அணியின் சார்பில் வழங்கப்பட்டது.
பிறகு மடுகுபேட்டில் சமபந்தி விருந்து நடத்தப்பட்டது. இதில் மாநில தலைவர் சாமிநாதன், பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன், மாநில மீடியா பொறுப்பாளர் குருசங்கர்,பட்டியல் அ ணியின் பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில துணைத்தலைவர் எஸ்.கே.சி. கஜேந்திரன், சுப்பிரமணி, ராஜேஸ்வரி, சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள்குமார், மடுகுப்பை பகுதியின் முக்கிய பொறுப்பாளர் விஜய், பூபதி கலந்து கொண்டனர்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் போது லாஸ்பேட் மண்டல தலைவர் சோமசுந்தரம் பொறுப்பாளர் தண்டபாணி மகளிர் அணி, மாநில பொதுச் செயலாளர் கனகவல்லி குமார் பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுவை மண்ணாடிப் பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம்பேட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு வழங்கிய இலவச மனைப்பட்டாவில் வசித்து வருகின்றனர்.
- போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை.
புதுச்சேரி:
புதுவை மண்ணாடிப் பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம்பேட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு வழங்கிய இலவச மனைப்பட்டாவில் வசித்து வருகின்றனர்.
சுமார் 60 ஆண்டுக்கும் மேலாக வசித்து வரும் இவர்கள் ஒரே வீட்டில் பல குடும்ப உறவினர்கள் வசித்து வருவதால் இட நெருக்கடியால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் புதிதாக பாட்கோ மூலம் வேறு மாற்று இடத்தில் கூடுதலாக இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் திடீரென இன்று காலை சந்தைபுதுக்குப்பம்- மயிலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். சாலையிலேயே அடுப்பு அமைத்து கஞ்சி காய்ச்சி குடித்தனர்.
போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, இதுவரை 4
எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து இலவச மனைப் பட்டா கோரி வருகிறோம்.
எங்கள் கோரிக்கையை யாரும் நிறைவேற்றவில்லை. மாற்றுஇடத்தில் குடும்பத்தினருக்கு மனைப்பட்டா வழங்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த சாலை வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றன.
- ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பெண்கள்-குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 200பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.
- விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை பொருளாளர் விஜயராஜா செய்திருந்தார்.
புதுச்சேரி:
வ. உ. சி. முன்னாள் மாணவர்கள் மனித நேய அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பெண்கள்-குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 200பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சீதாராமன் மற்றும் பிரதீப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரியாணி வழங்கினார்கள். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை பொருளாளர் விஜயராஜா செய்திருந்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் பெரியசாமி, மணவாளன், முருகன் கலந்து கொண்டனர்.
- தவளக்குப்பத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
- இதனால் பிரச்சினை ஏற்படும் என கருதி வினோத் தனது நண்பருடன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் வினோத்தும் இளந்தமிழனும் மடுகரை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் புதுநகரை சேர்ந்தவர் வினோத் (வயது28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வினோத் தவளக்குப்பத்தில் உள்ள ஒரு மதுக்கடைக்கு தனது நண்பர் இளந்தமிழன் என்பவருடன் மது குடிக்க சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே சண்முகம் அவரது நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தார். வினோத்தும், இளந்தமிழனும் மது குடித்து கொண்டிருந்த போது அவர்களை பார்த்து சண்முகம் முறைத்து பார்த்து திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பிரச்சினை ஏற்படும் என கருதி வினோத் தனது நண்பருடன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் வினோத்தும் இளந்தமிழனும் மடுகரை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அங்குள்ள மதுக்கடை அருகே வந்த போது அவர்களை சண்முகம் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் வழி மறித்தனர்.
பின்னர் சண்முகமும், அவரது நண்பர்களும் தகாத வார்த்தைகளால் திட்டி வினோத்தையும், இளந்தமிழனையும் தடியாலும், கல்லாலும் தாக்கினர். மேலும் பீர் பாட்டிலாலும் குத்தினர். அதோடு 2 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
மேலும் வினோத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு வரவே சண்முகம் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வினோத் மற்றும் அவரது நண்பர் இளந்தமிழன் ஆகிய இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து வினோத் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பா.ஜனதா ஓ.பி.சி. அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
- பேரணி பழைய பஸ் நிலையம், ராஜா தியேட்டர், நேரு வீதி, மிஷின் வீதி வழியாக எம்.ஜி.ஆர். சாலை, முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே முடிவடைந்தது.
புதுச்சேரி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பா.ஜனதா ஓ.பி.சி. அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை யொட்டி புதுவை மாநில பா.ஜனதா ஓ.பி.சி. அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் தொடங்கி இப்பேரணிக்கு ஓ.பி.சி. அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொது செயலாளர் மோகன்குமார் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்து அவர்களும் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணி பழைய பஸ் நிலையம், ராஜா தியேட்டர், நேரு வீதி, மிஷின் வீதி வழியாக எம்.ஜி.ஆர். சாலை, முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே முடிவடைந்தது.
அப்போது ஓ.பி.சி. அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் பேசும் போது,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டிக்கு செய்த பணிகள் பற்றியும், அதே வழியில் தற்போதைய பிரதமர் மோடி செய்யும் மக்களுக்கான திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறினார்.
நிர்வாகிகள் சரவணக்குமார், கிருஷ்ண ராஜ், வேல்முருகன், ராமஜெயம், பாலபாஸ்கர், சதாசிவம், சீனிவாசன், செல்வராஜ், பிரியா, லட்சுமி, பிரபாகர், சுந்தரமூர்த்தி, ஆறுமுகம், ஆனந்த், சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
பேரணியில் ஓ.பி.சி. அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் பேசிய போது எடுத்தபடம்.
- புதுவையில் வருகிற 28-ந் தேதி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
- கிறிஸ்துமஸ் தொடங்கி ஆங்கில புத்தாண்டு வரை பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுவையில் தங்குவதற்கு தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் வருகிற 28-ந் தேதி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இது வரை 11 முறை புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.
புதுவை முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பியுள்ள ஒரு யூனியன் பிரதேசம். புத்தாண்டு கொண்டா ட்டத்திற்கு ஏற்ற இடம் எது என்ற தேடலில் புதுவை மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி ஒவ்வொரு புதுவை வாழ் மக்களும் புதுவையை பற்றி பெருமை கொள்ளும் வகையில் உள்ளது.
கிறிஸ்துமஸ் தொடங்கி ஆங்கில புத்தாண்டு வரை பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுவையில் தங்குவதற்கு தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளனர்.
தற்போது அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ள திடீர் பந்த் போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் வேறு மாநிலத்திற்கு செல்ல க்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு பல ஏற்பாடு களை செய்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கின்றது.
நமது மாநிலத்தைநோக்கி வருபவர்கள், ஒரு சிலரின் சுய அரசியல் லாபத்துக்காக பாதிக்கப்படு வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மாநில அந்தஸ்து கோரிக்கை என்ற பெயரில் சுயவிளம்பரம் அரசியல் செய்பவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு முதல்-அமைச்சர்
அனுமதி க்கக்கூடாது. எனவே வியாபார த்தையும், சுற்றுலாவையும் பாதுகாக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி பந்த் போராட்டம் நடைபெறாமல் தடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜிப்மருக்கு இந்த ஆண்டு ரூ.1340 கோடி நிதி ஒதுக்கீடு.
- இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் புதுச்சேரியில் நடைபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையை சிறப்பாகச் செயல்படுகின்றது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைத்துள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 29,000 நோயாளிகள் இலவசமாக உயர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் புதுச்சேரிக்கு ஆரம்ப நிலை மற்றும் இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதேபோல் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மருக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.1340 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்தல், மருந்தியல் பூங்கா உருவாக்குதல், புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை மையம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ரங்கசாமி மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவாரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால், புதுச்சேரி அரசின் நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
- வில்லியனூர் பத்துகண்ணு சாலையில் உள்ள நரிக்குறவர்கள், வார இறுதி நாட்களில் வாடிக்கையாளர்களுக்காக ஊசுடு ஏரியில் பென்குயின், பிளமிங்கோ உள்ளிட்ட உள்நாட்டு அரிய வகை பறவைகள் வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர்.
- அப்போது வனத்துறை அதிகாரிகளிடம் நரிக்குறவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் பத்துகண்ணு சாலையில் உள்ள நரிக்குறவர்கள், வார இறுதி நாட்களில் வாடிக்கையாளர்களுக்காக ஊசுடு ஏரியில் பென்குயின், பிளமிங்கோ உள்ளிட்ட உள்நாட்டு அரிய வகை பறவைகள் வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கவும், பச்சை கிளிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுநல ஆர்வலர்களிடமிருந்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் நரிக்குறவர்களிடம் வனத்துறை மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து பறவைகள் வேட்டையாடப்படுகின்றன.
இந்நிலையில் இன்று வனத்துறையின் வன பாதுகாப்பு துணை இயக்குனர் குமரவேல், வேளாண் அதிகாரி பிரபாகரன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் ஊசுடு ஏரி பகுதிக்கு சென்று அங்கு வேட்டையாடப்பட்டு வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகளை பறிமுதல் செய்தனர்.
அப்போது வனத்துறை அதிகாரிகளிடம் நரிக்குறவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பண பாதுகாப்புத்துறை துணை இயக்குனர் குமரவேலு கூறியதாவது:-
ஊசுடு ஏரிக்கு வரும் அரியவகை பறவைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு சிலர் மாமிசத்திற்காக நரிக்குறவர்களிடம் சென்று குறிப்பிட்ட பறவைகளைக் கேட்கும் பொழுது அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு பறவைகளை வேட்டையாடி வருகின்றனர். எனவே அறிய வகை பறவை இனத்தைச் சேர்ந்த பறவைகளை உணவுக்காக கேட்க வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுவை அரசு நலவழித்துறை தேசிய மனநல திட்டத்தின் சார்பில் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவர்கள் பங்கு பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு நலவழித்துறை தேசிய மனநல திட்டத்தின் சார்பில் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவமனை மனநல டாக்டர்கள் கெஜலட்சுமி, அவின், மனநல ஆலோசகர் பொன்னி ஆகியோர் பேசினர்.
மருத்துவமனை பொறுப்பு டாக்டர் அபர்ணா வரவேற்றார். ஏ.என்.எம். லலிதா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவர்கள் பங்கு பெற்றனர்.
- அகில இந்திய பிரிட்ஜ் சங்கம் ஆதரவுடன் நடத்தும் சப்-ஜூனியர்மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம், குப்தா கார்டன், நாசிக் மாவட்டத்தில் வருகிற ஜனவரி மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
- மகாராஷ்டிரா செல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு பாகூர் தொகுதி சோரியாங்குப்பம் சமூக ஆர்வலர் புண்ணியமூர்த்தி, தலைவர் செல்வம், பயிற்சியாளர் சங்கரன்.
புதுச்சேரி:
அகில இந்திய பிரிட்ஜ் சங்கம் ஆதரவுடன் நடத்தும் சப்-ஜூனியர்மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம், குப்தா கார்டன், நாசிக் மாவட்டத்தில் வருகிற ஜனவரி மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ள புதுவை மாநிலத்தில் இருந்து வீரர்-வீராங்கனைகள் 8 பேர் கலந்து கொள்கிறார்கள். இப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு, தொடர்ந்து 4 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா செல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு பாகூர் தொகுதி சோரியாங்குப்பம் சமூக ஆர்வலர் புண்ணியமூர்த்தி, தலைவர் செல்வம், பயிற்சியாளர் சங்கரன். துணை தலைவர் ராஜி, செயலாளர் முகேஷ்குமார், துணை செயலாளர் முகில்குமார், சங்க தலைவர் ஜோதிபாசு, புண்ணியமூர்த்தி, சுபாஷ் ஆகியோர் வாழ்த்தி சீருடைகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
- மின்துறை ஊழியர் வீட்டில் நகைகளை திருடி சென்ற வீட்டு வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
- இந்தநிலையில் சந்திரசேகரின் மனைவி பீரோவில் வைத்திருந்த சுமார் 20 பவுனுக்கு மேல் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.
புதுச்சேரி:
மின்துறை ஊழியர் வீட்டில் நகைகளை திருடி சென்ற வீட்டு வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது43). புதுவை மின்துறை அலுவலகத்தில் முதுநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக நெல்லித்தோப்பு தச்சர்வீதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மனைவி செல்வி (36) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார்.
இடையில் 2 ஆண்டுகள் செல்வி வீட்டுக்கு வேலைக்கு வரவில்லை. பின்னர் தற்போது 6 மாதமாக மீண்டும் சந்திரசேகர் வீட்டில் செல்வி வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் சந்திரசேகரின் மனைவி பீரோவில் வைத்திருந்த சுமார் 20 பவுனுக்கு மேல் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இந்த தங்க நகைகளை செல்வி திருடி சென்றிருக்கலாம் என சந்திரசேகர் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வி நகைகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து செல்வியை செய்து அவரிடமிருந்து நகை களை பறிமுதல் செய்தனர்.
- புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
- விழிப்புணர்வு இதுபோன்ற விழா வரும் காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஜான்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல் வரவேற்று பேசினார். மாநில நுகர்வோர் ஆணைய தலைவர் பொங்கியப்பன், அரசு செயலாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் அமைச்சர் சாய்.ெஜ.சரவணன்குமார் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட தன்னார்வல அமைப் புகளை சேர்ந்தவர்களை கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
விழிப்புணர்வு இதுபோன்ற விழா வரும் காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாம் வாங்கும் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். தரமற்றதாக இருந்தால் அதற்கு தண்டனை வழங்க நுகர்வோர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நுகர்வோர் நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகளை 90 நாட்களுக்குள் முடிக்கவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பேசினார்.
விழாவில் மாநில நுகர்வோர் ஆணைய உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுந்தரவடிவேலு, குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள், தன்னார்வல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண் டனர். முடிவில் துணை இயக்குனர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.






