என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP OPC"

    • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பா.ஜனதா ஓ.பி.சி. அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
    • பேரணி பழைய பஸ் நிலையம், ராஜா தியேட்டர், நேரு வீதி, மிஷின் வீதி வழியாக எம்.ஜி.ஆர். சாலை, முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே முடிவடைந்தது.

    புதுச்சேரி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பா.ஜனதா ஓ.பி.சி. அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை யொட்டி புதுவை மாநில பா.ஜனதா ஓ.பி.சி. அணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் தொடங்கி இப்பேரணிக்கு ஓ.பி.சி. அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொது செயலாளர் மோகன்குமார் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்து அவர்களும் பேரணியில் பங்கேற்றனர்.

    பேரணி பழைய பஸ் நிலையம், ராஜா தியேட்டர், நேரு வீதி, மிஷின் வீதி வழியாக எம்.ஜி.ஆர். சாலை, முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே முடிவடைந்தது.

    அப்போது ஓ.பி.சி. அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் பேசும் போது,

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டிக்கு செய்த பணிகள் பற்றியும், அதே வழியில் தற்போதைய பிரதமர் மோடி செய்யும் மக்களுக்கான திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறினார்.

    நிர்வாகிகள் சரவணக்குமார், கிருஷ்ண ராஜ், வேல்முருகன், ராமஜெயம், பாலபாஸ்கர், சதாசிவம், சீனிவாசன், செல்வராஜ், பிரியா, லட்சுமி, பிரபாகர், சுந்தரமூர்த்தி, ஆறுமுகம், ஆனந்த், சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    பேரணியில் ஓ.பி.சி. அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் பேசிய போது எடுத்தபடம். 

    ×