என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு
    X

    ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கிய காட்சி.

    ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு

    • ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பெண்கள்-குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 200பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.
    • விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை பொருளாளர் விஜயராஜா செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    வ. உ. சி. முன்னாள் மாணவர்கள் மனித நேய அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பெண்கள்-குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 200பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியை அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சீதாராமன் மற்றும் பிரதீப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரியாணி வழங்கினார்கள். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை பொருளாளர் விஜயராஜா செய்திருந்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் பெரியசாமி, மணவாளன், முருகன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×