என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பந்த் போராட்டத்தை ரங்கசாமி தடுக்க வேண்டும்-சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை
- புதுவையில் வருகிற 28-ந் தேதி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
- கிறிஸ்துமஸ் தொடங்கி ஆங்கில புத்தாண்டு வரை பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுவையில் தங்குவதற்கு தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் வருகிற 28-ந் தேதி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இது வரை 11 முறை புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.
புதுவை முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பியுள்ள ஒரு யூனியன் பிரதேசம். புத்தாண்டு கொண்டா ட்டத்திற்கு ஏற்ற இடம் எது என்ற தேடலில் புதுவை மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி ஒவ்வொரு புதுவை வாழ் மக்களும் புதுவையை பற்றி பெருமை கொள்ளும் வகையில் உள்ளது.
கிறிஸ்துமஸ் தொடங்கி ஆங்கில புத்தாண்டு வரை பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுவையில் தங்குவதற்கு தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளனர்.
தற்போது அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ள திடீர் பந்த் போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் வேறு மாநிலத்திற்கு செல்ல க்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு பல ஏற்பாடு களை செய்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கின்றது.
நமது மாநிலத்தைநோக்கி வருபவர்கள், ஒரு சிலரின் சுய அரசியல் லாபத்துக்காக பாதிக்கப்படு வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மாநில அந்தஸ்து கோரிக்கை என்ற பெயரில் சுயவிளம்பரம் அரசியல் செய்பவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு முதல்-அமைச்சர்
அனுமதி க்கக்கூடாது. எனவே வியாபார த்தையும், சுற்றுலாவையும் பாதுகாக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி பந்த் போராட்டம் நடைபெறாமல் தடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






