என் மலர்
புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.
பாதாள வடிகால் பிரச்சினைக்கு தீர்வு- கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- உப்பளம் தொகுதிகுட்பட்ட வம்பா கீரப்பாளையம்-திப்புராயப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் பாதாள வடிகால் வாய்க்காலில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி இருந்தது.
- பாதாள வடிகால் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்ட கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிகுட்பட்ட வம்பா கீரப்பாளையம்-திப்புராயப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் பாதாள வடிகால் வாய்க்காலில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிபால் கென்னடி சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை பாதாள வடிகால் பிரிவு அதிகாரிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு கழிவு நீரை அகற்ற கேட்டுக்கொண்டார். இதன்படி பொதுப்பணி த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து வாகனம் மூலம் கழிவுநீரை அப்புறப்படுத்தினர்.
பாதாள வடிகால் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்ட கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. கிளைச்செயலாளார் மணிகண்டன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் நோயல், ராகேஷ், கவுதமன், ஈசாக், செல்லப்பன், குணசீலன், பாலாஜி, ரகுமான், ஆகியோர் உடனிருந்தனர்.






