என் மலர்
புதுச்சேரி

வெற்றி பெற்ற அணிகளுக்கு காசோலை வழங்கப்பட்ட காட்சி.
வினாடி-வினா போட்டியில் புதுவை முதலிடம்
- தென்மாநில அளவிலான சிவப்பு நாடா மன்றங்களின் வினாடி-வினா போட்டி புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் ஜெயராம் ஓட்டலில் நடந்தது.
- தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாட்டு நிறுவனத்தின் தகவல் தொடர்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் ஜோதிகா சீமா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
தென்மாநில அளவிலான சிவப்பு நாடா மன்றங்களின் வினாடி-வினா போட்டி புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் ஜெயராம் ஓட்டலில் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா,தெ லுங்கானா, அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் பங்கு பெற்றன.
போட்டிகளை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் சித்ரா தேவி, தேசிய எய்ட்ஸ் கட்டுப் பாட்டு நிறுவனத்தின் தகவல் ெதாடர்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் ஜோதிகா சீமா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டியில் 65 புள்ளிகளுடன் புதுவை முதல் இடத்தை பிடித்தது. புதுவை அணி சார்பில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவி ஹர்ஷிதா, வில்லியனூர் கஸ்தூரிபாய் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மணி ராஜஸ்ரீ ஆகியோர் முதல் பரிசை வென்று புதுவைக்கு பெருமை சேர்த்தனர். 2-வது இடத்தை அந்தமான் நிகோபர் அணியும், 3-வது இடத்தை ஆந்திராவும், 4-வது இடத்தை கோவாவும் பிடித்தன.
போட்டிக்கான ஏற்பாடுகளை புதுவை எய்ட்ஸ் கட் டுப்பாட்டு சங்கத்தின் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குனர் சேதுராமன், உதவியாளர் சைமன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையின் டாக்டர் சவுந்தர்யா நன்றி கூறினார்.






