என் மலர்
புதுச்சேரி

ஆரோக்கிய குழந்தைகள் தின விழாவில் வெற்றி பெற்ற தாய்மார்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு வழங்கி பாராட்டிய காட்சி.
வெற்றி பெற்ற தாய்-குழந்தைகளுக்கு பரிசு- ஏம்பலம் செல்வம் வழங்கினார்
- புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வட்டம் -3 சார்பில் மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சுபமங்களா மஹாலில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
- குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வட்டம் -3 சார்பில் மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சுபமங்களா மஹாலில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்காக நடைபெற்ற மாறுவேட போட்டி மற்றும் ஆரோக்கிய குழந்தை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை திட்ட அதிகாரி கிளாரா, மாநில பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தாய்மார்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.






