என் மலர்
புதுச்சேரி
- புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- தமிழ்செல்வன், ராமசந்திரன், மணவாளன், தனசேகரன், ஜான்சன் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரங்கசாமி தலைமை தாங்கினார்.
புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் எஸ்.டி. சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அவைத்தலைவர் சுப்ரம ணியன், இணைச்செயலாளர் லாவண்யா, மகளிர் அணி செயலாளர் காமாட்சி, துணைச்செயலாளர்கள் சிலம்பரசன், தமிழரசி, நிர்வாகிகள் ரகுபதி, ஆனந்தன், பொருளாளர் தமிழ்செல்வன், ஜெயலலிதா பேரவை செயலாளர் காண்டீபன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நந்தகோபால், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சுதாகர், தொழிற்சங்க பேரவை செயலாளர் பிரகாஷ், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, இலக்கிய அணி பாலு, , மருத்துவர் அணி டாக்டர் எழில், மாணவர் அணி ஜெகதீஷ், வர்த்தக அணி கணேசன், தொகுதி செயலாளர்கள் செந்தில், ரத்தின வேல்,தனவேலு,செல்லா என்கிற தமிழ்செல்வன், ராமசந்திரன், மணவாளன், தனசேகரன், ஜான்சன் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாநில அந்தஸ்து பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கபட வேடம் போடுகின்றன.
- மாநில அந்தஸ்து என்பது நம் உரிமை பிரச்சனையாகும். அதில் தயவு செய்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் 1989-ல் பா.ஜனதா ஆட்சியில் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது மத்தியில் பா.ஜனதா ஆட்சி உள்ளதால் மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசின் முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது பா.ஜனதாவின் கடமையாகும்.
மாநில அந்தஸ்து பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கபட வேடம் போடுகின்றன.
மாநில அந்தஸ்து என்பது நம் உரிமை பிரச்சனையாகும். அதில் தயவு செய்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம். தி.மு.க.வும், காங்கிரசும் போலித்தனமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றாமல் மாநில மக்கள் நலனுக்காக அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- படகில் இருந்து மீன், வலை, மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்றனர்.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராஜ்குமார் (வயது40) என்பவரது விசைப்படகில் அவருடன் தங்கவேல் (48), ஆறுமுகம் (47), பிரபு (42), மணிவேல் (50), மதன் (27) மற்றும் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் என மொத்தம் 11 மீனவர்கள், கடந்த 17-ந் தேதி வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று காலை கோடியக்கரை தென்கிழக்கே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக துப்பாக்கி முனையில் 11 மீனவர்களையும் சுற்றி வளைத்தனர். மேலும் படகில் இருந்து மீன், வலை, மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்றனர்.
இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவகிராம பஞ்சாயத்தார், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தருமாறு, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் அடாவடி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன.
- ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது வாடிக்கை.
கொரோனா தாக்கத்தால் 2 ஆண்டுகள் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக அதிகளவில் மக்கள் கூடவில்லை. இந்த ஆண்டு கொரோனா அச்சம் முற்றிலுமாக விலகி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுவை தயாராகி வருகிறது.
டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் புதுவையில் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விடப்பட உள்ளது. புதுவையில் தற்போது குளு, குளுவென குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஓட்டல்கள், விடுதிகளில் முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நட்சத்திர விடுதி முதல் சாதாரண விடுதி வரை ஆன்லைன் மூலம் வெளிமாநிலத்தினர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன. ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் அனுமதி பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு மைதானம், திடல்கள், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புதுவையில் பல்வேறு கடற்கரைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை சில நாட்களே உள்ளதால் பண்டிகை பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
மிஷன்வீதி, காந்திவீதி, நேருவீதிகளில் கிறிஸ்துமஸ் குடிலுக்கு தேவையான பொருட்கள் விற்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மிஷன்வீதி ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே குடில்களுக்கு தேவையான சொரூபங்கள் விற்பனை ஜரூராக நடக்கிறது. கிறிஸ்துமஸ் கேரல்ஸ், கலைநிகழ்ச்சிகளும் களைகட்டியுள்ளது.
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 24-ந் தேதி நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலியும், 25-ந்தேதி காலை பிரார்த்தனையும் நடக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார், குடில்களை அமைத்து கிறிஸ்து பிறப்பு பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
- புதுவையில் ரேஷன்கடைகள் கடந்த ஆட்சியில் இருந்து மூடிக்கிடக்கிறது. ரேஷன்கடை ஊழியர்க ளுக்கு 50 மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
- ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கியவீதிகளின் வழியாக தலைமை செயலகம்நோக்கி வந்தது.
புதுச்சேரி:
புதுவையில் ரேஷன்கடைகள் கடந்த ஆட்சியில் இருந்து மூடிக்கிடக்கிறது.
ரேஷன்கடை ஊழியர்களுக்கு 50 மாத சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை ஏற்கனவே நடத்தி வருகின்ற னர். கவர்னர், முதல்-
அமைச்சர், அமைச்சர்களை சந்தித்து மனுவும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் பாரதிய புதுவை நியாய விலை கடை ஊழியர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தினர் தட்டாஞ்சாவடி தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரேமானந்த், இணை செயலாளர்கள் வினோத்குமார், சக்திவேல், தட்சிணாமூர்த்தி, பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கியவீதிகளின் வழியாக தலைமை செயலகம்நோக்கி வந்தது. போலீசார் அவர்களை ஆம்பூர் சாலை- அம்பலத்தடையார் மடத்து வீதி சந்திப்பில் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடிமைப்பொருள் வழங்கல்துறையில் ஊழியர்களை இணைத்து சம்பளம் வழங்க வேண்டும். நேரடி பண பரிமாற்ற திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு 7 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- புதுவையில் மாநில அந்தஸ்தில் நடப்பதே யூனியன் பிரதேச அந்தஸ்திலும் நடக்கிறது என கவர்னர் கூறியுள்ளது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களின் ஆட்சி நடந்து முழு ஜனநாயகம் நிலவும். யூனியன் பிரதேசத்தில் கிடைக்காத பல்வேறு நன்மைகள் மாநிலம் என்ற அளவில் புதுவைக்கு கிடைக்கும். அரசியல் தகுதி உயரும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் மாநில அந்தஸ்தில் நடப்பதே யூனியன் பிரதேச அந்தஸ்திலும் நடக்கிறது என கவர்னர் கூறியுள்ளது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது. மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டால் புதுவைக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி அடிப்படை ஆழ்ந்த ஞானம் இல்லாமல் அவர் பேசியுள்ளார்.
மாநில அந்தஸ்து என்பது ஒரு புனிதமான மகத்துவமான உரிமையை மக்களுக்கு அளிக்கக்கூடியது. அது ஜனநாயக , சமூக, பொருளாதார, கலாச்சார பண்புகளை உள்ளடக்கிய சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.
மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுவை மண்ணின் மைந்தர்களின் சொத்தாக மாறும். புதுவை யாருக்கும் அடிமை இல்லை என்ற நிலை மாறும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களின் ஆட்சி நடந்து முழு ஜனநாயகம் நிலவும். யூனியன் பிரதேசத்தில் கிடைக்காத பல்வேறு நன்மைகள் மாநிலம் என்ற அளவில் புதுவைக்கு கிடைக்கும். அரசியல் தகுதி உயரும். சட்டமன்றத்திற்கு தன்னாட்சி உரிமை கிடைக்கும். சட்டமன்றத்திற்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு ஏற்படும். நிதிநிலை பல வகைகளில் மேம்படும்.
திட்டக்குழு, மாநில பணியாளர் ஆணையம், உயர்நீதிமன்ற கிளை. வரவு செலவு திட்டத்தை புதுவையிலேயே நிறைவேற்றுவது, சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்துவது, சுதந்திரமான வேளாண் கொள்கை தொழில் கொள்கை மூலதனக் கொள்கை, வீடு மற்றும் நிலக் கொள்கைகள், வறுமையையும் வேலையின்மையையும் தீர்ப்பதற்கான திட்டங்கள் போன்ற எண்ணற்ற நன்மைகள் மா நிலத்தில் கிடைக்கும். இவ்வளவு நன்மைகளையும் யூனியன் பிரதேசம் என்ற முறையில் புதுவை அளிக்கிறதா என கவர்னர் நேர்மையாக விளக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
- புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியல் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி யை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு தொடங்கி வைத்தார்.
- மாணவர்கள் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சுமார் 500 படைப்புகளை உருவாக்கியும் இதனை பார்க்க வந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் படைப்பின் ஆற்றலை முன்மொழிந்தனர்.
புதுச்சேரி:
புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி யை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு தொடங்கி வைத்தார்.
இதில் மழலையர் பிரிவு மாணவர்கள், தொடக்கப் பள்ளி பிரிவு மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாண வர்கள் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சுமார் 500 படைப்புகளை உருவாக்கியும் இதனை பார்க்க வந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் படைப்பின் ஆற்றலை முன்மொழிந்தனர்.
சுகாதார முறை, கணிப்பொறி, காய்கறி மற்றும் பழங்களின் வகைகள், மீன் வளர்ப்பு முறைகள், காற்றாலை, மிருகக்காட்சி சாலை, சாலை விதிகள், ஆடைகளின் வகைகள், உணவின் முக்கியத்துவம், முதலுதவி, தகவல் தொடர்பு சாதனங்கள், ேபாக்குவரத்து சாதனங்கள், எலும்பு கூட்டின் அமைப்பு, எரிமலை குழம்பு, இதயம், நுரையீரல், வயிறு ஆகியவற்றின் செயல்பாடுகள் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை வடிவமைத்திருந்தனர்.
- மக்கள் அன்றாடம் பயன் பெறக்கூடிய துறைகளில் உள்ளாட்சி துறை முக்கியமான ஒன்று. வீட்டு வரி, பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், பதிவு திருமணம் போன்ற மக்களின் அத்தியாவசிய பணிகள் உள்ளாட்சி துறைக்கு உட்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சா யத்துகளில் நடக்கிறது.
- புதுவை நகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் 33 பேருக்கு பதிலாக 9 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். உழவர்கரை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் இதே நிலை உள்ளது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் அன்றாடம் பயன் பெறக்கூடிய துறைகளில் உள்ளாட்சி துறை முக்கியமான ஒன்று. வீட்டு வரி, பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், பதிவு திருமணம் போன்ற மக்களின் அத்தியாவசிய பணிகள் உள்ளாட்சி துறைக்கு உட்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சா யத்துகளில் நடக்கிறது.
உள்ளாட்சி துறையில் பல பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிறந்த பதிவில் பெயர் மாற்றம்,பெயர் திருத்தம் போன்ற சிறு நடவடிக்கைகள் மேற்கொள்ள 3 மாத காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் மாற்று சான்றிதழில் பிறப்பு திருத்தம் செய்ய பல துயரங்களை சந்திக்க வேண்டி உள்ளது.
அலைக்கழிப்பு ஏற்பட்டு மக்களிடையே வெறு ப்புணர்வு ஏற்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் தகராறு நிலவுகிறது. புதுவை நகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் 33 பேருக்கு பதிலாக 9 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். உழவர்கரை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் இதே நிலை உள்ளது.
எனவே உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப்டெக்னாலஜி, சென்னை ராம்கோ சிமெ ண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி சிவகுமார், நிறுவனத்தில் வேலை செய்வதற்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை கூறினார்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப்டெக்னாலஜி, சென்னை ராம்கோ சிமெ ண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செய லாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி சிவகுமார், நிறுவனத்தில் வேலை செய்வதற்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை கூறினார்.
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுகளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதுவை பல்கலைக்கழகம், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மற்றும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜி கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார், கல்லூரி மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன், பேராசிரியர் வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- புதுவை வேல். சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெறும் 26-வது தேசியப் புத்தகக் கண்காட்சியின் 5-வது நாளில் முனைவர் ரஜியா மற்றும் ஷம்ஷத் ஆகியோர் பிரெஞ்சு மொழியில் எழுதிய தியாகி அப்துல் மஜீத் நினைவஞ்சலி புத்தகத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டார்.
- விழாவில் புத்தகக் கண்காட்சியின் சிறப்புத் தலைவர் பேராசிரியர் பாஞ். ராமலிங்கம் நோக்கவுரை ஆற்றினார்.
புதுச்சேரி:
புதுவை வேல். சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெறும் 26-வது தேசியப் புத்தகக் கண்காட்சியின் 5-வது நாளில் முனைவர் ரஜியா மற்றும் ஷம்ஷத் ஆகியோர் பிரெஞ்சு மொழியில் எழுதிய தியாகி அப்துல் மஜீத் நினைவஞ்சலி புத்தகத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டார்.
இதனை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து பெற்றுக்கொண்டார். விழாவிற்கு சீனு. மோகன்தாஸ் தலைமை வகித்தார். கவிஞர்கள் பாலசுப்ரமணியன், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.
விழாவில் புத்தகக் கண்காட்சியின் சிறப்புத் தலைவர் பேராசிரியர் பாஞ். ராமலிங்கம் நோக்கவுரை ஆற்றினார். ஷர்மிளா பகதூர், ஜஸ்லீன், பூர்ணா, ஷபானா பர்வீன், அன்னமேரி, பிரேமலதா, சசிகுமார், மனோகரன், முகம்மது சிக்கந்தர், மற்றும் சாதிக் அலி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
- புதுவை அமலோற்பவம் பள்ளியில் நடந்த தேசிய சதுரங்க போட்டியில் தமிழக மாணவர் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.
- 27 மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்ற இந்த போட்டியில், தமிழகத்தில் மட்டுமே அதிகபட்சமாக 180 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அமலோற்பவம் பள்ளியில் நடந்த தேசிய சதுரங்க போட்டியில் தமிழக மாணவர் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.
புதுவை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாநில சதுரங்க கழகம் இணைந்து 33-வது ஆண்டு தேசிய சதுரங்க போட்டியை சதுரங்க வாகைசூடி 2022 என்ற தலைப்பில் நடத்தியது.
வாணரப்பேட்டை அமலோற்பவம் ஆரம்ப பள்ளி கலையரங்கில் 13 வயதிற்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கான தொடர் சதுரங்க போட்டி நடந்தது. கடந்த 11-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 508 சிறுவர்-சிறுமிகள் பங்கேற்றனர்.
27 மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்ற இந்த போட்டியில், தமிழகத்தில் மட்டுமே அதிகபட்சமாக 180 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தாக் ஷின் அருண் முதலிடம் பிடித்தார். டெல்லியை சேர்ந்த தாவிக் வாதவன், ராஜஸ்தான் பாரதிய யாஷ் ஆகியோர் 2-ம் இடம் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்னேகா ஹல்தர் முதலிடம் பிடித்தார். டெல்லி சச்சி ஜெயின், மேற்கு வங்கம் சபரியா கோஷ் ஆகியோர் 2-ம் இடத்தை பிடித்தனர்.
விழாவிற்கு, சதுரங்க கழக தலைவர் சங்கர் வரவேற்றார். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை வகித்தனர்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார். தேசிய சதுரங்க கழக ஆலோசகர் பரத்சிங் சவுகான், அமலோற்பவம் கல்விக்குழும தாளாளர் லூர்துசாமி, மாநில சதுரங்க கழக செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி சிறப்பாக உள்ளது
- இதற்கு சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
புதுச்சேரி:
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி சிறப்பாக உள்ளது என்றும், புதுவை மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் விளைவிக்க சமூக அமைப்புகள் முயன்று வருவதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று மிரட்டல் விடுத்து இருந்தன.
இது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன், ரிச்சர்ட் மற்றும் பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.வை மிரட்டியது உரிமை மீறல் பிரச்சினை. எனவே மிரட்டல் விடுத்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்தை கூறினர். இதைத்தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.வை மிரட்டிய சமூக அமைப்பு கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் அவர் கூறும் போது, புதுவையில் 1567 அமைப்புகளை தடை செய்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீறி செயல்படுவர்கள் கைது செய்யப்படுவார்கள் எச்சரிக்கை விடுத்தார்.






