என் மலர்
புதுச்சேரி
- புதுவை எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 26-வது தேசிய புத்தக கண்காட்சி புதுவை வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் தொடங்கியது.
- வருகிற 25-ந் தேதிவரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.
புதுச்சேரி:
புதுவை எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 26-வது தேசிய புத்தக கண்காட்சி புதுவை வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் தொடங்கியது. வருகிற 25-ந் தேதிவரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. தொடக்க விழாவிற்கு ஜான்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்காட்சியை தொடங்கி வைத்து புதிய நூல்களை வெளியிட்டார்.
பாஞ்.ராமலிங்கம் நோக்க உரையாற்றினார். எழுத்தாளர்கள் புத்தக சங்க தலைவர் முத்து வரவேற்று பேசினார். வேல்.சொ.இசைக்கலைவன் முன்னிலை வகித்தார். கோதண்டபாணி நன்றி கூறினார்.
இக்கண்காட்சியில் இந்த ஆண்டிற்கான புத்த சேவா ரத்னா விருது புதுவை கூட்டுறவு புத்தக சங்கம் மற்றும் புதுவை தமிழ் சங்கத்தின் துணை தலைவர் ஆதிகேசவன், மோரீசியஸ் முருகன் பவுன்டேசன் தலைவர் தேவராஜன் பொன்னம்பலம், ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் ஜோதி, புதுவை பல்கலை க்கழக நூலகர் விஜயகுமார், சமூக ஆர்வலர் சடகோ ப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. முடிவில் கோதண்டபாணி நன்றி கூறினர்.
கடந்த ஆண்டு 1 1/2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் ரூ.50 லட்சம் அலவிற்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கு அதிகமான புத்தகங்கள் ரூ.75 லட்சம் அளவிற்கு விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் ஸ்ரீ வானவில் கே.ரவி 100-வது கருத்தரங்கு புதுவை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை விடுதியில் நடந்தது.
- கவர்னர் தமிழிசை கருத்தரங்கத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழக சுப்ரமணிய பாரதியார் தமிழ் ஆய்வு மையம் மற்றும் பாலக்காடு, தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் ஸ்ரீ வானவில் கே.ரவி 100-வது கருத்தரங்கு புதுவை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை விடுதியில் நடந்தது.
கவர்னர் தமிழிசை கருத்தரங்கத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். குர்மீத் சிங், அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. , பாலக்காடு தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ராஜாராம், சுப்ரமணிய பாரதியார் தமிழ் ஆய்வு மையத்தின் புல முதல்வர் சந்திரிகா, அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
- பாண்லே பாலகத்தை கல்வீசி தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
- புதுவையில் பால்தட்டுப்பாட்டை போக்க வேண்டும், பாண்லே கொள்முதலை உயர்த்த வேண்டும்.
புதுச்சேரி:
பாண்லே பாலகத்தை கல்வீசி தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
புதுவையில் பால்தட்டுப்பாட்டை போக்க வேண்டும், பாண்லே கொள்முதலை உயர்த்த வேண்டும், நிர்வாக திறமையற்ற பாண்லே அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோரி சமூக அமைப்பினர் நேற்று புதுவை மிஷன் வீதியில் உள்ள பாண்லே நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் திடீரென பாண்லே அலுவலகம் மீது கல்வீசி தாக்கினார். இதில் பால் பொருட்கள் வைத்திருந்த கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து பாண்லே விற்பனை பிரிவு மேலாளர் கமலக்கண்ணன் பெரியக்டை போலீசில் புகார் செய்தார்.
புகாரில் பாண்லே பாலகத்தின் கண்ணா டியை புதுவை வம்பா கீரப்பாளையம் திப்புராய பேட்டையை சேர்ந்த சம்சுதீன் சைமன் என்பவர் உடைத்து சேதப்படுத்தியதாக தெரிவித்தார். இதன் பேரில் சம்சுதீன் சைமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வில்லியனூர் அருகே வக்கீல் உள்பட 2 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- புதுவை குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிசெல்வன்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே வக்கீல் உள்பட 2 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிசெல்வன். இவர் புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். வழக்கு சம்பந்தமாக இவரும் ரபிக்கான் என்பவரும் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
வில்லியனூர் அருகே வடமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் சபரிசெல்வன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்தார்.
இதனை சபரி செல்வன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி சபரிசெல்வனை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற போது ரபிக்கானையும் அவர் தாக்கினார்.
மேலும் அங்கு கிடந்த சவுக்கு தடியை எடுத்து சபரிசெல்வனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். அதோடு இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சபரிசெல்வன் மற்றும் ரபிக்கான் ஆகிய இருவரும் வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து சபரி செல்வன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வருகிறார்கள்.
- புதுவை ரோடியர் மில் திடலில் தனியார் நிறுவன ஊழியரை உருட்டு கட்டையால் தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- புதுவை நயினார் மண்டபம் வள்ளலார் நகர் காவேரி வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்
புதுச்சேரி:
புதுவை ரோடியர் மில் திடலில் தனியார் நிறுவன ஊழியரை உருட்டு கட்டையால் தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை நயினார் மண்டபம் வள்ளலார் நகர் காவேரி வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் புதுவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
புதுவை-கடலூர் சாலையில் கோர்ட்டு எதிரே வந்த போது செல்போனில் அழைப்பு வந்ததால் ரோடியல் மில் திடலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென 3 வாலிபர்கள் உருட்டு கட்டையுடன் வந்தனர். அவர்கள் சிவக்குமாரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
இதனால் நிலைகுலைந்து போன சிவக்குமார் ஒன்றும் புரியாமல் தவித்துகொண்டிருந்த வேளையில் அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.8 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்து கொண்டு சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிவக்குமார் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிவக்குமார் விசாரித்த போது பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை கொள்ளையடித்து சென்றவர்கள் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த கணேஷ், ரோடியர்பேட்டை சேர்ந்த சக்திவேல் மற்றும் ஷாருக்கான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிவக்குமார் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்து சென்ற 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.
- முன்னாள் மருத்துவ மாணவர், பள்ளி விளையாட்டு பயிற்சியாளர் ஆகியோரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இருவரும் பயன்படுத்திய கஞ்சா புகைக்கும் குடுவைகள் பாங்கு பறிமுதல் செய்யப்பட்டது.
சேதராப்பட்டு:
புதுவை அருகே உள்ள கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடி கந்தப்பு முதலியார் வீதியில் ஒரு வீட்டில் அடிக்கடி அடையாளம் தெரியாத ஒரு சிலர் வந்து செல்வதாகவும் அந்த வீட்டிலிருந்து கஞ்சா புகை வாசனை அடிக்கடி வருவதாகவும் கோட்டகுப்பம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் ரகசியமாக சென்று வீட்டுக்குள் நுழைந்து பார்த்ததில் உள்ளே கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அங்கு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஸ்டீபன்ராஜ் என்பதும் புதுவை சித்தானந்தா கோவில் அருகே உள்ள பள்ளியில் சாப்ட் பால் பயிற்சியாளராக இருந்து வருவதும் தெரியவந்தது.
இவரும் எல்லைப் பிள்ளை சாவடியைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து இடையில் படிப்பை நிறுத்திய ஆனந்தகுமாரும் சேர்ந்து வட மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி கோட்டக்குப்பம் மற்றும் புதுவை பகுதியில் குறிப்பாக மருத்துவ மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து ஸ்டீபன்ராஜ், ஆனந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் பயன்படுத்திய கஞ்சா புகைக்கும் குடுவைகள் பாங்கு பறிமுதல் செய்யப்பட்டது.
கோட்டக்குப்பம் அருகே சுற்றுலா பயணிகள், படிக்கும் மாணவர்கள் போல் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வருபவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தற்போது முன்னாள் மருத்துவ மாணவர், பள்ளி விளையாட்டு பயிற்சியாளர் ஆகியோரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தேர்தல் சமயத்தில் அனைத்து அரசியல்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் மாநில அந்தஸ்து கோஷம் நிச்சயம் இடம்பெறும்.
- மாநில அந்தஸ்து கோரிக்கை அரசியல் கட்சிகளிடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவைக்கு மாநில அந்தஸ்து என்ற கோஷம் அரை நூற்றாண்டுகாலமாக நிலவி வருகிறது.
கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை போல திடீரென வலுப்பெற்றும், திடீரென கரைந்து காணாமல் போவதும் வழக்கம். தேர்தல் சமயத்தில் அனைத்து அரசியல்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் மாநில அந்தஸ்து கோஷம் நிச்சயம் இடம்பெறும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும், மாநில அந்தஸ்துக்காக தேர்தலையும் புறக்கணிக்க தயார் என தற்போதைய முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
மாநில அந்தஸ்து தரும் கட்சியுடன்தான் கூட்டணி எனவும் தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு 1 ½ ஆண்டாக மாநில அந்தஸ்து பிரச்சினை மக்கள் மத்தியில் கொண்டு வரப்படவில்லை. தற்போது மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரம் சூடுபிடித்துள்து. அதிலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, தனக்கு அதிகாரம் இல்லாததால், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாத மன உளைச்சலில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மாநில அந்தஸ்து பெற சட்டப்படி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
இதனால், மாநில அந்தஸ்து விவகாரம் மாநிலம் முழுவதும் மீண்டும் பரபரப்பானது. இதனையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமியின் கருத்துக்கு கூட்டணி கட்சியான பா.ஜனதா, அ.தி.மு.க. எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளன.
பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கூறும்போது, மாநில அந்தஸ்து பெற நம்மிடம் வருவாய் இருக்க வேண்டும். இயற்கை வளம் இல்லாத புதுவையில் வருவாயை பெருக்கும் வழிமுறைகள் இல்லாதபோது மாநில அந்தஸ்து பெறுவதில் என்ன பயன்? என கேள்வி எழுப்பினார்.
அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கூறும்போது, தனக்கு ஆபத்து வரும்போதெல்லாம் மாநில அந்தஸ்து கோரிக்கையை கையில் எடுப்பதை முதல்-அமைச்சர் ரங்கசாமி வாடிக்கையாக வைத்துள்ளார்.
காங்கிரஸ், என்.ஆர். காங்கிரசில் முதல்- அமைச்சராக இருந்தபோது மாநில அந்தஸ்துபெற ரங்கசாமி என்ன முயற்சியை எடுத்தார்? தற்போது மதுபான ஆலை விவகாரத்தை மூடி மறைக்க அரசியல் நாடகமாடுகிறார் என கூறினார்.
எதிர்கட்சி தலைவர் சிவா கூறும்போது, மதுபான தொழிற்சாலை, மதுபார்கள் அமைக்க அரசு அனுமதி கிடைக்கிறது. மின்துறை தனியார்மயத்திற்கு அனுமதி கிடைக்கிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லையா? இதற்கு மாநில அந்தஸ்து வேண்டுமா? மேலிருந்து சமிக்ஞை வந்தால் அதை நிறைவேற்றும் முதல்-அமைச்சராக ரங்கசாமி திகழ்கிறார். மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் ரங்கசாமி அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார் என குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறும்போது, மத்திய அரசு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் எழுப்பிய கேள்விக்கு, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என பதிலளித்துள்ளது. வெறுமனே புலம்பினால் மாநில அந்தஸ்து கிடைத்துவிடாது. மாநில அந்தஸ்து பெற ரங்கசாமி என்ன முயற்சி செய்தார்? மத்திய அரசை எதிர்த்து அவர் போராட தயாரா? என கேள்வி எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறும்போது, மாநில அந்தஸ்து என்ற நோக்கத்தோடுதான் முதல்- அமைச்சர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வருகிறார். பிரதமரை சந்தித்த போதும் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தினார். தொடர்ந்து மாநில அந்தஸ்து பெறும் அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும் என கூறினார்.
மாநில அந்தஸ்து விவகாரம் புதுவையில் அரசியல் கட்சிகளிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, புதுவைக்கு எது நல்லதோ? அதை மத்திய அரசு நிச்சயம் செய்யும் என்று மட்டும் தெரிவித்தார்.
இதேபோல கவர்னர் தமிழிசை கூறும்போது, மாநில அந்தஸ்து இருந்தால் என்னென்ன நடக்குமோ? அவையெல்லாம் தற்போது நடந்து வருவதாகவும், எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதில்லை. ஒரு சில அதிகாரிகள் காலதாமதம் செய்தால் அவர்களை அழைத்து பேசுவதாகவும், ரங்கசாமியின் மன உளைச்சளை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாநில அந்தஸ்து கோரிக்கை அரசியல் கட்சிகளிடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
- புதுவை அரசு கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் வாயிலாக அகர்பக்தி தயார் செய்யும் பயிற்சி நடைபெற்றது.
- கைவினை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மகளிருக்கு துணை சபாநாயகர் ராஜவேலு சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அடுத்த கரையாம்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுவை அரசு கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் வாயிலாக அகர்பக்தி தயார் செய்யும், கைவினை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மகளிருக்கு துணை சபாநாயகர் ராஜவேலு சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க பதிவாளர் யஷ்வந்தயா, மேலாண் இயக்குனர் ஷியாம்சுந்தர் மற்றும் உதவி இயக்குனர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மகளிருக்கு 2ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகி ரமேஷ் செய்திருந்தார்.
- உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. மீனவளத்துறை இணை இயக்குனர் தெய்வ சிகாமணியை சந்தித்து மனு அளித்தார்.
- அதில் வம்பா கீராப்பாளையத்தில் பாறைகற்களை கொட்டி சீரமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. மீனவளத்துறை இணை இயக்குனர் தெய்வ சிகாமணியை சந்தித்து மனு அளித்தார்.
அதில் வம்பா கீராப்பாளையத்தில் பாறைகற்களை கொட்டி சீரமைக்க வேண்டும். காலாப்பட்டில் தற்போது கற்கள் கொட்டி சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. அப்பணி நடக்கும் போதே உப்பளம் தொகுதியிலும் பாறைகற்களை கொட்டி சீரமைக்க வேண்டும்.
பழைய துறைமுகத்தில் இடிந்த பாலத்தை புனரமைப்பு செய்ய வேண்டும்.
சுனாமி நினைவு சின்னம் அமைத்து கொடுக்க வேண்டும். என கூறியிருந்தார். மேலும் பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர், கண்காணிப்பு பொறியாளர், நீர் பாசன பிரிவு செயற்பொறியாளர் துறை முக செயற்பொறியாளர் ஆகியோரிடமும் மனுக்கள் அளித்து உடனே பணிகளை முடித்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
- மழைக்காலத்தில் சாலைகள் முழுமையாக நீரில் நிரம்புகிறது. இப்பகுதியில் சென்று வரவே முடியாது.
- பள்ளிகளுக்கும், வேலைக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் 11 வீதிகள் உள்ளன.
இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு 20 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் இப்பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை. இதை கண்டித்து புதுவை-கடலூர் சாலையில் மறியல் செய்ய பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் முருங்கம்பாக்கம் சந்திப்பில் தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து வந்த அரியாங்குப்பம் தொகுதி என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஸ்கர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் பொதுமக்கள் எம்.எல்.ஏ. பாஸ்கரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். 20 ஆண்டாக சாலைகளை அமைக்காதது ஏன்? அரவிந்தர் நகர் பகுதி என கேட்டாலே ஆட்டோக்கள் வருவதில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பெண்கள் வாகனத்தில் செல்லும்போது பலமுறை விழுந்து கை கால்கள் உடைந்துள்ளது.
மழைக்காலத்தில் சாலைகள் முழுமையாக நீரில் நிரம்புகிறது. இப்பகுதியில் சென்று வரவே முடியாது. பள்ளிகளுக்கும், வேலைக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் குப்பை வாரும் பணியும் நடைபெறுவதில்லை என பொதுமக்கள் அடுக்கடுக்காக புகார்களை கூறி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல் எம்.எல்.ஏ. திணறினார்.
எம்.எல்.ஏ.வையும் மீறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து எம்.எல்.ஏ. பாஸ்கர், பணிகளை மேற்கொள்ள அரசு தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கவில்லை. இதனால் பல பணிகள் செயல்படுத்தப்படாமல் நிற்கிறது. தொகுதி மேம்பாட்டு நிதி வந்தவுடன் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகிறேன் என்று கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் அங்கிருந்து பொதுமக்களோடு எம்.எல்.ஏ. பாஸ்கர் சென்று அரவிந்தர் நகர் பகுதிகளை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
மார்ச் மாதத்திற்குள் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அவர் உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் முருங்கப்பாக்கம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- புதுவையில் பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாண்லே பால் தட்டுப்பாடால் பொதுமக்கள் அவதியடைந்துள்னர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தீடீரென பாண்லே அலுவலகத்தின் மீது கல் வீசினார். இதனால் பாண்லே நிர்வாக அலுவலக கண்ணாடி உடைந்தது.
புதுச்சேரி:
புதுவையில் பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாண்லே பால் தட்டுப்பாடால் பொதுமக்கள் அவதியடைந்துள்னர்.
பால் தட்டுப்பாடை போக்க கோரி அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமூக அமைப்புகள் சார்பில் மிஷன் வீதியில் உள்ள பாண்லே நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு கடற்கரை சாலை வியாபாரிகள் சங்கம் அருண் தலைமை வகித்தார். தமிழர் களம் அழகர், நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா மற்றும் சமூக அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாண்லே கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். நிர்வாக திறமையற்ற பாண்லே அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தீடீரென பாண்லே அலுவலகத்தின் மீது கல் வீசினார். இதனால் பாண்லே நிர்வாக அலுவலக கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கல் எறிந்த வாலிபரை பெரியகடை போலீசார் பிடித்து அழைத்து சென்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
- புதுவை மாநில தி.மு.க. சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- தொடர்ந்து தொகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் திருவுருப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு, நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பேராசிரியர் அன்பழகனின் பிறந்த நாள் விழா புதுவை மாநில தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் திருவுருவப் படத்திற்கு மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தலைமைக் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தொகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் திருவுருப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு, நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தி.மு.க. துணை அமைப்பாளர்கள் சண்.குமரவேல், ஏ.கே.குமார், செந்தில்குமார், பெல்லாரி கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் லோகையன், சிறப்பு அழைப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், முகிலன், சண்முகம், வடிவேல், கோபாலகிருஷ்ணன், டாக்டர் நித்திஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, கோகுல், பழநி, பிரபாகரன், சத்யாஆறுமுகம், குப்புசாமி, ரவீந்திரன், பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






