search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாண்லே பாலகத்தை கல்வீசி தாக்கியவர் மீது வழக்கு
    X

    கோப்பு படம்.

    பாண்லே பாலகத்தை கல்வீசி தாக்கியவர் மீது வழக்கு

    • பாண்லே பாலகத்தை கல்வீசி தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
    • புதுவையில் பால்தட்டுப்பாட்டை போக்க வேண்டும், பாண்லே கொள்முதலை உயர்த்த வேண்டும்.

    புதுச்சேரி:

    பாண்லே பாலகத்தை கல்வீசி தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

    புதுவையில் பால்தட்டுப்பாட்டை போக்க வேண்டும், பாண்லே கொள்முதலை உயர்த்த வேண்டும், நிர்வாக திறமையற்ற பாண்லே அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோரி சமூக அமைப்பினர் நேற்று புதுவை மிஷன் வீதியில் உள்ள பாண்லே நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் திடீரென பாண்லே அலுவலகம் மீது கல்வீசி தாக்கினார். இதில் பால் பொருட்கள் வைத்திருந்த கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து பாண்லே விற்பனை பிரிவு மேலாளர் கமலக்கண்ணன் பெரியக்டை போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் பாண்லே பாலகத்தின் கண்ணா டியை புதுவை வம்பா கீரப்பாளையம் திப்புராய பேட்டையை சேர்ந்த சம்சுதீன் சைமன் என்பவர் உடைத்து சேதப்படுத்தியதாக தெரிவித்தார். இதன் பேரில் சம்சுதீன் சைமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×