என் மலர்
புதுச்சேரி
- நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 38 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மடுகரை பாலாஜி நகருக்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
- இதில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் மாணிக்கசாமி, இளநிலை பொறியாளர் அய்யப்பன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 38 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மடுகரை பாலாஜி நகருக்கு தார் சாலை அமைத்தல், ஏரிப்பாக்கம் நத்தமேடு முத்து மாரியம்மன் கோவிலை சுற்றி சிமெண்டு கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் புது நகர் முதல் 2-வது குறுக்கு சாலைகளுக்கு தார் சாலை அமைத்தல், பண்ட சோழநல்லூர் குளத்து மேட்டு தெருவில் தார் சாலை அமைத்தல், பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்.
இதில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் மாணிக்கசாமி, இளநிலை பொறியாளர் அய்யப்பன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தை எதிர்க்கட்சித் தலைவர் முற்றுகை.
- உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைப்பதாக அதிகாரி விளக்கம்.
புதுச்சேரி:
புதுச்சேரியல் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் வார்டு பகுதியை சேர்ந்த 40 பேருக்கு முதியோர் உதவித்தொகை எம்.எல்.ஏ. பரிந்துரை இன்றி வழங்கப்பட இருந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளுக்கு இந்த உதவித் தொகையை வழங்குவார் என பயனாளிகளுக்கு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. தகவலறிந்த எதிர்கட்சித்தலைவர் சிவா, தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், ஆதரவாளர்களோடு வந்து குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டார்.
அப்போது இயக்குனர் முத்துமீனா அலுவலகத்தில் இல்லை. அவருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வரச்சொல்லும்படி ஊழியர்களிடம் சிவா வலியுறுத்தினார். அரை மணி நேரத்திற்கு பிறகு இயக்குனர் முத்துமீனா அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் தொகுதி எம்.எல்.ஏ. பரிந்துரையின்றி உதவித்தொகை வழங்க எப்படி முடிவு செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
நியமன எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில், இறப்பு காலியிடங்களை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நியமன எம்.எல்.ஏ.க்கு தொகுதியே இல்லாத போது எந்த அடிப்படையில் இறப்பு காலியிடம் அளிக்க முடியும்.? என சிவா கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்க முடியாமல் இயக்குனர் முத்துமீனா திணறினார். உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைப்பதாக கூறினார். இதன்பின் எதிர்கட்சி த்தலைவர் சிவா அங்கிருந்து, ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
- மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, ஐ.நா. மன்றம் அறிவித்துள்ள மாண்பு, சுதந்திரம், நீதியை உறுதிப்படுத்தும் உறுதி ஏற்பு தினம், வக்கீல் மோகனுக்கு மக்கள் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதுவை உப்பளம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
- மூத்த வக்கீல் மோகன் ஏற்புரை யாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, ஐ.நா. மன்றம் அறிவித்துள்ள மாண்பு, சுதந்திரம், நீதியை உறுதிப்படுத்தும் உறுதி ஏற்பு தினம், வக்கீல் மோகனுக்கு மக்கள் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதுவை உப்பளம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
விழாவுக்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லெனின், கந்தசாமி, கோபிநாதன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெய ச்சந்திரன், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஆசீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூத்த வக்கீல் மோகன் ஏற்புரை யாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.
- சிந்தனையாளர் பேரவையின் 118-வது சிந்தனை அரங்கம் புதுவை ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
- புதுவை மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கையான முழு அதிகாரம் கொண்ட தனி மாநில அந்தஸ்தை நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
சிந்தனையாளர் பேரவையின் 118-வது சிந்தனை அரங்கம் புதுவை ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் காமராசு வரவேற்றார். சுசீலா, துணை செயலாளர்கள் ராஜாராம், விசாலாட்சி, முன்னாள் செயலாளர் குமாரகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் திருபுவனை கலியபெருமாள் கவிஞரின் கடமைகள் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். புதுவை ஸ்டேட் வங்கி ஜிப்மர் கிளை மேலாளர் ராஜசேகரன் சிந்தனை அரங்க உரையாற்றினார்.
தொடர்ந்து கலந்து ரையாடல் மற்றும் கவிஞர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறை வேற்றபட்டது.
புதுவை மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கையான முழு அதிகாரம் கொண்ட தனி மாநில அந்தஸ்தை நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு வழங்க வேண்டும். புதுவை அரசின் கலைபண்பாட்டு துறையால் வழங்கப்படும் கலைமாமணி மற்றும் தமிழ்மாமணி விருதுகளை தகுதியுடையோருக்கு வருகிற திருவள்ளுவர் தினத்தில் வழங்கவேணடும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது. முடிவில் பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன் நன்றி கூறினார்.
- மணக்குள விநாயகர் என்ஜினீரியங் கல்லூரி, தேசிய சிந்தனை கழகம், அகில பாரத பிரக்ஞா பிரவாஹன் தமிழ்கிளை ஆகியவை இணைந்து பாரதியார் பிறந்தநாள், 75-வது ஆண்டு சுதந்திர அமுத பெருவிழா, வள்ளலாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
- திருவாரூர், மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், தமிழ்மொழி தொன்மை, பாரதியாரின் விடுதலை உணர்வுகள், வள்ளலார் ஆன்மிக கருத்துக்கள் ஆகியவை பற்றி சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீரியங் கல்லூரி, தேசிய சிந்தனை கழகம், அகில பாரத பிரக்ஞா பிரவாஹன் தமிழ்கிளை ஆகியவை இணைந்து பாரதியார் பிறந்தநாள், 75-வது ஆண்டு சுதந்திர அமுத பெருவிழா, வள்ளலாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் வரவேற்றார். திருவாரூர், மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், தமிழ்மொழி தொன்மை, பாரதியாரின் விடுதலை உணர்வுகள், வள்ளலார் ஆன்மிக கருத்துக்கள் ஆகியவை பற்றி சிறப்புரையாற்றினார்.
தேசிய சிந்தனை கழகம் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் உள்பட டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரியின் வானவில் குழுமம் மற்றும் இலக்கிய சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
- புதுவை பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் ‘பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா’ பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
- மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவிகள் 25 பேர் பங்கறே்ற புதுமைப்பெண் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் 'பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா' பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
புரட்சிக் கவிஞர் போற்றிய பாரதியார் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாத விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கலைமாமணி கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வேணுகோபால், ராசசெல்வம், கோவிந்தராசு, கிருட்டிணகுமார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்னிலை வகித்தனர். மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவிகள் 25 பேர் பங்கறே்ற புதுமைப்பெண் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
மேலும் படைப்பாளி ரமேஷ்பைரவி, பாவலர் சரசுவதிவைத்தியநாதன் நெறியாள்கை செய்தனர். தேர்வுபெற்ற மாணவிகள் 6 பேருக்குத் தொழில் முனைவர் பாவலர் அருள்செல்வம் ெதாகை ரூ.4 ஆயிரம் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
இதில் தமிழறிஞர்கள், கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் வள்ளி, கலைமாமணி செல்வதுரை நீஸ், நாடகக் கலைஞர்மோகன், பாவலர்கள் விசாலட்சி விழா ஏற்பாடுகனைச் செய்திருந்தனர். தொடக்கத்தில் பாவலர் ராஜஸ்ரீமகஷே் வரவேற்றார் முடிவில் நிஷாகோமதி நன்றி தெரிவித்தார்.
- மத்தியிலும் மாநிலத்தி லும் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரசும் 18 ஆண்டு காலமாக மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க.வும் ஏன் தாங்கள் ஆட்சியில் இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்கவில்லை.
- மாநில அந்தஸ்துக்காக ஆளும் அரசு வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியம் இல்லை.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மத்தியிலும் மாநிலத்தி லும் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரசும் 18 ஆண்டு காலமாக மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க.வும் ஏன் தாங்கள் ஆட்சியில் இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்கவில்லை.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது அந்த அரசை எதிர்த்து மாநில அந்தஸ்துக்காக எத்தனை முறை நாராயணசாமி வீதியில் இறங்கி போராடியுள்ளார்?
10 ஆண்டுகாலம் இந்த நாட்டின் பிரதமரோடு இணக்கமாக இணை அமைச்சர் பதவியில் இருந்த நாராயணசாமி எத்தனை முறை புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என பிரதமரை கேட்டிருப்பார்? தான் மட்டும் அதிகாரத்தில் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தையே வழங்காமல் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியை தடுத்து நிறுத்தியவர் தான் நாராயணசாமி.
மாநில அந்தஸ்துக்காக ஆளும் அரசு வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியம் இல்லை.
பிரதமரை டெல்லியிலேயோ அல்லது புதுவையிலேயோ சந்திக்கும் போது மாநில அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து வலியுறுத்தினாலே போதுமானது. .
புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து என்பது அவசியமான ஒன்றாகும். இது சம்பந்தமாக புதுவை அரசும் முதல்-அமைச்சர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைக்கும் அ.தி.மு.க. என்றும் துணைநிற்கும்.
இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. குழு கூட்டம் காணொலியில் நடந்தது.
- கூட்டத்தில் நீர்மோட்டார், சமையல் செய்ய பயன்படுத்தும் உபகரணங்கள், ஷார்ப்னர் ஆகியவற்றின் வரியை 18 சதவீதமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. குழு கூட்டம் காணொலியில் நடந்தது.
கூட்டத்தில் புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன், வணிக வரித்துறை ஆணையர் ராஜசேகர் பங்கேற்றனர். கூட்டத்தில் நீர்மோட்டார், சமையல் செய்ய பயன்படுத்தும் உபகரணங்கள், ஷார்ப்னர் ஆகியவற்றின் வரியை 18 சதவீதமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் லட்சுமி நாராய ணன், புதுவை விவசயிகள் நலனை கருத்தில் கொண்டு சமையல் உபகரணங்கள் வரியை 12 சதவீதமாக வசூலிக்கவும், மாநில நிதி பற்றாக்குறையை கவத்தில் கொண்டு மத்திய அரசு அளித்து வரும்
ஜி.எஸ்.டி. இழப்பீடை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
- முத்திரையர் பாளையத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். புதுவை முத்திரையர் பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் கலைவாணன்(வயது48). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஷ் மற்றும் தயாநிதி ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
- உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
முத்திரையர் பாளையத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுவை முத்திரையர் பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் கலைவாணன்(வயது48). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஷ் மற்றும் தயாநிதி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர். பாப்ஸ்கோவில் பணிபுரிந்து வந்த கலைவாணனை கடந்த 6 ஆண்டுகளுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையால் பணியில் இருந்து நீக்கிவிட்டதால் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கலைவாணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு நீரழிவு நோய் ஏற்பட்டது.
இந்த நிலையில் கலைவாணன் வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி சாய்ந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலைவாணன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியின் முதுகலை கணினி அறிவியல் துறை சார்பில் தகவல் மீட்டெடுப்பு என்ற தலைப்பில் ஒருநாள் சர்தேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கல்லூரியின் துணைத்தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார்.
- 2-வது அமர்வில் பேராசிரியர் சேவுகன்மென் திறன்களை பயனுள்ள விளக்க காட்சியாக உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியின் முதுகலை கணினி அறிவியல் துறை சார்பில் தகவல் மீட்டெடுப்பு என்ற தலைப்பில் ஒருநாள் சர்தேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கல்லூரியின் துணைத்தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார்.
இந்த கருத்தரங்கில் ஜெர்மனியில் உள்ள கெசிஸ் லெய்ப்னிஸ் சமூக அறிவியல் பள்ளியின் குழு தலைவர் பிலிப் மேயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தகவல் மீட்டெ டுப்பை இயற்கை செயலாக்கத்துடன் இணைத்தல் என்பது குறித்து எடுத்துரைத்தார்.
அதை தொடர்ந்து 2 தொழில் நுட்ப அமர்வுகள் நடந்தன. முதல் அமர்வில் புதுவை பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் தலைவர் ஜெயசங்கர் மேற்படிப்புகளுக்கு தேவையான மின் வளங்கள் என்ற தலைப்பிலும், ஆராய்ச்சி மாணவர்கள் எப்படி? எங்கே? தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவது என்பதைப்பற்றியும் விளக்கினார்.
2-வது அமர்வில் பேராசிரியர் சேவுகன்மென் திறன்களை பயனுள்ள விளக்க காட்சியாக உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த சர்வதேச கருத்தரங்கில் புதுவையை சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முதுகலை கணினி துறை தலைவி கவிதா கருத்தரங்கு பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் உதயசூரியன் வரவேற்றார். உதவி பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.
- புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஊருக்குள் வர தடைவிதிக்கப்பட்ட ரவுடிகள் யாராவது வீடுகளில் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் ரவுடிகளின் வீடுகளில் அடிக்கடி அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாணரப்பேட்டை, லாஸ்பேட்டை பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த நிலையில் அரியாங்குப்பம் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட ரவுடிகளின் வீடுகளில் போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
ரவுகளின் வீடுகளில் ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?
ஊருக்குள் வர தடைவிதிக்கப்பட்ட ரவுடிகள் யாராவது வீடுகளில் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வருவதால் ரவுடிகள் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த சோதனை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். ரவுடிகள் யாராவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சோதனை மற்ற பகுதி ரவுகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான்,பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது.
- பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் உள்ளூர் கலைஞர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அரங்குகள் அமைத்து கைவினை பொருட்கள் உருவாக்கப்படுகிறது.
இங்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தனி அரங்கு உள்ளது. இங்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அழிந்து வரும் காடுகள், வனவிலங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், மீட்கும் முயற்சியாக சிற்பங்கள் உருவாக்கப்பட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான், பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது. இவை புதுவைக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர். மேலும் தங்கள் வீடுகளிலும், நிறுவனங்களிலும் சிற்பங்கள் அமைக்க தேவையான சிற்பங்களை ஆர்டர் கொடுத்தும் செல்கின்றனர்.
இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த ஆர்டர்கள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது விலங்கு மற்றும் பறவை சிற்பங்களுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் இரவு பகலுமாக கலைஞர்கள் ஆர்வத்துடன் சிற்பங்களை செய்து வருகின்றனர்.
மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மிருகங்களின் சிலைகளையும் அரங்கில் அமைக்க ஏற்பாடும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உருவான விலங்குகளின் சிலைகள் ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது பறவை, விலங்குகள் என 100 சிற்பங்கள் தயாராகி வருகிறது. இவை ஆந்திரா மாநிலத்தின் உள்ள நகர்வனம் பூங்காவில் வைக்கப்பட உள்ளது. இதேபோல் பிற மாநில பூங்காக்களுக்கும் புதுவையில் தயாராகும் சிற்பங்கள் செல்ல உள்ளது.
முருகப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த வனவிலங்குகளின் சிலைகள் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்தும், வாங்கியும் செல்கின்றனர்.






