என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pherung Festival"

    • மணக்குள விநாயகர் என்ஜினீரியங் கல்லூரி, தேசிய சிந்தனை கழகம், அகில பாரத பிரக்ஞா பிரவாஹன் தமிழ்கிளை ஆகியவை இணைந்து பாரதியார் பிறந்தநாள், 75-வது ஆண்டு சுதந்திர அமுத பெருவிழா, வள்ளலாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
    • திருவாரூர், மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், தமிழ்மொழி தொன்மை, பாரதியாரின் விடுதலை உணர்வுகள், வள்ளலார் ஆன்மிக கருத்துக்கள் ஆகியவை பற்றி சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீரியங் கல்லூரி, தேசிய சிந்தனை கழகம், அகில பாரத பிரக்ஞா பிரவாஹன் தமிழ்கிளை ஆகியவை இணைந்து பாரதியார் பிறந்தநாள், 75-வது ஆண்டு சுதந்திர அமுத பெருவிழா, வள்ளலாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் வரவேற்றார். திருவாரூர், மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், தமிழ்மொழி தொன்மை, பாரதியாரின் விடுதலை உணர்வுகள், வள்ளலார் ஆன்மிக கருத்துக்கள் ஆகியவை பற்றி சிறப்புரையாற்றினார்.

    தேசிய சிந்தனை கழகம் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் உள்பட டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கல்லூரியின் வானவில் குழுமம் மற்றும் இலக்கிய சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    ×