என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Human Rights Defense"

    • மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, ஐ.நா. மன்றம் அறிவித்துள்ள மாண்பு, சுதந்திரம், நீதியை உறுதிப்படுத்தும் உறுதி ஏற்பு தினம், வக்கீல் மோகனுக்கு மக்கள் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதுவை உப்பளம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
    • மூத்த வக்கீல் மோகன் ஏற்புரை யாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, ஐ.நா. மன்றம் அறிவித்துள்ள மாண்பு, சுதந்திரம், நீதியை உறுதிப்படுத்தும் உறுதி ஏற்பு தினம், வக்கீல் மோகனுக்கு மக்கள் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதுவை உப்பளம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

    விழாவுக்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லெனின், கந்தசாமி, கோபிநாதன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெய ச்சந்திரன், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஆசீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூத்த வக்கீல் மோகன் ஏற்புரை யாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×