என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் இயங்கி வரும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான பள்ளி உள்ளது.
    • தீ விபத்தில் பள்ளி அறையில் இருந்த நாற்காலி, மேஜைகள் மற்றும் மேற்கூரை மரக்கட்டைகள் எரிந்து சேதமானது.

    புதுச்சேரி:

    புதுவையில் இயங்கி வரும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான பள்ளி உள்ளது.

    அரவிந்தர், அன்னையின் சமாதி அருகே உள்ள கட்டிடத்தில் இந்த பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இப்பள்ளியில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த ஆசிரம நிர்வாகத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    இரவு நேரம் என்பதால் பள்ளி கூடத்தில் யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

    தொடர்ந்து தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் பெரிய கடை போலீசார் தீ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளி அறையில் வைக்கப்பட்டுள்ள வளர்ப்பு மீன்கள் தொட்டியில் உள்ள மின் வயரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    இந்த தீ விபத்தில் பள்ளி அறையில் இருந்த நாற்காலி, மேஜைகள் மற்றும் மேற்கூரை மரக்கட்டைகள் எரிந்து சேதமானது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

    • புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி யின் 2022-23-ம் கல்வியாண்டின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கான மாணவ-மாணவிகளின் முதலாமாண்டு தொடக்க விழா கல்லூரியின் கலை யரங்கில் நடைபெற்றது.
    • இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வெங்கடாசலபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி யின் 2022-23-ம் கல்வியாண்டின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கான மாணவ-மாணவிகளின் முதலாமாண்டு தொடக்க விழா கல்லூரியின் கலை யரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார்.

    இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வெங்கடாசலபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் நிறைவாக வேளாண் கல்லூரியின் முதல்வர் மொகமது யாசின் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து புல மற்றும் துறை முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதலாமாண்டு மாணவ-மாணவிகள் 300 பேர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • மணவெளி தொகுதியில் ரூ.3.95 கோடி மதிப்பில் தவளக்குப்பம் குபேர்நகரில் புதிய தார் சாலை, புதுக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிய தார் சாலை, தவளைகுப்பம் சடா நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் தார் சாலை அமைக்கப்படுகிறது.
    • முகமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ் இளநிலைப் பொறியாளர்கள், சரஸ்வதி ரகுராமன், சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதியில் ரூ.3.95 கோடி மதிப்பில் தவளக்குப்பம் குபேர்நகரில் புதிய தார் சாலை, புதுக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிய தார் சாலை, தவளைகுப்பம் சடா நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் தார் சாலை, தவக்குப்பம் மூகாம்பிகை நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதி, தவளக்குப்பம் ராஜா ராம் நகர் பகுதியில் பிரதான சாலை மற்றும் விடுபட்ட சாலைகளுக்கு புதிய தார் சாலை, ஓடைவெளி அணு கார்டன் பகுதியில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    தவளக்குப்பம் வி.ஐ.பி. நகர் பகுதியில் சாலை வசதி, டி.என்.பாளையம் பகுதியில் கருமகாரிய கொட்டகை அமைத்தல், மணவெளி மாரியம்மன் கோவில் வீதியில் புதிய தார் சாலை அமைத்தல் பூரணாங்குப்பம் ரோஜா நகர், பொன்னம்பலம் நகர், முழியன் குளம் ஆகிய பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தப்படுகிறது.

    தவளக்குப்பம் ரோகிணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்தல், தானம்பாளையம் அம்மன் நகர் அங்காளம்மன் நகர் ஆகிய பகுதிகளில் உட்புற சாலைகளுக்கு தார் சாலை அமைக்கப்படுகிறது.

    தானாம்பாளையம் வெங்கடேஸ்வரா நகர் பிரதான சாலையை தார்சாலையாக அமைத்தல், நோனாங்குப்பம் ஆற்றங்கரை பகுதி ஒன்று முதல் 3-ம் குறுக்குத் தெரு வரை சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்தல், புது குப்பம் வீரன் கோவில் பகுதியில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    நல்லவாடு சமுதாய நலக்கூடம் அருகில் உள்ள பகுதியில் சாலை அமைத்தல், தானம்பாளையம் சரஸ்வதி நகர், தவமணி நகர் ஆகிய பகுதிகளில் உட்புற சாலைகள் அமைத்தல், அபிஷேகப்பாக்கம் பகுதியில் கழிவறை வசதி அமைத்தல், அபிஷேகப்பாக்கம் லட்சுமி நகர் பகுதியில் சாலை வசதி அமைத்தல் நோனாங்குப்பம் ஸ்ரீனிவாசா அவன்யூ பகுதியில் தார் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி அமைக்கப்படுகிறது.

    தவளக்குப்பம் டி.டி. கார்டன் எம்.ஜி.ஆர். வீதி இளவரசன் நகர், ராம்ஜி கார்டன் ஆகிய பகுதியில் தார் சாலை அமைத்தல், புதுக்குப்பம் வீரன் கோவில் நடுத்தெரு கங்கை அம்மன் கோயில் பின்புறம் ஆகிய பகுதிகளில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வடிகால் வசதி அமைக்கப்படுகிறது.

    ஓடவெளி பகுதியில் கரும காரிய கொட்டகை அமைத்தல் ஆகிய பணிகளை விரைந்து மேற்கொள்ள தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ் இளநிலைப் பொறியாளர்கள், சரஸ்வதி ரகுராமன், சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பா கீரப்பாளை யத்தில் உள்ள தெப்பகுளத்தை சீரமைத்து, அழகுபடுத்தி மக்கள் பயன்படும் வகையில் புதுப்பிக்க புதுவை நகராட்சியிடம் இருந்து ரூ.30லட்சத்தில் மதிப்பீடு பெறப்பட்டது.
    • இதில் இளைஞர் அணி சார்லஸ் லாரன்ஸ், கிளை செயலாளர் ராகேஷ், கவுதமன், தி.மு.க.நிர்வா கிகள் குணசீலன், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பா கீரப்பாளை யத்தில் உள்ள தெப்பகுளத்தை சீரமைத்து, அழகுபடுத்தி மக்கள் பயன்படும் வகையில் புதுப்பிக்க புதுவை நகராட்சியிடம் இருந்து ரூ.30லட்சத்தில் மதிப்பீடு பெறப்பட்டது.

    இதை தங்களின் பாராளுமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து செய்து கொடுக்கும் படி வைத்திலிங்கம் எம்.பி.யிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

    மேலும் மதிப்பீடு பட்டியலையும் அவர் வைத்திலிங்கம் எம்.பி.யிடம் வழங்கினார். இதில் இளைஞர் அணி சார்லஸ் லாரன்ஸ், கிளை செயலாளர் ராகேஷ், கவுதமன், தி.மு.க.நிர்வா கிகள் குணசீலன், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 2011-ம் ஆண்டு மாநில அந்தஸ்து கோஷத்தை முன்வைத்து வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ரங்கசாமி, ஆட்சியின் 5 ஆண்டுகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
    • அனைத்து கட்சி கூட்டத்தையும், டெல்லியில் பிரதமர், மத்திய மந்திரிகள் சந்திப்பையும் என்ஆர்.காங்கிரஸ் புறக்கணித்தது.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த காலங்களில் காங்கிரஸ் சார்பில் சிறப்பு மாநில அந்துஸ்து கேட்டோம். அது முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது, மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.

    2011-ம் ஆண்டு மாநில அந்தஸ்து கோஷத்தை முன்வைத்து வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ரங்கசாமி, ஆட்சியின் 5 ஆண்டுகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது மாநில அந்தஸ்து கோஷத்தை ரங்கசாமி மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

    சமூக அமைப்பினர் ரங்கசாமியிடம் மாநில அந்தஸ்து கோரிக்கை மனு அளித்தபோது, நிர்வாகத்தில் கோப்புகளை அனுப்பினால் அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். காலதாமதம் செய்கின்றனர் என புலம்புகிறார். மத்திய மந்திரி கிஷன்ரெட்டி பங்கேற்ற விழாவிலும், நிர்வாக விஷயத்தில் மத்திய அரசு தடையாக இருப்பதாகக்கூறி ஆதங்கப்பட்டார்.

    2016 முதல் 2021 வரை காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை மாநில அந்தஸ்து வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். அனைத்து கட்சி கூட்டத்தையும், டெல்லியில் பிரதமர், மத்திய மந்திரிகள் சந்திப்பையும் என்ஆர்.காங்கிரஸ் புறக்கணித்தது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுக்கு பிறகு, தற்போது மாநில அந்தஸ்து வேண்டும் என ரங்கசாமி வலியுறுத்துகிறார்.

    பா.ஜனதா- என்ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம், பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என பதில் தரப்பட்டது. மாநில அந்தஸ்திற்காக ரங்கசாமி என்ன முயற்சி செய்தார்? வெறுமனே புலம்பினால் மாநில அந்தஸ்து கிடைத்துவிடுமா? புதுவை கவர்னர், முதல்-அமைச்சரோடு இணைந்து செயல்படுவதாக கூறுகிறார்.

    ஆனால் ரங்கசாமி இடையூறு விளைவிப்பதாக கூறுகிறார். இதில் எது உண்மை? ரங்கசாமிக்கு தெம்பும், திராணியும் இருந்தால் கூட்டணியைவிட்டு வெளியே வர வேண்டும். மத்திய அரசை எதிர்த்து அவர் போராட தயாரா? முன்னாள் கவர்னர் கிரண்பேடி விஷம் கொடுத்து கொன்றார், தற்போதைய கவர்னர் தமிழிசை வெல்லம் கொடுத்து கொல்கிறார். இதுதான் வித்தியாசம்.

    மாநில அந்தஸ்து விவகாரத்தில் ரங்கசாமி தற்போது நீலிகண்ணீர் வடிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவையில் இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமர்ந்தது முதல் பால் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகின்றது.
    • பாண்லே பாலின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, தனியார் நிறுவன பாலை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமர்ந்தது முதல் பால் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகின்றது.

    இதை சீரமைக்க வேண்டிய முதல்- அமைச்சர், செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. இதனால் தற்போதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மது விற்பனைக்கு தரும் முக்கியத்துவத்தை அரசு பால் விற்பனைக்கு தராமல் உள்ளது. இதனால் விற்பனை தொடர்ந்து சரிந்து. பாண்லே பாலின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, தனியார் நிறுவன பாலை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இது நீடித்தால் பாண்லே நிறுவனம் மூடும் நிலைக்கு சென்றுவிடும்.

    தொடர்ந்து பாண்லே நிர்வாகம் தள்ளாடி வருவதால் ஊழியர்கள் பாப்ஸ்கோ, பாசிக் போன்ற பாண்லேவிலும் சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் கொண்டு வருகின்றனர். பாண்லே பால் வழங்காததால், அதனை விற்பனை செய்து வரும் முகவர்களும் வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டு ள்ளனர்.

    எனவே சீரழிவுப்பாதைக்கு சென்று கெண்டிருக்கும் பாண்லேவை அரசு காப்பாற்ற வேண்டும். கூட்டுறவு நிறுவனமான பாண்லேவை அரசு அதிகாரி கள் நிர்வாகம் செய்வதால் உரிய கவனமின்றி உள்ளனர். அதாவது பாண்லே இல்லை யென்றால் வேறு இடத்தில் பணியாற்றி, நாம் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் உள்ளனர். அவர்களுக்கு பாண்லேவை மேம்படுத்தும் நோக்கம் இல்லை.

    அதுவே அங்கு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி தேர்வானவர்களைக் கொண்டு இயங்க செய்தால், அவர்களுக்கு நமது நிறுவனம், நல்ல லாபத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதனால் நிர்வாகம் சிறப்பாக செயல்படும். எனவே பாண்லே நிர்வாகத்திற்கு உடனடியாக கூட்டுறவு சங்க தேர்தலையும் அரசு நடத்த வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இயற்கை விவசாயிகளுக்கு தரசான்றிதழ் வழங்க முயற்சியெடுத்தது.
    • சான்றிதழ் பெற்ற விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்துவதற்கும், பொருளாதார நிலையை உயர்த்தி கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.

    புதுச்சேரி:

    ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இயற்கை விவசாயிகளுக்கு தரசான்றிதழ் வழங்க முயற்சியெடுத்தது.

    இதன்படி புதுவை, காரைக்கால் இயற்கை விவசாயிகளுக்கு மத்திய அரசின் பி.ஜி.எஸ். இந்தியா இயற்கை தர சான்றிதழ் ப்ரித்வி இன்டிஜினியஸ் நேச்சுரல் பார்மர்ஸ் டிரஸ்ட் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து விழிப்புணர்வுகள், பயிற்சிகள், கள

    ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புதுவை பகுதி விவசாய குழுக்களுக்கு இயற்கை தர சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் விவசாயிகளுக்கு மத்திய அரசு தர சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் ஒரு தொடக்க நிகழ்வாக இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சான்றிதழ் பெற்ற விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்துவதற்கும், பொருளாதார நிலையை உயர்த்தி கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.

    வேளாண் உற்பத்தி பொருட்களை விவசாயிகள் மதிப்பு கூடுதல் செய்து இணைய தளத்திலேயே பதிவேற்றம்

    செய்யலாம். இதனால் உலகத்தில் எந்த பகுதியிலிருந்தும் இந்த பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும். எந்த விவசாயி மூலம் விளைவிக்கப்பட்டது போன்ற விபரங்களையும் அறிந்து கொள்ளமுடியும்.

    விவசாயியும், நுகர்வோரும் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் மத்தியில் தற்போது இயற்கை விவசாய பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    இது விவசாயிகள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய முடியும். புதிதாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கையும் உத்வேகத்தையும் கொடுக்கும்.

    புதுவை அரசு இயற்கை விவசாயத்திற்கும் , விவசாயிகளுக்கும் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை தர சான்றிதழ் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் வசந்தகுமார், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய

    மா நில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால், மற்றும் இயற்கை உழவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டக்குப்பம் புதுவை -சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான புதிய உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க பூமி பூஜை விழா நடந்தது.
    • தி.மு.க. 25-வது வார்டு கவுன்சிலர், சரவணன், 6-வது வார்டு கவுன்சிலர் சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டக்குப்பம் புதுவை -சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான புதிய உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க பூமி பூஜை விழா நடந்தது.

    விழாவில் கோட்டக்கு ப்பம் நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி ‌ கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மங்கையர்க்கரசன், நகர மன்ற துணைத் தலைவர் ஜுனத்பீவி முபாரக்,

    தி.மு.க. 25-வது வார்டு கவுன்சிலர், சரவணன், 6-வது வார்டு கவுன்சிலர் சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் காமராஜ் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெட்டப்பாக்கம்:

    புதுவை நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் - அந்தராசி குப்பம் மெயின் ரோட்டில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு வாலிபர் கழுத்தை அறுத்தும், மார்பில் கத்திகுத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலை செய்யபட்ட வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் கல்மண்டபம் அருகே தமிழகப்பகுதியான அந்தராசி குப்பத்தை சேர்ந்த காமராஜ் (வயது 33) என்பதும் . திருமணமாகாத இவர் கல்மண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    நேற்று நள்ளிரவு பணி முடிந்து காமராஜ் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சம்பவம் நடந்த இடத்தில் ஒரு கும்பல் மது குடித்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டதை காமராஜ் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காமராஜை கத்தியால் கழுத்தை அறுத்தும் மார்பில் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    17 வயதுக்குட்பட்ட கல்மண்டபம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்களும் வாணரப்பேட்டையை சேர்ந்த 2 சிறுவர்களும் சேர்ந்து காமராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காமராஜ் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • ரெட்டியார்பாளை யத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மேலும் எனது தாய் கிடைக்கவில்லை என்றால் உன்னை அடித்தே கொலை செய்து விடுவேன் என்று லியோனை ஆரோக்கியராஜ் மிரட்டினார்.

    புதுச்சேரி:

    ரெட்டியார்பாளை யத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை ரெட்டியார்பா ளையம் சுதாகர் நகரை சேர்ந்தவர் லியோன் (வயது 67). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரான இவர் குடும்பத்ேதாடு பிரான்சில் வசித்து வருகிறார். அவ்வப்போது புதுவைக்கு வந்து செல்வார். அப்போதெல்லாம் புதுவையை சேர்ந்த அவரது உறவினரான ஆரோக்கி யராஜ், லியோனிடம் தகராறு செய்வார்.

    அதுபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லியோன் புதுவைக்கு வந்திருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த போது ஆரோக்கியராஜ் அத்துமீறி உள்ளே நுழைந்து எனது தாயை எங்கே அழைத்து சென்றாய் என கேட்டு லியோனை தாக்கினார்.

    மேலும் எனது தாய் கிடைக்கவில்லை என்றால் உன்னை அடித்தே கொலை செய்து விடுவேன் என்று லியோனை ஆரோக்கியராஜ் மிரட்டினார். மீண்டும் லியோனை ஆரோக்கியராஜ் தாக்கியதால் வலி தாங்காமல் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் ஆரோக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த லியோன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா கோவிலில் 5-ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
    • அதைத்தொடர்ந்து 12 மணிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் பாபா பிரசாதம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே பட்டனூரில் உள்ள ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா கோவிலில் 5-ம் ஆண்டு பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் மஞ்சள் ஆடை உடுத்தி பாபா மாலை அணிந்து 9 நாள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து வந்து கருவறைக்குள் சென்று தங்கள் கைகளாலே பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.

    இந்த அபிஷேகம் செய்தபோது பாபாவின் உருவசிலை நீல நிறமாக மாறியது கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள் .

    அதைத்தொடர்ந்து 12 மணிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் பாபா பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • புதுவையில் மோசமான செல்போன் இணைப்பு இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வேறு எந்த தனியார் நிறுவன த்திற்கும் செல்லாமல் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாகவே இருந்து வருகின்றனர்.
    • எனவே தகவல் தொழில்நுட்ப அமைச்சர் புதுவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி மற்றும் 5 ஜி வசதியை உடனடியாக வழங்கி தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பேசியதாவது:-

    புதுவையில் மோசமான செல்போன் இணைப்பு இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வேறு எந்த தனியார் நிறுவன த்திற்கும் செல்லாமல் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாகவே இருந்து வருகின்றனர். தேசிய நிறுவனத்தின் மீதான பக்தியால் அதன் சந்தாதாரர்களாகவே இருந்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3 ஜி சேவையே வழங்கி வருவதால் தொலைபேசி இணைப்புகளில் தொந்தரவு மற்றும் இண்டர்நெட் இணைப்பு மிக மெதுவாக உள்ளது.

    எனவே தகவல் தொழில்நுட்ப அமைச்சர் புதுவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி மற்றும் 5 ஜி வசதியை உடனடியாக வழங்கி தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை யூனியன் பிரதேசத்தை ஒரு மாதிரி பகுதியாக கொண்டு இந்த இரண்டு சேவைகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×