என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இயற்கை விவசாயிகளுக்கு மத்திய அரசு தர சான்றிதழ்-  தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
    X

    விவசாய குழுக்களுக்கு மத்திய அரசு தர சான்றிதழை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கிய காட்சி.

    இயற்கை விவசாயிகளுக்கு மத்திய அரசு தர சான்றிதழ்- தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்

    • ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இயற்கை விவசாயிகளுக்கு தரசான்றிதழ் வழங்க முயற்சியெடுத்தது.
    • சான்றிதழ் பெற்ற விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்துவதற்கும், பொருளாதார நிலையை உயர்த்தி கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.

    புதுச்சேரி:

    ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இயற்கை விவசாயிகளுக்கு தரசான்றிதழ் வழங்க முயற்சியெடுத்தது.

    இதன்படி புதுவை, காரைக்கால் இயற்கை விவசாயிகளுக்கு மத்திய அரசின் பி.ஜி.எஸ். இந்தியா இயற்கை தர சான்றிதழ் ப்ரித்வி இன்டிஜினியஸ் நேச்சுரல் பார்மர்ஸ் டிரஸ்ட் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து விழிப்புணர்வுகள், பயிற்சிகள், கள

    ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புதுவை பகுதி விவசாய குழுக்களுக்கு இயற்கை தர சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் விவசாயிகளுக்கு மத்திய அரசு தர சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் ஒரு தொடக்க நிகழ்வாக இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சான்றிதழ் பெற்ற விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்துவதற்கும், பொருளாதார நிலையை உயர்த்தி கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.

    வேளாண் உற்பத்தி பொருட்களை விவசாயிகள் மதிப்பு கூடுதல் செய்து இணைய தளத்திலேயே பதிவேற்றம்

    செய்யலாம். இதனால் உலகத்தில் எந்த பகுதியிலிருந்தும் இந்த பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும். எந்த விவசாயி மூலம் விளைவிக்கப்பட்டது போன்ற விபரங்களையும் அறிந்து கொள்ளமுடியும்.

    விவசாயியும், நுகர்வோரும் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் மத்தியில் தற்போது இயற்கை விவசாய பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    இது விவசாயிகள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய முடியும். புதிதாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கையும் உத்வேகத்தையும் கொடுக்கும்.

    புதுவை அரசு இயற்கை விவசாயத்திற்கும் , விவசாயிகளுக்கும் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை தர சான்றிதழ் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் வசந்தகுமார், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய

    மா நில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால், மற்றும் இயற்கை உழவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×