என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர்.
    • எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதல்வர் ரங்கசாமி வேதனையுடன் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தக்கூடாது என அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது என ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர். புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
    • முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரமோகன் மற்றும் கடலோர காவல் படை, தேசிய மாணவர் படை,முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • புதுவை செல்லிப்பட்டில் பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட படுகை அணை இருந்தது. கடந்த ஆண்டு பெய்த மழையில் செல்லிப்பட்டு படுகை அணை சேதமடைந்தது.
    • மணல் மூட்டைகளும் மழை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை செல்லிப்பட்டில் பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட படுகை அணை இருந்தது.

    கடந்த ஆண்டு பெய்த மழையில் செல்லிப்பட்டு படுகை அணை சேதமடைந்தது. இதனால் மழை வெள்ளம் தேங்காமல் வெளியேறியது. தற்காலிகமாக சீரமைக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைத்தனர். மணல் மூட்டைகளும் மழை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டது. வடகிழக்கு பருமழை காலத்திற்கு முன்பாக புதிதாக அணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    சமீபத்தில் பெய்த புயல், மழையாலும் தண்ணீர் தேங்காமல் வெளியேறது. இந்நிலையில் இன்று படுகை அணையில் நின்று அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய படுகை அணை அமைக்கும் பணியை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். படுகை அணை அமைக்க முடியாவிட்டால் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.

    • புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் இயற்கை வளங்களை போற்றும் விதமாக பசுமை தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மழலையர்கள் கொண்டு வந்த பசுமை நிற காய்கறிகளை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் இயற்கை வளங்களை போற்றும் விதமாக பசுமை தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களுக்கு பசுமை தின விழா அவசியத்தை விளக்கி கூறினார்.

    வக்கீல் ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களின் பசுமை நிற ஆடையையும் மற்றும் அவர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய பசுமை காய்கறிகளையும் மழலையர்களை பாராட்டினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மழலையர்கள் கொண்டு வந்த பசுமை நிற காய்கறிகளை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து மழலையர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியைகள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

    • முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுவை மாவட்டத்திலேயே முதன் முதலாக மாணவர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குனர் சிவகாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு கையேட்டை வழங்கினார்.

    புதுச்சேரி:

    முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுவை மாவட்டத்திலேயே முதன் முதலாக மாணவர்களுக்கு கையேடு வழங்கும் விழா, அறிவியல் கண்காட்சி, குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்ட மாணவருக்கு பரிசளிப்பு விழா மற்றும் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியல் அடங்கிய பெயர் பலகை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    பள்ளியின் துணை முதல்வர் மோகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குனர் சிவகாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்க ளுக்கு கையேட்டை வழங்கினார்.

    முன்னதாக பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பெயர்பட்டியல் அடங்கிய பலகையை திறந்து வைத்தார். பள்ளியின் பொறுப்பாசிரியை பாக்கி யலட்சுமி நன்றி கூறினார்.

    பட்டதாரி ஆசிரியை வாணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • புதுவை சட்டப்பேரவை உறுதி மொழி குழுவின் ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடந்தது.
    • சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகள் மற்றும் அவற்றில் நிறைவேற்றப்பட்டவை, நிறைவேற்ற வேண்டியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டப்பேரவை உறுதி மொழி குழுவின் ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடந்தது.

    சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் நேரு தலைமை தாங்கினார். குழு உறுப்பினர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், அனிபால் கென்னடி, சிவசங்கரன், உள்ளாட்சி துறை செயலர் வல்லவன், சட்டசபை செயலாளர் தயாளன், நகராட்சி ஆணையர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகள் மற்றும் அவற்றில் நிறைவேற்றப்பட்டவை, நிறைவேற்ற வேண்டியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    • புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
    • போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா, போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரமோகன் மற்றும் கடலோர காவல் படை, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • காரைக்காலில் 39-வது மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவிலும், புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஷ் ராகவேந்திரன் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார்.
    • இவர் அகில இந்திய அளவில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 13-வது இடத்திலும் 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில், 12-வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் 39-வது மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவிலும், புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஷ் ராகவேந்திரன் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார்.

    இதன் மூலம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாட புதுவை மாநிலம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 13-வது இடத்திலும் 17 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில், 12-வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தமிழ்நாடு மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவர் ஹரிஷ் ராகவேந்திரனை ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தியும், இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார். 

    • புதுவையிலிருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் பயணத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.
    • ஆகவே புதுவையில் குறிப்பாக உணவு மற்றும் தங்கும் விடுதிகளின் வணிகம் மிகவும் பாதிக்கப்படுவதாக உணவு விடுதிகள் சங்க நிர்வாகிகள் ெதரிவித்தனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்றத்தில் புதுவை எம்.பி. செல்வகணபதி பேசியதாவது:-

    புதுவையிலிருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் பயணத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.

    முன்பு அளிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர் 2019-க்குள் பணியை முடிக்காததால், சுற்றுலா பயணிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் இருந்தது.

    இதற்காவே அவர்கள் வேலூர் வழியாக 70 கி.மீ கூடுதலாக பயணிக்க வேண்டியதால் எரிபொருள், நேரம், விரயமாகிறது.

    ஆகவே புதுவையில் குறிப்பாக உணவு மற்றும் தங்கும் விடுதிகளின் வணிகம் மிகவும் பாதிக்கப்படுவதாக உணவு விடுதிகள் சங்க நிர்வாகிகள் ெதரிவித்தனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி பதில் அளிக்கும் போது இந்த இரண்டு வழி சாலை போடும் பணிகள் கொரோனாவின் 2 அலைகளால் தாமதமாகி விட்டன. ஆனாலும் புதிய ஒப்பந்ததாரர் மூலம் வரும் ஆண்டு மே மாதத்திற்குள் சாலை பணி முடியும் என்றார். 

    • புதுவைக்கு வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவு, நியமன எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறியுள்ளனர்.
    • எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அளிப்பதில்லை என்றும் கூறினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கூட்டணி ஆட்சி அமைந்து 1 1/2 ஆண்டாகியும் இதுவரை எம்.எல்.ஏ.க்களுக்கு கூட வாரியதலைவர் பதவி வழங்கப்படவில்லை. இது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

    எதிர்க்கட்சி தொகுதிகளில் நடைபெறும் பணிகள்கூட தங்கள் தொகுதிகளில் நடைபெறவில்லை என பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். கட்சி தலைமையிடமும் ஒரு சிலர் நேரடியாக புகார் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் புதுவைக்கு வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவு, நியமன எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் ரங்கசாமி மீது புகார் கூறியுள்ளனர். ரங்கசாமி கூட்டணி கட்சியான பா.ஜனதாவை எந்த வகையிலும் ஆலோசனை செய்யாமல் பல முடிவுகளை எடுப்பதாகவும், தன்னிச்சையாக அவர் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அளிப்பதில்லை என்றும் கூறினர். இதுகுறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கட்சித் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மத்திய மந்திரி கிஷன்ரெட்டி, உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் இதுகுறித்து தெரிவித்து, நேரம் பெற்று தருவதாக உறுதியளித்தார். அமித்ஷாவை சந்தித்து உங்கள் புகார்களை நேரடியாக தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார்.

    • உழவர்கரையில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    • இந்த நிலையில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    உழவர்கரையில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    உழவர்கரையில் புதிய மதுப்பானக்கடை அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஏற்கனவே இங்கு மதுபானக்கடைகள் உள்ள நிலையில் மேலும் இங்கு மதுப்பானகடை திறந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் புதிய மதுபானகடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான சிவசங்கரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர். பாலன் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், காங்கிரஸ் பொது செயலாளர் செல்வம் என்ற செல்வராஜ், இந்திய கம்யூனிஸ் மாநில குழு உறுப்பினர் தேவசகாயம், விடுதலை சிறுத்தை கட்சி தேவேந்தரன், தீய்தமிழன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

    இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், சமூக இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

    • புதுவை நோணாங்குப்பத்தில் உள்ள அரசு படகு குழாம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
    • கடந்த வாரத்தில் புயல் காற்று காரணமாக கொட்டகையின் ஒருபக்கம் சரிந்தது. இதையடுத்து உணவகத்தை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூடியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை நோணாங்குப்பத்தில் உள்ள அரசு படகு குழாம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படகு குழாமில் இருந்து ஆற்றின் முகத்துவாரம் வழியாக பேரடைஸ் பீச்சுக்கு செல்ல வேண்டும். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு இயக்கும் படகு மூலம் பாரடைஸ் பீச்சுக்கு சென்று காலை முதல் மாலை வரை கடலில் விளையாடி மகிழ்வர்.

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேரடைஸ் பீச்சில் பிரம்மாண்டமான கீற்றுக் கொட்டகை அமைத்துள்ளனர்.

    அங்கு உணவு வகைகள், பீர், குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் ஆகியவை விற்கப்படும். மணல்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் உணவருந்தலாம். ஒரு காபி ஷாப் மட்டும் உள்ளது. இங்கு வேறு கடைகள் இல்லை. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த உணவகத்தில்தான் உணவருந்துவர்.

    கடந்த வாரத்தில் புயல் காற்று காரணமாக கொட்டகையின் ஒருபக்கம் சரிந்தது. இதையடுத்து உணவகத்தை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூடியுள்ளது.

    இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் உணவுக்கு வழியின்றி அவதிப்படுகின்றனர். காபி ஷாப்பில் கிடைக்கும் சிற்றுண்டிகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். டிசம்பர் மாதம் என்பதால் புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    வார இறுதி மட்டுமின்றி, வார நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பாரடைஸ் பீச்சில் உள்ள உணவகத்தில் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.½ லட்சம் வரை விற்பனை நடைபெறும். இந்த விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. கீற்று கொட்டகையில் ஏற்பட்டுள்ள சிறு சரிவை உடனடியாக சரிசெய்யாமல் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் உள்ளனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு வரவுள்ள நிலையில் உடனடியாக கொட்டகையை சீரமைக்க வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்களுக்கு அரசு நிதி தருவதில்லை. தங்கள் வருவாய் மூலம் ஊழியர்கள் சம்பளம் பெற வேண்டியுள்ளது.

    ஏற்கனவே 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் கொட்டகையை உடனடியாக சீரமைக்காதது ஊழியர்களிடையே விரக்தி யை ஏற்படுத்தியுள்ளது.

    ×