என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • திருபுவனை அருகே காசுவைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • அப்போது அங்கு காசுவைத்து சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே காசுவைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு புதுநகர் கால்நடை ஆஸ்பத்திரி அருகே ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு காசுவைத்து சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கலித்தீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த ஆனந்தன்( 45) ராஜி (32) வீரமணி (40) ஜெயமணி (35) ஆறுமுகம் (30) மற்றும் கரையாம்புத்தூரை சேர்ந்த அய்யப்பன் (44) தமிழக பகுதியான மாத்தூரை சேர்ந்த பாஸ்கர் (47) என்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப்பணம் 31 ஆயிரத்து 800 மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • வேளாண், விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் கீழ் புதிய தோட்டம் நிறுவ, பராமரிக்க, மலர் சாகுபடி, கலப்பின காய்கறி, பழ பயிர்கள், வாசனை பயிர்கள் சாகுபடிக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண், விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் கீழ் புதிய தோட்டம் நிறுவ, பராமரிக்க, மலர் சாகுபடி, கலப்பின காய்கறி, பழ பயிர்கள், வாசனை பயிர்கள் சாகுபடிக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கப்படுகிறது.

    இதன்படி 182.72 எக்டேர் பரப்பில் ஆடிபட்டம் 2022-ல் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்த 540 தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.28 லட்சத்து 77 ஆயிரத்து 288 அவரவர் வங்கி கணக்கில் நேரடி பண பரிமாற்றமாக செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளை யொட்டி ஜீவானந்தபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு புதுவை அ,ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் தலைமையில் பொதுமக்கள் 150-க்கு மேற்பட்டவர்களுக்கு 3 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளை யொட்டி ஜீவானந்தபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாளையொட்டி லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஜீவானந்தபுரம் பகுதியில் மகளிர் அணி செயலாளர் காமாட்சி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு புதுவை அ,ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் தலைமையில் பொதுமக்கள் 150-க்கு மேற்பட்டவர்களுக்கு 3 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுப்ரமணியன், மகளிர் அணி இணைச்செயலாளர் லாவண்யா, சிலம்பரசன், ரகுபதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் காண்டீபன், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, இலக்கிய அணி பாலு, முன்னாள் இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், மாணவர் அணி ஜெகதீஷ், வர்த்தக அணி கணேசன், தொகுதி செயலாளர்கள் செந்தில், ரத்தினவேல், தனவேலு, தமிழ்செல்வன், ராமசந்திரன், மணவாளன், அய்யப்பன், அன்புமணி, லாஸ்பேட்டை தொகுதி இணைச் செயலாளர் பூங்குழலி, குணா, ஜெகதீஷ், புஷ்பவள்ளி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோட்டக்குப்பம் நகராட்சி சின்ன கோட்டக்குப்பம் 14-வது வார்டில் கலைஞர் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள் பூங்கா அமைக்கப்படுகிறது.
    • இதற்கான பணியை பூமி பூஜை செய்து நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் நகராட்சி சின்ன கோட்டக்குப்பம் 14-வது வார்டில் கலைஞர் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள் பூங்கா அமைக்கப்படுகிறது.

    இதற்கான பணியை பூமி பூஜை செய்து நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் மங்கயர்கரசன், நகர மன்ற துணை தலைவர் ஜீனத்பீவி முபாரக், 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஸ்டாலின் சுகுமார், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், ஜெயஸ்ரீ சுகுமார், வார்டு தி.மு.க. செயலாளர்கள் வரதன், வெங்கடேசன், நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமி இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டி அமலோற்பவம் லூர்து அகாடமி உள்ளரங்கில் நடந்தது.
    • அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆண்டோனியோஸ் பிரிட்டோ பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமி இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டி அமலோற்பவம் லூர்து அகாடமி உள்ளரங்கில் நடந்தது.

    இப் போட்டியில் டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி குளுனி சி.பி.எஸ்.இ. பள்ளி, தி நியூ ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி மற்றும் தி ஸ்டடி எக்கோல் சர்வதேச பள்ளி ஆகிய 7 பள்ளிகளும் போட்டியில் பங்கேற்றன.

    அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆண்டோனியோஸ் பிரிட்டோ பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இந்த கிறிஸ்துமஸ் பாட்டுப்போட்டிக்கு பாதரியார் லூர்து வில்சன், ஆன் டனி தாஸ் ஸ்டாலின் மற்றும் அருள் ராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.

    இப்போட்டியில் பண்ருட்டி தி நியூ ஜான் டூவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், குளூனி சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் பரிசு, பண்ரூட்டி ஜான் டூவிமெட்ரிக் மேல்நிலைபள்ளி 3-ம் பரிசும் பெற்றது.

    தூய இருதய ஆண்டவர் பசிலிகா பாதிரியார்கள், குழந்தைசாமி, டெலமோர், உப்பளம் புனித பிரான்சீஸ் சவேரியார் ஆலய பாதிரியார் அருள் புஷ்பம் மற்றும் பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான லூர்து சாமி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.

    இந்நிகழச்சியினை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்கள் மதுமிதா, பிரசன்னா மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமி ஜெயபாரதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    அமலோற்பவம் லூர்து அகாடமி மாணவி மோகனபிரியா நன்றி கூறினார்.

    • இந்தியா முழுவதும் மதுவுக்கு எதிரான கொள்கைதான் பா.ஜனதாவின் கொள்கை.
    • புதுவை மாநில பா.ஜனதாவும் அதே கொள்கையோடுதான் செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கலால்துறை சார்பில் விடுதிகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபார்கள் அமைக்க கடந்த காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது விதிமுறைகள் அகற்றப்பட்டு, மதுபார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் புதிது, புதிதாக நகர பகுதியில் பார்கள் உருவாகி வருகிறது. கோவில், குடியிருப்பு, பள்ளி, மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பார்கள் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    புதுவை அரசு புதிதாக 5 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே புதுவை மாநிலத்தில் 5 மதுபான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள் அமைவது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதோடு, குடிநீர் தட்டுப்பாடை உருவாக்கும் என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மதுபான ஆலை, மதுபார் திறக்க திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்தித்தது. எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோர், சில நாட்களுக்கு முன்பு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்து கடிதம் அளித்தனர்.

    அதில் மதுபான கொள்கையில் புதுவை பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன? என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்தியா முழுவதும் மதுவுக்கு எதிரான கொள்கைதான் பா.ஜனதாவின் கொள்கை. புதுவை மாநில பா.ஜனதாவும் அதே கொள்கையோடுதான் செயல்பட்டு வருகிறது. கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் 12 பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிலைப்பாடும் இதுதான்.

    மக்களின் மன நிலையும் மதுவுக்கு எதிராகத்தான் உள்ளது. இதனால்தான் மக்கள் திரண்டு போரட்டம் நடத்துகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பா.ஜனதா சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, மக்களின் எண்ணங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட 5 மதுபான தொழிற்சாலைகள், 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா மதுபான உரிமங்களுக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்யும் உத்தரவை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறப்பிக்க வேண்டும் என பா.ஜனதா சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முதல்-அமைச்சர் சுமூகமான தீர்வு காண வேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜனதா அரசின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    • யானை லட்சுமியின் 16-ம் நாள் நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • ஈஸ்வரன் கோவில் பின்புறம் யானை லட்சுமி வசித்த கொட்டிலில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவையின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற 33 வயது யானை இருந்தது.

    யானை லட்சுமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் அன்பை பெற்றிருந்தது. கடந்த 30-ந்தேதி யானை லட்சுமி நடைபயிற்சிக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தது.

    யானையின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். யானை லட்சுமிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும், கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் யானை லட்சுமியின் 16-ம் நாள் நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்பட்டது. ஈஸ்வரன் கோவில் பின்புறம் யானை லட்சுமி வசித்த கொட்டிலில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

    மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகிகள் சார்பில் படம், கும்பம் வைத்து, பழம் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் பலரும் விளக்கேற்றியும், மலர் தூவியும் வழிபட்டனர்.

    யானை லட்சுமியின் பாகன் சக்திவேல் தொடர்ந்து சோகமாக இருந்து வருகிறார். அவரின் குடும்பத்தினர் நினைவேந்தலுக்காக அங்கு தங்கியுள்ளனர். நேற்று இரவு யானையின் சாண வாசம் அடித்ததாக சக்திவேல் கூறினார். மேலும் யானையின் கால்தடம் 2 இடத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். இந்த இடத்திலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    • வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் மழை நீடித்தபடி உள்ளது. இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
    • தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சித்தேரி, கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் மழை நீடித்தபடி உள்ளது. இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

    மேலும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவு எட்டியது இதனால் அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தென் பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக தண்ணீர் தெளிந்த நிலையில் சென்றது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் அதிக அளவில் இருகரையும் தொட்டு செல்கிறது.

    இந்த நிலையில் பாகூரில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரே நாளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் பாகூர் பகுதி 21 ஏரிகளில் பாகூர் உள்பட 18 ஏரிகள் நிரம்பியது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சித்தேரி, கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

    சித்தேரி கொமந்தான்மேடு தடுப்பணை வழியாக யாரும் செல்லாத வகையில் போலீசார் பேரிகார்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீன் பிடித்தவர்களை போலீசார் எச்சரிக்கை அனுப்பி வைத்தனர்.

    • அம்பேத்கர் உருவப்படத்துக்கு காவி பூசி திருநீறிட்டு தமிழகத்தில் இந்து அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.
    • போராட்டத்தில் இந்து அமைப்புகள், சங் பரிவார் அமைப்புகளுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    அம்பேத்கர் உருவப்படத்துக்கு காவி பூசி திருநீறிட்டு தமிழகத்தில் இந்து அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த சம்பவத்தை கண்டித்து அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முதன்மை செயலர் தேவபொழிலன் தலைமை வகித்தார்.

    நிர்வாகிகள் தமிழ்மாறன், முன்னவன், செல்வநந்தன், அரிமாதமிழன், ஆதவன், எழில்மாறன், கார்முகில், சுடர்வாளன், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் தலையாரி, துணை அமைப்புகளின் மாநில செயலர்கள் தமிழ்வாணன், தமிழ்வளவன், அகன், திருக்குமரன், இளவரசன், அலெக்சாண்டர் மற்றும் தொகுதி செயலாளர்கள், மகளிர் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

    முடிவில் உப்பளம் தொகுதி செயலாளர் கன்னியப்பன் நன்றி கூறினார். போராட்டத்தில் இந்து அமைப்புகள், சங் பரிவார் அமைப்புகளுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

    • நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரை அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை பணியை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்.
    • பாஸ்கரன் மற்றும் ஊர் பிரமுகர்கள் தனபூபதி, பாலு, அய்யப்பன், சக்திவேல், எழிலரசன், சண்முகம் உட்பட பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரை அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை பணியை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், கல்வித்துறை முதன்மை அதிகாரி தன செல்வன் நேரு, கல்வித்துறை துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், கட்டிட ஒப்பந்ததாரர் முத்து, பாஸ்கரன் மற்றும் ஊர் பிரமுகர்கள் தனபூபதி, பாலு, அய்யப்பன், சக்திவேல், எழிலரசன், சண்முகம் உட்பட பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கினார்.

    புதுச்சேரி:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    அ.ம.மு.க. மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஏற்பாட்டியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாநில அ.ம.மு.க செயலாளர் எஸ்.டி.சேகர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் சிலம்பரசன், மகளிர் அணி செயலாளர் காமாட்சி, மூத்த நிர்வாகி ரகுபதி, ஜெ. பேரவை செயலாளர் காண்டீபன், முன்னாள் இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி.

    வர்த்தக அணி செயலாளர் கணேசன், மாணவரணி செயலாளர் ஜெகதீசன், கதிர்காமம் ராமசந்திரன் மற்றும் உழவர்கரை தொகுதி நிர்வாகிகள் லூர்து, கலியபெருமாள், அவைத்தலைவர், மீனம் முருகன், சுரேஷ், நாகுமணி, டேவிட், பிரதாப், மூலகுளம் சுரேஷ், பாவாணர் நகர் சுரேஷ், ெதய்வாணை, சகிலா, சுரேஷ், சார்ஜத், சரளா, ஆர்த்தி, உமா, லட்சுமி, மரியா, அன்புமணி வள்ளி வசந்தி, சாந்தி, உமா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக தபால் தலையை வெளியிட்டார். விழாவில், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, கவர்னர் தமிழிசை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆரோவில் செயலாளர் ஜெயந்தி ரவி, சுற்றுலாத்துறை, ஆரோவில் மற்றும் அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • தேசப்பற்றுடன், நாணயத்துடன் வாழ்வோம். அரவிந்தரின் வாழ்க்கை யையும் அன்னையின் வாழ்க்கையையும் பின்பற்றி னாலே நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

    புதுச்சேரி:

    அரவிந்தர் நினைவு தபால் தலை மற்றும் நாணய வெளியீட்டு விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக தபால் தலையை வெளியிட்டார். விழாவில், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, கவர்னர் தமிழிசை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆரோவில் செயலாளர் ஜெயந்தி ரவி, சுற்றுலாத்துறை, ஆரோவில் மற்றும் அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    மகான் அரவிந்தருக்கும் மகாகவி பாரதிக்கும் இடையில் ஆழமான நட்பு இருந்தது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அரவிந்தர் கண்ட கனவுகள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கு மட்டுமல்ல மனதிற்கும் சுதந்திரம் வேண்டும் என்றார் அரவிந்தர். அதுதான் ஜூன் 21-ந் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அரவிந்தர், தொடக்க நிலையில் தாய்மொழி கல்விதான் சிறந்தது என்று சொன்னார். அதைதான் பிரதமர் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தி வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா உலகிற்கு இணைப்பு நாடாக இருக்க வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார். ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்குகிறது. ஆகவே அரவிந்தரின் கனவு ஒவ்வொன்றும் நனவாகிக் கொண்டிருக்கிறது.

    அவர் புதுவையில் ஏற்படுத்திய ஆன்மீக புரட்சி ஆன்மாக்களை சுத்தப்படு த்துவது மட்டுமல்லாமல் மகிழ்ச்சி யான வாழ்விற்கு வழிகாட்டி கொண்டி ருக்கிறது. அதன் வழி நடப்போம். தேசப்பற்றுடன், நாணயத்துடன் வாழ்வோம். அரவிந்தரின் வாழ்க்கை யையும் அன்னையின் வாழ்க்கையையும் பின்பற்றி னாலே நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    ×