என் மலர்
நீங்கள் தேடியது "Governor's Tamilisai"
- பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக தபால் தலையை வெளியிட்டார். விழாவில், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, கவர்னர் தமிழிசை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆரோவில் செயலாளர் ஜெயந்தி ரவி, சுற்றுலாத்துறை, ஆரோவில் மற்றும் அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தேசப்பற்றுடன், நாணயத்துடன் வாழ்வோம். அரவிந்தரின் வாழ்க்கை யையும் அன்னையின் வாழ்க்கையையும் பின்பற்றி னாலே நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
புதுச்சேரி:
அரவிந்தர் நினைவு தபால் தலை மற்றும் நாணய வெளியீட்டு விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக தபால் தலையை வெளியிட்டார். விழாவில், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, கவர்னர் தமிழிசை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆரோவில் செயலாளர் ஜெயந்தி ரவி, சுற்றுலாத்துறை, ஆரோவில் மற்றும் அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
மகான் அரவிந்தருக்கும் மகாகவி பாரதிக்கும் இடையில் ஆழமான நட்பு இருந்தது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அரவிந்தர் கண்ட கனவுகள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கு மட்டுமல்ல மனதிற்கும் சுதந்திரம் வேண்டும் என்றார் அரவிந்தர். அதுதான் ஜூன் 21-ந் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அரவிந்தர், தொடக்க நிலையில் தாய்மொழி கல்விதான் சிறந்தது என்று சொன்னார். அதைதான் பிரதமர் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தி வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா உலகிற்கு இணைப்பு நாடாக இருக்க வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார். ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்குகிறது. ஆகவே அரவிந்தரின் கனவு ஒவ்வொன்றும் நனவாகிக் கொண்டிருக்கிறது.
அவர் புதுவையில் ஏற்படுத்திய ஆன்மீக புரட்சி ஆன்மாக்களை சுத்தப்படு த்துவது மட்டுமல்லாமல் மகிழ்ச்சி யான வாழ்விற்கு வழிகாட்டி கொண்டி ருக்கிறது. அதன் வழி நடப்போம். தேசப்பற்றுடன், நாணயத்துடன் வாழ்வோம். அரவிந்தரின் வாழ்க்கை யையும் அன்னையின் வாழ்க்கையையும் பின்பற்றி னாலே நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு தமிழிசை பேசினார்.






