என் மலர்
புதுச்சேரி
- புதுவை முதல் -அமைச்சர் ரங்கசாமி ஆள்தான் உயர்ந்தவர் கவர்னரிடம் அடிபணிந்து பொம்மை ஆட்சி நடத்துகிறார் என தமிழக முதல்-அமைச்சர் பேசியது நாகரீகற்ற விமர்சனம்.
- காலாப்பட்டில் உள்ள ரசாயன தொழிற்சலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை முதல் -அமைச்சர் ரங்கசாமி ஆள்தான் உயர்ந்தவர் கவர்னரிடம் அடிபணிந்து பொம்மை ஆட்சி நடத்துகிறார் என தமிழக முதல்-அமைச்சர் பேசியது நாகரீகற்ற விமர்சனம். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
துணைநிலை ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தமிழக முதல்-அமைச்சர் தெரிந்து பேச வேண்டும். எதிர்கட்சி தலைவராக இருந்த போது சட்டையை கிழித்துக் கொண்டு கவர்னரிடம் முறையிட்டவர்தான் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின். ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைபாடு, ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைபாடா?
தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும் என புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா கூறியதை விமர்சித்த முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தற்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறும் போது அது அவர்களது விருப்பம் என மழுப்புகிறார். தன்னுடைய சுயநலத்திற்காக காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக ஸ்டாலினிடம் அடமானம் வைத்து விட்டார்.
காலாப்பட்டில் உள்ள ரசாயன தொழிற்சலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு குறைந்த அளவில் இழப்பீடு வழங்கப்பட்டு பிரச்சினை மூடி மறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலாளர்கள் பயம் கலந்த பீதியுடன் பணி செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து கவர்னர், முதல்-அமைச்சர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அந்த தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- புதுவையில் கிராமப் புறத்தில் இருந்து லாஸ்பேட்டையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதனால் கிராமப்புற மாணவியர்கள் தங்கி பயில முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
அமைச்சர் சந்திரபிரி யங்காவிடம் எதிர்கட்சி தலைவர் சிவா அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கிராமப் புறத்தில் இருந்து லாஸ்பேட்டையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் காரைக்காலில் உள்ள விடுதி மூடப்பட்டுள்ளதால் புதுவை, மாகி, ஏனாமில் இருந்து காரைக்காலுக்கு கல்வி, பயில செல்லும் மாணவர்களும் பாதிக்கப்ப ட்டுள்ளனர்.
அதுபோல் வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த கிராமப்புற விடுதியில் சுமார் 250 பேர் தங்கி பயின்றனர். அந்த விடுதி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவை காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மாணவியர்கள் தங்கி பயில முடியாமல் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் ஒருநாள் வழங்கப்பட்டு வந்த அசைவ உணவு நிறுத்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் சோப்பு, பெட்ஷிட் உள்ளவைகளும் முறையாக வழங்கப்படவில்லை.
இதனால் செயல்படும் விடுதிகளில்கூட மாணவ-மாணவிகள் தங்கி, கல்வி பயிலவும் முடியவில்லை. அதுபோல் செயல்படுகின்ற விடுதிகளிலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே மூடப்பட்டுள்ள விடுதிகளை உடனடியாக புனரமைப்பு பணிகளை முடித்து திறக்க வேண்டும். செயல்படும் விடுதிகளில் உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூடப்பட்ட விடுதியையும் திறக்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள அசைவ உணவு, சோப்பு, பெட்ஷிட் உள்ளிட்டவைகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் சிவா கூறியுள்ளார்.
- புதுவை வாணரப் பேட்டையில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 35-வது தேசிய அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியது.
- இப்போட்டியை சபாநாயகர் ஏம்பலம் ெசல்வம், கென்னடி எம்.எல்.ஏ. மற்றும் பள்ளி தாளாளர் லூர்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை வாணரப் பேட்டையில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 35-வது தேசிய அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியது.
இந்த போட்டி, வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 33 மாநிலத்தை சேர்ந்த 13 வயதிற்கு உட்பட்ட 173 சிறுமிகள்-சிறுவர்கள் என மொத்தம் 504 பேர் பங்கேற்கின்றனர்.
இப்போட்டியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கென்னடி எம்.எல்.ஏ. மற்றும் பள்ளி தாளாளர் லூர்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் சிறந்த வீரர்களை தேசிய நடுவர் ரவிச்சந்திரன் தேர்வு செய்து வருகிறார். போட்டியில் வெற்றி பெறும் 40 பேருக்கு ரூ.8 லட்சம் ரொக்கம் பரிசாக பிரித்து வழங்கப்பட உள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை இரு பிரிவுகளாக போட்டி நடக்கிறது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை, புதுவை மாநில சதுரங்க சங்க தலைவர் சங்கர், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
- திராவிட மாடல் என்பதற்கு, தமிழக முதலமைச்சர் முதலில் நல்ல தமிழ் பெயர் கண்டுபிடிக்கட்டும்.
- 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து மாநிலத் தலைவராக இருந்து தற்போது இங்கு ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் திராவிட மாடல் ஆட்சி மலரும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் புதுவையில் பங்கேற்ற திருமண விழாவில் பேசினார்.
இது தொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
திராவிட மாடல் தற்போது இங்கு தேவையா? விமான நிலையம் விரிவாக்கத்துக்கு தமிழகத்திலிருந்து 300 ஏக்கர் நிலம் தான் தற்போது தேவை.
புதுவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த நிலத்தை முதலில் அவர் தரட்டும். திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு தேவையில்லை.
புதுவையில் கவர்னரின் தலையீடு என குற்றம் சாட்டுகிறார்கள். ஆளாளுக்கு தலையீடு இருக்கும் தமிழக அரசை விட கவர்னரின் தலையீடு இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. அதிகாரப்பூர்வமாக ஆட்சி முறையில் கவர்னர் பங்கெடுக்க வேண்டும். அண்ணன் ஸ்டாலின் இங்கு பேசியது சரியில்லை. ஒற்றுமையாக ஆட்சி இங்கு நடக்கிறது.
கர்நாடகத்தில்தான் முதல்-மந்திரி பொம்மை தலைமையில் ஆட்சி நடக்கிறது. புதுவையில் அல்ல. திராவிட மாடல் என்பதற்கு, தமிழக முதலமைச்சர் முதலில் நல்ல தமிழ் பெயர் கண்டுபிடிக்கட்டும். அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்பதுதான் திராவிட மாடலோ? 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து மாநிலத் தலைவராக இருந்து தற்போது இங்கு ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டின் வளர்ச்சி பயணத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற நாம் அனைவரும் தயாராவோம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மகரிஷி அரவிந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு அரவிந்தருக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. இத்தகைய முயற்சிகள் நாட்டிற்கு புதிய ஆற்றலையும் வலிமையையும் தரும். சில தலைசிறந்த தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து, தேசத்தின் ஆன்மாவிற்கு புத்துயிரூட்டினர். மகரிஷி அரவிந்தர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ஆகியோரது வாழ்வில் நிகழ்ந்த பல முக்கியமான சம்பவங்கள், மக்களின் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

இந்தியா தனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் எந்தளவுக்கு பின்னிப்பிணைந்த நாடு என்பதை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. அத்தகையை சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. மொழி, கலாச்சாரம் ஆகிய வேறுபாடுகளைக் களைந்து இளைஞர்கள் ஒன்றிணைந்து இருப்பதை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டின் வளர்ச்சி பயணத்தில் அனைவரது கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகின் முன்பு, இந்தியாவை முதலிடத்திற்கு முன்னேற்றி நம்முடைய கலாச்சாரத்தை பெருமிதத்துடன் வெளிப்படுத்துவதற்காக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும். வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற நாம் அனைவரும் தயாராவோம். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
- புதுவை மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட மொத்தம், சில்லறை விற்பனை மதுபான கடைகள் உள்ளன.
- இக்கடைகள் செயல்படுவதற்கான விதிமுறைகள் கலால் துறையின் மூலம் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட மொத்தம், சில்லறை விற்பனை மதுபான கடைகள் உள்ளன. இக்கடைகள் செயல்படுவதற்கான விதிமுறைகள் கலால் துறையின் மூலம் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
நெடுஞ்சாலைகள், வழி பாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகளில் மதுபான கடைகள் செயல் பட முடியாத நிலையில் விதிமுறைகள் இருந்தது.
தற்போது ஆளும் என். ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசாங்கம் மாநில மக்கள் நலனை பற்றி சிறிதும் சிந்திக்காமல் மதுபான கடை உரிமையாளர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு விதிமுறைகளை மாற்றியுள்ளது.
புதுவையின் அனைத்து சாலைகளிலும் ஏராளமான மதுக்கடைகள் உள்ள நிலையில் மேலும் 100 மதுபான கடைகளுக்கு புதியதாக உரிமம் வழங்கிடவும் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே ரெஸ்ட்டோ பார் மற்றும் டி.ஜே. நடனம் நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே புதிய மதுபான கடைகளை அனுமதிக்கும் செயலினை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான புதிய மதுபான கடைகளுக்கான அரசு உரிமங்களை வழங்க கூடாது. புதியதாக வழ ங்கிய உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மணவெளி தொகுதி டி.என்.பாளையம் பகுதியில் மலட்டாறு பாலம் உள்ளது.
- இந்தப் பாலத்தில் புதுவை பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு மழை நீர் சேகரிப்பதற்காக தடுப் பணை அமைத்துள்ளனர்.
புதுச்சேரி:-
மணவெளி தொகுதி டி.என்.பாளையம் பகுதியில் மலட்டாறு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் புதுவை பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு மழை நீர் சேகரிப்பதற்காக தடுப் பணை அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத் தடுப்பணையை ஆய்வு செய்தார். அப்போது தடுப்பணையில் வைக்குப்பட்டிருந்த ரூ.1லட்சம் மதிப்பிலான ஷட்டரில் இரும்பு கம்பிகள் அறுக்கப்பட்டு திருடு போனது தெரியவந்தது. இதனால் அதன்மூலம் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரும் வெளியேறிவிட்டது.
இது சம்பந்தமாக தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் தடுப்ப ணையில் இரும்பு கம்பிகளை திருடிய டி.என். பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் , சூர்யா மற்றும் போஸ்தரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் அப்பகுதி வீடுகளில் இருந்த 4 மின்மோட்டார்கள், மினி லாரியில் இருந்த பேட்டரி பொருட்களும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1லட்சம் மதிப்புள்ள அந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- புதுவை பி.எஸ்.என்.எல். சிறப்பு விற்பனை முகாம் நாளை 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- காமராஜர் நகர் பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றில் முகாம் நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை பி.எஸ்.என்.எல். சிறப்பு விற்பனை முகாம் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
மேட்டுப்பாளையம், சுல்தான்பேட்டை, திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, எல்லைபிள்ளைசாவடி, கரிக்கலாம்பாக்கம், முதலியார்பேட்டை பஸ் நிறுத்தம், வில்லியனூர் பொது தொலைபேசி நிலையம், காமராஜர் நகர் பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றில் முகாம் நடக்கிறது.
இங்கு ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சிம் இலவசமாக வழங்கப்படும்.
புதிய சிம்கார்டில் 45 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்கிலும் இலவசமாக பேசலாம். நாள்தோறும் 2ஜி.பி. டேட்டா 100 எஸ்.எம்.எஸ் இலவசம். பாரத் பைபர் நுழைவு பிளான் ரூ.329 முதல் வழங்கப்படும்.
இந்த தகவலை பி.எஸ்.என்.எல். முதன்மை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
- நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது தொடர்பாக நேற்று மாலை இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
- இந்த சம்பவம் காரணமாக அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது தொடர்பாக நேற்று மாலை இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கரியமாணிக்கம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்ப்பட்ட கடைகள் இன்றும் 2-வது நாளாக அடைக்கப்பட்டுள்ளது.கலவரம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் கடையை திறக்காமல் உள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு பதட்டமும் உருவாகியுள்ளது. இதையடுத்து போலீசார் அனைத்து சந்திப்புகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
- திருபுவனை அருகே தமிழகப் பகுதியான குயிலா பாளையம் கிராமம் உள்ளது.
- இந்த கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே தமிழகப் பகுதியான குயிலா பாளையம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் குயிலா பாளையத்திலிருந்து செல்லிப்பட்டு வழியாக புதுவைக்கு செல்ல பம்பை ஆற்றின் தரைப்பாலத்தைக் கடந்தே சென்று வந்தனர்.
இந்நிலையில் தற்பொழுது பெய்த மழையின் காரணமாக பம்பை ஆற்றில் தரைபாலத்தை மூழ்கடித்தவரே தண்ணீர் செல்கிறது.
ஆனால் இந்த ஆபத்தை உணராமல் அவ்வழியாக வாகனங்களிலும் நடந்தும் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அதிக தண்ணீர் வரத்து ஏற்பட்டால் பொதுமக்கள் வாகனத்துடன் ஆற்றில் அடித்துச் செல்லும் சூழல் உள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்பு அமைத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவேண்டும்.
மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பெய்த மழையின் காரணமாக தரை பாலத்தை இரு கரையிலும் தண்ணீர் மூழ்கடித்து சென்றது. இதனை அடுத்து கண்டமங்கலம் போலீசார் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்லாத வண்ணம் கழிகளால் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில் ஊசுட்டேரி அருகே உள்ள போகோ லேண்ட் வளாகத் தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கருடா என்ற பெயரில் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டு உள் ளது.
- விழாவுக்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில் ஊசுட்டேரி அருகே உள்ள போகோ லேண்ட் வளாகத் தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கருடா என்ற பெயரில் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டு உள் ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு உயிரியல் பூங்காவை திறந்து வைத்து, அங்குள்ள பறவைகள், விலங்குகளை பார்வை யிட்டார்.
விழாவில் முன்னாள் சபாநாயகர் சபாபதி, ஆச்சாரியா கல்விக்குழும தலைவர் அரவிந்தன், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுவையில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் 'குழந்தைகளை கவரும் வகையில் அரிய வகை சிறிய விலங்குகள், பறவைகள், வண்ண மீன்கள், பட்டாம்பூச்சி பூங்கா ஆகியவை உள்ளன. சிறப்பம் சங்களாக குதிரை, ஒட்டகம், நெருப்புக்கோழி, பஞ்சவர்ண கிளி வகைகள், வெளிநாட்டு புறாக்கள், நாட்டு நாய்கள், வெளிநாட்டு நாய்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் வண்ண வாத்துகள், பலவகையான கோழிகள், முயல், ஆமை உள்ளிட்டவைகளும் உள்ளன.
- புதுவயைில் மத்திய அரசின் ஊரக வளாச்சி துறையின் வழிகாட்டுதலுடன் இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- இந்த நிறுவனம் சார்பில் இலவச ஏ.சி. மற்றும் பரிட்ஜ் பழுதுநீக்குதல் பயிற்சி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.
புதுச்சேரி:
புதுவயைில் மத்திய அரசின் ஊரக வளாச்சி துறையின் வழிகாட்டுதலுடன் இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் இலவச ஏ.சி. மற்றும் பரிட்ஜ் பழுதுநீக்குதல் பயிற்சி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. 30 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சிக்கு 10-ம் வகுப்பு வரை பயின்ற 40 வயதுக்குட்பட்டவர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி திட்ட பாடங்கள் ஸ்கில் இந்தியா பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்டது ஆகும்.
புதுவை யில் கடந்த 12 வருடங்களாக 8,552 இளை ஞர்களுக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய அரசு ஏ.ஏ. சான்றிதழ் அளித்து பாரட்டியுள்ளது.
இதில் சுய தொழில் பயிற்சியுடன் கடன் பெறவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார்.






