என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Chess Tournament"

    • புதுவை வாணரப் பேட்டையில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 35-வது தேசிய அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியது.
    • இப்போட்டியை சபாநாயகர் ஏம்பலம் ெசல்வம், கென்னடி எம்.எல்.ஏ. மற்றும் பள்ளி தாளாளர் லூர்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப் பேட்டையில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 35-வது தேசிய அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியது.

    இந்த போட்டி, வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 33 மாநிலத்தை சேர்ந்த 13 வயதிற்கு உட்பட்ட 173 சிறுமிகள்-சிறுவர்கள் என மொத்தம் 504 பேர் பங்கேற்கின்றனர்.

    இப்போட்டியை சபாநாயகர் ஏம்பலம்  செல்வம், கென்னடி எம்.எல்.ஏ. மற்றும் பள்ளி தாளாளர் லூர்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்போட்டியில் சிறந்த வீரர்களை தேசிய நடுவர் ரவிச்சந்திரன் தேர்வு செய்து வருகிறார். போட்டியில் வெற்றி பெறும் 40 பேருக்கு ரூ.8 லட்சம் ரொக்கம் பரிசாக பிரித்து வழங்கப்பட உள்ளது.

    காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை இரு பிரிவுகளாக போட்டி நடக்கிறது.

    இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை, புதுவை மாநில சதுரங்க சங்க தலைவர் சங்கர், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×