search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists suffer"

    • புதுவை நோணாங்குப்பத்தில் உள்ள அரசு படகு குழாம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
    • கடந்த வாரத்தில் புயல் காற்று காரணமாக கொட்டகையின் ஒருபக்கம் சரிந்தது. இதையடுத்து உணவகத்தை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூடியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை நோணாங்குப்பத்தில் உள்ள அரசு படகு குழாம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படகு குழாமில் இருந்து ஆற்றின் முகத்துவாரம் வழியாக பேரடைஸ் பீச்சுக்கு செல்ல வேண்டும். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு இயக்கும் படகு மூலம் பாரடைஸ் பீச்சுக்கு சென்று காலை முதல் மாலை வரை கடலில் விளையாடி மகிழ்வர்.

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேரடைஸ் பீச்சில் பிரம்மாண்டமான கீற்றுக் கொட்டகை அமைத்துள்ளனர்.

    அங்கு உணவு வகைகள், பீர், குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் ஆகியவை விற்கப்படும். மணல்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் உணவருந்தலாம். ஒரு காபி ஷாப் மட்டும் உள்ளது. இங்கு வேறு கடைகள் இல்லை. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த உணவகத்தில்தான் உணவருந்துவர்.

    கடந்த வாரத்தில் புயல் காற்று காரணமாக கொட்டகையின் ஒருபக்கம் சரிந்தது. இதையடுத்து உணவகத்தை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூடியுள்ளது.

    இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் உணவுக்கு வழியின்றி அவதிப்படுகின்றனர். காபி ஷாப்பில் கிடைக்கும் சிற்றுண்டிகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். டிசம்பர் மாதம் என்பதால் புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    வார இறுதி மட்டுமின்றி, வார நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பாரடைஸ் பீச்சில் உள்ள உணவகத்தில் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.½ லட்சம் வரை விற்பனை நடைபெறும். இந்த விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. கீற்று கொட்டகையில் ஏற்பட்டுள்ள சிறு சரிவை உடனடியாக சரிசெய்யாமல் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் உள்ளனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு வரவுள்ள நிலையில் உடனடியாக கொட்டகையை சீரமைக்க வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்களுக்கு அரசு நிதி தருவதில்லை. தங்கள் வருவாய் மூலம் ஊழியர்கள் சம்பளம் பெற வேண்டியுள்ளது.

    ஏற்கனவே 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் கொட்டகையை உடனடியாக சீரமைக்காதது ஊழியர்களிடையே விரக்தி யை ஏற்படுத்தியுள்ளது.

    • பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன.
    • படகு சவாரி நிறுத்தப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, மஞ்சூர், கூடலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஊட்டி நகரில் மழை பெய்ததால், ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்துக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்

    தொடர் மழையால் வழக்கத்தை விட கடுங்குளிர் நிலவியது. குளிரை போக்க சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை அணிந்தபடியும், மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்த படியும் சுற்றுலா தலங்களை கொட்டும் மழையிலும் கண்டு ரசித்தனர்.

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வந்தனர். பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. பலத்த மழை காரணமாக சிம்ஸ் பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.

    படகுகள் அனைத்தும் கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டன. மேலும் மழையால் மலர்கள் அழுகி வருகின்றன தொடர் மழை காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணி முடங்கியது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்ததால், கடும் பனிமூட்டம் நிலவியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அடர்ந்த வனப்பகுதியையொட்டி மலைப்பாதை உள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி சென்றனர்.

    ×