என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பசுமை தின விழா கொண்டாட்டம்
    X

    நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் நடந்த பசுமை தின விழாவில் கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், வக்கீல் ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்று மழலையர்களை பாராட்டிய காட்சி.

    பசுமை தின விழா கொண்டாட்டம்

    • புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் இயற்கை வளங்களை போற்றும் விதமாக பசுமை தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மழலையர்கள் கொண்டு வந்த பசுமை நிற காய்கறிகளை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் இயற்கை வளங்களை போற்றும் விதமாக பசுமை தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களுக்கு பசுமை தின விழா அவசியத்தை விளக்கி கூறினார்.

    வக்கீல் ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களின் பசுமை நிற ஆடையையும் மற்றும் அவர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய பசுமை காய்கறிகளையும் மழலையர்களை பாராட்டினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மழலையர்கள் கொண்டு வந்த பசுமை நிற காய்கறிகளை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து மழலையர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியைகள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×