என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாறைகற்கள் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் -  அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ.மனு
    X

    மீன் வளத்துறை இணை இயக்குனரிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

    பாறைகற்கள் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ.மனு

    • உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. மீனவளத்துறை இணை இயக்குனர் தெய்வ சிகாமணியை சந்தித்து மனு அளித்தார்.
    • அதில் வம்பா கீராப்பாளையத்தில் பாறைகற்களை கொட்டி சீரமைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. மீனவளத்துறை இணை இயக்குனர் தெய்வ சிகாமணியை சந்தித்து மனு அளித்தார்.

    அதில் வம்பா கீராப்பாளையத்தில் பாறைகற்களை கொட்டி சீரமைக்க வேண்டும். காலாப்பட்டில் தற்போது கற்கள் கொட்டி சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. அப்பணி நடக்கும் போதே உப்பளம் தொகுதியிலும் பாறைகற்களை கொட்டி சீரமைக்க வேண்டும்.

    பழைய துறைமுகத்தில் இடிந்த பாலத்தை புனரமைப்பு செய்ய வேண்டும்.

    சுனாமி நினைவு சின்னம் அமைத்து கொடுக்க வேண்டும். என கூறியிருந்தார். மேலும் பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர், கண்காணிப்பு பொறியாளர், நீர் பாசன பிரிவு செயற்பொறியாளர் துறை முக செயற்பொறியாளர் ஆகியோரிடமும் மனுக்கள் அளித்து உடனே பணிகளை முடித்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×