என் மலர்
நீங்கள் தேடியது "robbing money"
- புதுவை ரோடியர் மில் திடலில் தனியார் நிறுவன ஊழியரை உருட்டு கட்டையால் தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- புதுவை நயினார் மண்டபம் வள்ளலார் நகர் காவேரி வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்
புதுச்சேரி:
புதுவை ரோடியர் மில் திடலில் தனியார் நிறுவன ஊழியரை உருட்டு கட்டையால் தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை நயினார் மண்டபம் வள்ளலார் நகர் காவேரி வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் புதுவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
புதுவை-கடலூர் சாலையில் கோர்ட்டு எதிரே வந்த போது செல்போனில் அழைப்பு வந்ததால் ரோடியல் மில் திடலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென 3 வாலிபர்கள் உருட்டு கட்டையுடன் வந்தனர். அவர்கள் சிவக்குமாரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
இதனால் நிலைகுலைந்து போன சிவக்குமார் ஒன்றும் புரியாமல் தவித்துகொண்டிருந்த வேளையில் அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.8 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்து கொண்டு சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிவக்குமார் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிவக்குமார் விசாரித்த போது பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை கொள்ளையடித்து சென்றவர்கள் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த கணேஷ், ரோடியர்பேட்டை சேர்ந்த சக்திவேல் மற்றும் ஷாருக்கான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிவக்குமார் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்து சென்ற 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.






