என் மலர்
புதுச்சேரி

தலைமை செயலகத்தை நோக்கி வந்த ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.
ரேஷன்கடை ஊழியர்கள் ஊர்வலம் - ஆர்ப்பாட்டம்
- புதுவையில் ரேஷன்கடைகள் கடந்த ஆட்சியில் இருந்து மூடிக்கிடக்கிறது. ரேஷன்கடை ஊழியர்க ளுக்கு 50 மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
- ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கியவீதிகளின் வழியாக தலைமை செயலகம்நோக்கி வந்தது.
புதுச்சேரி:
புதுவையில் ரேஷன்கடைகள் கடந்த ஆட்சியில் இருந்து மூடிக்கிடக்கிறது.
ரேஷன்கடை ஊழியர்களுக்கு 50 மாத சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை ஏற்கனவே நடத்தி வருகின்ற னர். கவர்னர், முதல்-
அமைச்சர், அமைச்சர்களை சந்தித்து மனுவும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் பாரதிய புதுவை நியாய விலை கடை ஊழியர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தினர் தட்டாஞ்சாவடி தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரேமானந்த், இணை செயலாளர்கள் வினோத்குமார், சக்திவேல், தட்சிணாமூர்த்தி, பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கியவீதிகளின் வழியாக தலைமை செயலகம்நோக்கி வந்தது. போலீசார் அவர்களை ஆம்பூர் சாலை- அம்பலத்தடையார் மடத்து வீதி சந்திப்பில் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடிமைப்பொருள் வழங்கல்துறையில் ஊழியர்களை இணைத்து சம்பளம் வழங்க வேண்டும். நேரடி பண பரிமாற்ற திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு 7 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






