search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில அந்தஸ்து பற்றி கவர்னருக்கு ஞானம் இல்லை-முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    மாநில அந்தஸ்து பற்றி கவர்னருக்கு ஞானம் இல்லை-முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு

    • புதுவையில் மாநில அந்தஸ்தில் நடப்பதே யூனியன் பிரதேச அந்தஸ்திலும் நடக்கிறது என கவர்னர் கூறியுள்ளது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களின் ஆட்சி நடந்து முழு ஜனநாயகம் நிலவும். யூனியன் பிரதேசத்தில் கிடைக்காத பல்வேறு நன்மைகள் மாநிலம் என்ற அளவில் புதுவைக்கு கிடைக்கும். அரசியல் தகுதி உயரும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மாநில அந்தஸ்தில் நடப்பதே யூனியன் பிரதேச அந்தஸ்திலும் நடக்கிறது என கவர்னர் கூறியுள்ளது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது. மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டால் புதுவைக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி அடிப்படை ஆழ்ந்த ஞானம் இல்லாமல் அவர் பேசியுள்ளார்.

    மாநில அந்தஸ்து என்பது ஒரு புனிதமான மகத்துவமான உரிமையை மக்களுக்கு அளிக்கக்கூடியது. அது ஜனநாயக , சமூக, பொருளாதார, கலாச்சார பண்புகளை உள்ளடக்கிய சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.

    மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுவை மண்ணின் மைந்தர்களின் சொத்தாக மாறும். புதுவை யாருக்கும் அடிமை இல்லை என்ற நிலை மாறும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களின் ஆட்சி நடந்து முழு ஜனநாயகம் நிலவும். யூனியன் பிரதேசத்தில் கிடைக்காத பல்வேறு நன்மைகள் மாநிலம் என்ற அளவில் புதுவைக்கு கிடைக்கும். அரசியல் தகுதி உயரும். சட்டமன்றத்திற்கு தன்னாட்சி உரிமை கிடைக்கும். சட்டமன்றத்திற்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு ஏற்படும். நிதிநிலை பல வகைகளில் மேம்படும்.

    திட்டக்குழு, மாநில பணியாளர் ஆணையம், உயர்நீதிமன்ற கிளை. வரவு செலவு திட்டத்தை புதுவையிலேயே நிறைவேற்றுவது, சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்துவது, சுதந்திரமான வேளாண் கொள்கை தொழில் கொள்கை மூலதனக் கொள்கை, வீடு மற்றும் நிலக் கொள்கைகள், வறுமையையும் வேலையின்மையையும் தீர்ப்பதற்கான திட்டங்கள் போன்ற எண்ணற்ற நன்மைகள் மா நிலத்தில் கிடைக்கும். இவ்வளவு நன்மைகளையும் யூனியன் பிரதேசம் என்ற முறையில் புதுவை அளிக்கிறதா என கவர்னர் நேர்மையாக விளக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×