என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
    • வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் கைலாசம் மதுசூதனன், முதுகலை- கணினித்துறை தலைவர் ராமலிங்கம், பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து, கொண்டனர்.

    புதுச்சேரி:
    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரியோடு, ரெட்பாக்ஸ் எஜூகேஷன் நிறுவனம் இணைந்து கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.

    எம்.சி.ஏ., மாணவர்களுக்கு மென்பொருள் தொழில்நுட்பம், கார்ப்ரேட் பயிற்சி, பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆங்கில புலமைக்கான பயிற்சி, மென்பொருள் கருவியிலான பயிற்சியை மொபைல் மற்றும் இணையவழி பயன்பாட்டு தளம் வழியாக வழங்குதல், வளாக வேலை வாய்ப்பிற்காக இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.

    ரெட்பாக்ஸ் எஜூகேஷன் நிறுவன இயக்குனர்நிர்மலேஷ்வரன், கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் கூட்டு புரிந்துணர்வில் கையெழுத்திட்டனர். பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறி வழகர், வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் கைலாசம் மதுசூதனன், முதுகலை- கணினித்துறை தலைவர் ராமலிங்கம், பேராசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து, கொண்டனர்.

    • தொழில்நுட்ப ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
    • புதுவை அரசின் உயர்கல்வி துறை அதனை ஏற்க மறுப்பது ஆசிரியை சமூகத்தின் மன வலியை மேலும் அதிகரிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரி சங்க தலைவர் பேராசிரியர் செல்வராஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் 65 வயது அடைந்த உடன் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் பேராசிரியர்கள் 62 வயதில் மிகவும் மன வேதனையுடன் ஓய்வு பெறும் சூழ்நிலை உள்ளது.

    62 வயதிற்கு பின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் தங்கள் உரிமைகளை நீதிமன்றத்தில் மூலம் வாதாடி பெற்று வந்தாலும் புதுவை அரசின் உயர்கல்வி துறை அதனை ஏற்க மறுப்பது ஆசிரியை சமூகத்தின் மன வலியை மேலும் அதிகரிக்கிறது.

    இதுகுறித்து ஆசிரியர் சங்கம் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்து முறையிட்ட போது எங்கள் கோரிக்கை நியாயமானது என்று கூறுகிறார் என்றாலும் ஆனால் எந்த சக்தி இதற்கான அரசாணையை வெளியிடாமல் தடுக்கிறது என்று தெரியவில்லை.

    மாநில அரசின் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு இந்த ஓய்வு வயது 2016 முதல் அமல்படுத்தப் பட்டிருக்கும் போது மாநிலத்தின் மணி மகுடமாக விளங்கும் புதுவை தொழில் நுட்பக் கழக பேராசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சாக்கு பையில் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர்.
    • தப்பியோடிய முகிலன், சங்கர் ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் முதலியார்பேட்டை 100 அடி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அனிதா நகரில் ஒரே பைக்கில் வந்த 5 பேரை தடுத்து நிறுத்தினர். அவர்களில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    மற்ற 3 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். இதையடுத்து நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தியை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் உருளையன் பேட்டை கென்னடி நகர் ஜோயல் (வயது24) ராஜா நகர் பத்பநாபன் (25), கோவிந்து சாலை கார்த்திகேயன் என்ற குள்ள கார்த்தி (20) என்பதும், தப்பி சென்றவர்கள் அரியாங்குப்பம் முகிலன் (28) மற்றும் முத்தியால் பேட்டை சங்கர்(28) என்பது தெரியவந்தது.

    பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் தப்பியோடிய முகிலன், அரியாங்குப்பம் ஜிம் பாண்டியன் கொலை வழக்கில் ஜெயிலில் இருந்தபோது, அங்கிருந்த மற்றொரு ரவுடியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த முகிலன், தன்னிடம் தகராறு செய்த ரவுடியை தீர்த்து கட்டுவதற்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து பைக்கில் சுற்றி வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய முகிலன், சங்கர் ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    • கலெக்டர் குலோத்துங்கன் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் திடீரென்று ஆய்வு செய்து வருகிறார்.
    • 2 மணி நேரம் பாடம் நடத்தி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனையும் வழங்கி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மிகவும் பின்தங்கி இருந்தது. இதனால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதமும் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் காரைக்காலில் அரசு பள்ளிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனுக்கு பொது மக்களிடம் இருந்து புகார் வந்தது. இதனை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர்களை மாதந்தோறும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் திடீரென்று ஆய்வு செய்து வருகிறார்.

    மேலும் மாணவர்களிடம் குறைகளும் கேட்டு வந்தார். தினந்தோறும் கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு சென்று 2 மணி நேரம் பாடம் நடத்தி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனையும் வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் காரைக்கால் அம்பகரத்தூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்ற கலெக்டர் குலோத்துங்கன் மாணவர்களிடம் குறைகளை கேட்டார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் குலோத்துங்கன் இயற்பியல் பாடம் நடத்தினார். இதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர். 

    • போலி ஆவணத்தை பதிவு செய்த சார் பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
    • போலி பத்திரம் பதிவு செய்தபோது பதிவுத்துறை இயக்குனராக இருந்த ரமேஷ், புதுவை பதிவாளராக இருந்த பாலாஜி ஆகியோரும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    மேலும் போலி ஆவணத்தை பதிவு செய்த சார் பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் போலி பத்திரம் பதிவு செய்தபோது பதிவுத்துறை இயக்குனராக இருந்த ரமேஷ், புதுவை பதிவாளராக இருந்த பாலாஜி ஆகியோரும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த நிலையில் நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜிலென்ஸ் மூலம் கவர்னர், தலைமை செயலருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

    இதையடுத்து 2 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    நில அளவைத்துறை இயக்குனர் பதவி தெற்கு சப்-கலெக்டர் முரளிதரனுக்கும், மாவட்ட பதிவாளர் பதவி வடக்கு சப்-கலெக்டர் கந்தசாமிக்கும், மீன்வளத்துறை இயக்குனர் மாதவி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குனர் முத்துமீனாவுக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கழக இயக்குனர் பொறுப்பு பதவி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

    போலி பத்திரம் தயாரிக்க உதவிய புதுவை சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்த ரியல்எஸ்டேட் புரோக்கர் பாலமுத்து வேல்(76), குருசுகுப்பம் சிவராமன்(49) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதனால் இவ்வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா வும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான அனந்தராமன் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய காங்கி ரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூரு தீ்ர்ப்பு வழங்கியதை கண்டித்து, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார், முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் அரசு கொறடாவும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான அனந்தராமன் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன் விஜயவேணி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரவி, சங்கர், பூரணாங்குப்பம் காங்கிரஸ் கமிட்டி ராஜ சேகரன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த பாபு, ஒருங்கினைப்பாளர் தேவதாஸ், ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர் மோகன்தாஸ், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் முத்துராமன் மற்றும் பல்வேறு மாநில தொகுதி நிர்வாகிகள் மற்றும் மகளீர் காங்கிரஸார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
    • குடியிருப்பு ஒட்டிய பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் செல்போன் நிறுவனம் 5-ஜி டவரை நிறுவி வருகிறது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே குடியிருப்பு அருகில் தனியார் 5-ஜி செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் தெரிவித்ததால் செல்போன் டவர் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட ஜவகர் நகர் அருகே கைலாசநாதர் நகர் உள்ளது. இந்தப் பகுதியில் குடியிருப்பு ஒட்டிய பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் செல்போன் நிறுவனம் 5-ஜி டவரை நிறுவி வருகிறது. கடந்த 10 நாட்களாக செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வரும் விரைவில் டவர் அமைக்க குழி தோண்டும் போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து செல் போன் டவர் அமைக்கும் பணி முடிந்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்க டேசன் தலைமையில் அங்கு சென்று செல்போன் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அப்போது செல்போன் டவரை முற்றுகையிட்ட பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். மேலும் செல்போன் டவர் அமைக்கும்பணி நிறுத்த ப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
    • டாக்டர் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். பிறகு கோடி ஏற்றுதல், ஜோதி ஓட்டம், மாணவர்களின் கொடி அணிவிப்பு நடந்தது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷகல்ல  ன் ரிசர்ச் பவுண்டேஷன் நிகர் நிலை பல்கலைக்கழ கத்தின கீழ் செயல்படும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில் விளையாட்டு திருவிழா தொடக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளின் டீன் . பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி ஜோதி விளக்கு ஏற்றி வைத்து சுழற்கோப்பையை அறிமுகம் செய்து வைத்து தலைமை உரையாற்றினார். இயக்குனர் பொறுப்பு ஆண்ட்ரூ ஜான் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக அர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் சாம்பியன் பாஸ்கரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன் ராகேஷ் சேகல் , முன்னாள் டீன்.டாக்டர் கொட்டூர், கல்வி ஆராய்ச்சி யின் டீன் மகாலட்சுமி மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் குராக் குருவில்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது சிறப்பு இருந்தனர் விருந்தினர்களை டீன். டாக்டர் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். பிறகு கோடி ஏற்றுதல், ஜோதி ஓட்டம், மாணவர்க ளின் கொடி அணிவிப்பு நடந்தது. பின்னர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, விஷ்ணு வர்தன், நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஐயம்மா, டாக்டர் சவீதாபேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • புதுவை அரசுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கண்டனம்
    • தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தில் வன்மு றை கலாச்சாரத்தை ஒழிக்க, புதுவை அரசு காலியாக இருக்கின்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு களை ஏற்படுத்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதன் விளைவாக அரசு அறிக்கை வெளியிட்டது.

    குறிப்பாக புதுவை அரசில் இருக்கின்ற குருப்"பி" பணியிடங்களில் எம்.பி.சி. எனப்ப டும் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு போலீஸ்துறை உதவியாளர் பணியிடங்கள், போக்குவரத்து துறை ஆய்வாளர் பணியிடங்கள், வேளாண்துறையில் பொறியாளர், வேளாண் அதிகாரி மற்றும் பல்வேறுநிலை அதிகாரிகள், புள்ளியியல் துறையில் திட்டமிடல் அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதன் விளைவாக எதிர்க்கட்சிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியதன் பலனாக என்.ஆர். காங்கிரஸ் அரசு குருப்"பி" பணியிடங்களில் மிகவும் பின்தங்கிய வகுப்பி னருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தது.

    ஆனால் தற்போது வேளாண்துறை அதிகாரிகள் பணியிடங்க ளுக்கான தேர்வில் எம்.பி.சி. இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்வு நடத்த கோப்புகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும்

    தலைமை அதிகாரிகள் பா.ஜனதாவின் சித்தா ந்தங்களை செயல்படுத்தும் நோக்கிலே இருக்கிறார்கள் என்பதை முதல்-அமைச்சர் உணர வேண்டும். அதுமட்டு மல்லாமல் சமூக நலத்துறை அமைச்சகம் தேர்வுகள் நடத்த இருக்கின்ற அனைத்து துறைகளுக்கும் குருப் "பி"பணியிடங்களில் எம்.பி.சி. அரசாணை வெளி யிட்டதை அத்துறைகளுக்கு அனுப்பி அதன் அடிப்படை யில் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். இம்மாதிரியான குளறுபடிகள் நடக்கின்றனவோ என்று ஐயம் கொள்ளத் தோன்றுகிறது. முதல்-அமைச்சர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்கள் புதுவை அரசில் தேர்வுகள் நடத்தபட இருக்கின்ற குருப்"பி" பணியிடங்களில் எம்.பி.சி. அடிப்படையில் தேர்வு நடத்திட உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5 பைக்குள், 2 கேமரா, ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். தலைமறைவாக உள்ள கடலூர் பட்டாம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கோரிமேடு போலீசார் முருகா திரையரங்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்குகல் வேகமாக வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் சென்னை பட்டின பாக்கத்தை அஜய் (வயது 21) கடலூர் மேல்பட்டாம்பாக்கம் தேங்காய்திட்டு சேர்ந்த செல்வமணி ( 19) என்பது தெரியவந்தது. இவர்கள் ஓட்டி வந்த பைக்குள் திருட்டு வாக னம் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீமன் நகரில் உள்ள ஒரு ஸ்டுடியோவின் கதவை உடைத்து சென்று 2 கேமராக்களை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 பைக்குள், 2 கேமரா, ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். தலைமறைவாக உள்ள கடலூர் பட்டாம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • விமான நிலையம் நோக்கி சென்ற கார் நரிக்குறவர் குடியிருப்பு அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் அங்கிருந்து நகர முடியாமல் நின்றது.
    • கார் மோதி காயமடைந்த பாலமுருகன், சக்திவேல், காயத்ரி ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தமிழகத்தை விட குறைந்த விலைக்கு மதுபானங்கள் கிடைப்பதால் கடலூர், விழுப்புரம், சென்னையை சேர்ந்த வாலிபர்கள் புதுவைக்கு வாரவிடுமுறையில் படையெடுத்து வருவார்கள். அவர்கள் அங்குள்ள கடற்கரையில் சுற்றி பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

    புதுவை பாண்டிமெரீனா கடற்கரையிலிருந்து நேற்று மதியம் 2.15 மணிக்கு கருப்புநிற கார் வம்பா கீரப்பாளையம் அருகே ஒரு பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    அந்த பகுதி இளைஞர்கள் காரை துரத்தினர். கார் செஞ்சி சாலை, ரங்கப்பிள்ளை வீதி வழியாக மிஷன்வீதிக்குள் நுழைந்து அங்கிருந்து ஒருவழிப்பாதையான நேருவீதியில் திரும்பி ராஜா தியேட்டர் நோக்கி அதிவேகமாக சென்றது. போக்குவரத்து போலீசார் தடுத்தும் கார் நிற்காமல் சென்றது.

    அப்போது எதிரில் வந்த 5 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளி சென்றது. ஒரு மோட்டார் சைக்கிள் காரின் அடியில் சிக்கியது. அந்த மோட்டார் சைக்கிளை இழுத்துக் கொண்டே கார் அசுர வேகத்தில் சென்றது. காரைப் பார்த்து பொதுமக்கள் பலர் பதறியடித்து ஓடினர். பலர் சினிமா ஷூட்டிங் நடக்கிறது என நினைத்து நின்று வேடிக்கை பார்த்தனர்.

    அப்போது கார் சாலையோர தடுப்பில் மோதியதால் காரின் இடதுபுற முன்சக்கர டயர் பஞ்சரானது. காரின் ரிம் தரையில் தேய்ந்து தீப்பொறி பறக்க கார் அண்ணாசாலையில் சென்றது. வளைவில் திரும்பிய போது காரில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது.

    இதன்பின் அண்ணா சாலையில் 2 மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் அஜந்தா சிக்னல், முத்தியால்பேட்டை கருவடிக்குப்பம் சென்று இடையஞ்சாவடி சாலையில் நுழைந்தது.

    அங்கும் சாலையோரம் நின்றிருந்த 5 பைக்குகளை இடித்து தள்ளி விட்டு சென்றது. போலீசார், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காரை துரத்தினர். சுமார் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளி கார் தாறுமாறாக சென்றது.

    விமான நிலையம் நோக்கி சென்ற கார் நரிக்குறவர் குடியிருப்பு அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் அங்கிருந்து நகர முடியாமல் நின்றது.

    அப்போது பின்னால் விரட்டி சென்ற பொது மக்கள் காரை சூழ்ந்து நின்றனர்.

    அந்த காரிலிருந்த 5 வாலிபர்களை காரில் இருந்து வெளியே இழுத்தனர். வாலிபர்கள் 5 பேரும் மித மிஞ்சிய மதுபோதையில் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

    சிறப்பு அதிரடிப்படை போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், காரை ஓட்டி வந்தது சென்னை மேடவாக்கம் பள்ளிக்கரணையை சேர்ந்த சுனில்(30), உடன் இருந்தவர்கள் அவரின் நண்பர்களான ஸ்ரீநாத்(25), ஆஷிக்(21), மேடவாக்கம் விவேகானந்தர் நகர் திலீப்(27), சென்னை நன்னாங்குளம் எபிநேசர்(21) என தெரியவந்தது.

    2 நாட்களுக்கு முன்பு புதுவைக்கு வந்த அவர்கள் புதுவை மெரீனா கடற்கரையில் மது அருந்தி கும்மாளமிட்டுள்ளனர். மதியம் நகர பகுதிக்கு வந்து மதுபோதையுடன், கஞ்சா புகைத்ததால் போதை தலைக்கேறி காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. 5 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    கார் மோதி காயமடைந்த பாலமுருகன், சக்திவேல், காயத்ரி ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    போதை ஆசாமிகள் சினிமா சேஸிங் போல காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் பகல் 2.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஒரு மணி நேரம் நகர பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    கார் அசுர வேகத்தில் பறந்தது. இன்னும் ஒரு மணி நேரம் கழித்து இந்த சம்பவம் நடந்திருந்தால் நகர பகுதியில் பள்ளிகள் விட்டு நெரிசல் அதிகமாக இருந்திருக்கும்.

    அப்போது காரை தாறுமாறாக ஓட்டியிருந்தால் பெரும் விபத்தும், அசம்பாவித சம்பவங்களும் நடந்திருக்கும். பிடிப்பட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • பைபாஸ் சாலையில் வழக்கமாக அதிவேகமாக செல்லும் வாகனங்கள் சாலையில் குறுக்கே செல்லும் கால்நடைகளின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதுவதால் விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியாகி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில், கிளியனூர், கோட்டக்குப்பம், மரக்காணம் ஆகிய போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் பைபாஸ் சாலை மற்றும் ஈ.சி.ஆர். சாலை உள்ளது.

    இந்த சாலைகளில் விபத்து நடைபெறாத நாட்களே இல்லை என கூறலாம். ஏதாவது ஒரு வகையில் புதுவை- திண்டி வனம் பைபாஸ் சாலை யிலும் புதுவை-சென்னை ஈ.சி.ஆர் சாலையிலும் விபத்து நடந்த வண்ணம் உள்ளது.

    புதுவையில் இருந்து திண்டிவனம் வரை உள்ள பைபாஸ் சாலை கிராமப் பகுதியை ஒட்டி செல்வதால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பைபாஸ் சாலைகளில் நடமாடுகிறது.

    பைபாஸ் சாலையில் வழக்கமாக அதிவேகமாக செல்லும் வாகனங்கள் சாலையில் குறுக்கே செல்லும் கால்நடைகளின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதுவதால் விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியாகி வருகிறது.

    இதே போல் ஈ.சி.ஆர். சாலையிலும் கோட்டக் குப்பம், பெரியமுடியார் சாவடி, கீழ்புத்துப் பட்டு, அனுமந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையின் குறுக்கே செல்லும் நாய் மற்றும் மாடுகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது.

    மொரட்டாண்டி யில் உள்ள டோல்கேட் நிர்வாகம் வாகன கட்ட ணங்களை வசூல் செய்து புதுவை இந்திரா காந்தி சதுக்கம் முதல் திண்டிவனம் பஸ் நிலையம் வரை சாலையை பராமரித்து வருகிறது. பைபாஸ் சாலையில் சுற்றி திரியும் கால்நடை களால் ஏற்படும் விபத்து குறித்து ஆங்காங்கே வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகை வைத்திருக்கும் டோல்கேட் நிர்வாகம் கால்நடை களை சாலை களில் உலாவ விடும் மாட்டின் உரிமையா ளர்கள் மீது எந்த நடவ டிக்கை யும் எடுக்க அஞ்சுகின்ற னர்.

    மொர ட்டாண்டி, பட்டா னூர், திருச்சிற்றம்ப லம் கூட்ரோடு பகுதிகளில் நூற்றுக்க ணக்கான மாடுகள் சாலைகளில் படுத்து கிடப்ப தால் வெளியூரி லிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இது தெரியாமல் அவற்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    திருச்சிற்ற ம்பலம் ஊராட்சிக்கு ட்பட்ட, திருச்சிற்ற ம்பலம் கூட்ரோடு பட்டானூர் நாவற்குளம், மொரட்டா ண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பைபாஸ் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிரத்யேக மாட்டு பட்டி உருவாக்கப்ப ட்டு ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் மாடுகளை அங்கு அடைத்து வைத்தனர்.

    மாடுகளை காணவில்லை என பட்டிக்கு வரும் மாட்டின் உரிமையாளர்க ளுக்கு ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் கடும் எச்சரிக்கை கொடுத்து மாடு களை திரும்ப கொடுத்து வருகின்றனர். ஆனால் பைபாஸ் சாலையில் விபத்து ஏற்பட்டால் டோல்கேட் நிர்வாகம் தங்களது ஆம்புலன்ஸ் சேவையை மட்டும் செய்து கொடுக்கிறது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை டோல்கேட் நிர்வாகம் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நிரந்தர தீர்வாகும் என பொதுமக்கள் கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க, புதுவை திண்டிவனம் பைபாஸ் சாலையில் எங்காவது ஓரிடத்தில் விபத்து நடந்தால் அந்த இடத்தில் மட்டும் போலீசார் பேரிக்காடுகளை அமைத்து மெதுவாக செல்லவும் என்ற எச்சரிக்கை வாசகத்தோடு தங்களது கடமையை முடித்து விடுகின்றனர். விபத்துக்கு காரணமாக அமையும் கால்நடைகளை யும் பைபாஸ் சாலையில் உலா வரும் கால்நடைகளின் நடமாட்டத்தை தடுப்பதற்கும் அதன் உரிமையாளர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளாததால் இது போன்ற தொடர் விபத்து க்கள் ஏற்பட்டு உயிர்கள் பலியாகி வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் புதுவை-திண்டிவனம் சாலையில் ஏற்பட்ட விப த்தில் 60-க்கும் மேற்பட் டோர் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் கை கால்களை இழந்துள்ளனர்.

    எனவே காவல்துறை விபத்து வழக்குகளை மற்றும் பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சாலை பாதுகாப்பு வார விழாவில் பங்கேற்ப தோடு சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை மதிப்பில்லாத மனித உயிர் பலிகளை தடுக்க காவல் துறை முன்வர வேண்டு மென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×