என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் ஏற்றம் கண்டுள்ளன. இதனால் புதுச்சேரி பொது மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள்

    எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 10 நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து பொதுமக்கள் வாங்க முடியாத விலைக்கு சென்றுள்ளது. தக்காளி அதிகம் விளையும் மாநி லங்களில் பெய்த மழையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.20-க்கு விற்ற தக்காளி இப்போது ரூ.125-க்கு விற்கும் நிலை உள்ளது.

    மற்ற காய்கறிகளும் தற்போது விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் ஏற்றம் கண்டுள்ளன. இதனால் புதுச்சேரி பொது மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    அண்டை மாநிலங்களில் தக்காளி மற்றும் காய்கறி விலை கட்டுப்படுத்த உழவர் சந்தைகள் மூலமாக காய்கறி கள் அதிக அளவில் விற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுவை மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே உழவர் சந்தைகள் சிறப்பாக செயல்படுகின்றன.

    மற்ற இடங்களில் பூட்டி கிடக்கிறது. புதுவை மாநிலத்தில் ரேஷன் கடைகளும் திறக்கப்படாமல் உள்ளன.

    இவற்றை அரசு திறக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுவை அரசு காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • துணியை காய வைக்க சென்ற பொது மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார்.
    • இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடி யாக போலீசாருக்கும் மின்சார துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த கரசூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி இவரின் வீட்டின் எதிரே உள்ள மின்சார ஒயர் கம்பி நேற்று இரவு வீசிய சூறைக்காற்றில் அறுந்து விழுந்தது.

    இந்நிலையில் மணி என்பவர் வீட்டுக்கு எதிரில் இருந்த மின்கம்பத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை.

    மணியின் மனைவி தனம் (வயது 45)  துணியை துவைத்து மின் கம்பம் அருகே கட்டப்பட்டிருந்த கொடியில் துணியை காய வைக்க சென்ற பொது மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார்.

    அதனைப் பார்த்த அவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19) தனத்தை இழுக்க முயற்சிக்கும் பொது அவரும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இவர்கள் இருவரும் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தூக்க வந்த பிரியதர்ஷினி மற்றும் குமாரையும் மின்சாரம் தாக்கியதில் தலை உள்ளிட்ட பகுதி கருகி தூக்கி வீசப்பட்டனர்.

    இதனைப் பார்த்து ஓடி வந்த பக்கத்து வீட்டு சேர்ந்த காந்தலட்சுமி என்பவரும் மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடி யாக போலீசாருக்கும் மின்சார துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    மின்சாரத் துறையினர் இந்த கிராமத்திற்கு வரும் மின்சாரத்தை துண்டித்து ஊருக்குள் வந்தனர். மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்த 4 பேரும் அங்கிருந்த வாகனத்தில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காந்த லட்சுமி மட்டும் லேசான காயத்துடன் சிகிச்சை பெறுகிறார்.

    தனம்,பிரியதர்ஷினி, குமாரி ஆகிய 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேதராப்பட்டு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவ படிப்புகளுக்கு முதல் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.
    • விண்ணப்பத்தில் நீட் தரவரிசை இடத்தில் அகில இந்திய தரவரிசை இடத்தை குறிப்பிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு மற்றம் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு சென்டாக் நிர்வாகம் மாணவர் சேர்க்கை நடத்துகிறது.

    நீட் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 3 ஆயிரத்து 140 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மருத்துவ படிப்புகளுக்கு  முதல் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு, தனியார் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இன்று 12-ந் தேதி முதல் வரும் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை சென்டாக் இணைய தளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பத்தில் நீட் தரவரிசை இடத்தில் அகில இந்திய தரவரிசை இடத்தை குறிப்பிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். ரவுடி என்ற பெயரில் ஓசியில் பொருட்கள் கேட்டால் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.
    • ரவுடிகள் மாமூல் கேட்டாலோ, மிரட்டினாலோ போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது

    இரவு நேரங்களில் சந்தேகப்படும் நபர்கள் சுற்றி திரிந்தால் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடை அருகில் மது குடித்துவிட்டு தகராறு செய்தால் ஆரம்பத்திலேயே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். ரவுடி என்ற பெயரில் ஓசியில் பொருட்கள் கேட்டால் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.

     11 மணிக்குள் கடைகளை மூட வேண்டும். பள்ளி, கல்லூரி அருகே புகையிலைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்களிடையே தற்போது கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த கடை உரிமையாளர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க வியாபாரிகள் தங்களது கடைகளில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும். ரவுடிகள் மாமூல் கேட்டாலோ, மிரட்டினாலோ போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவையில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது
    • இதில் பொது மக்கள் நிபுணர்களிடம் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.

    புதுச்சேரி:

    இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் புதுவை கிளை துணைத்தலைவர் ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவ னத்தின் நேரடி வரிகள் குழு தலைவர் சஞ்சய் அகர்வால் வழிகாட்டுதலின்படி நேரடி வரிகள் குறித்த சந்தேகங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வரும் 13, 14-ந் தேதிகளில் வரி ஆலோசனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுவை இளங்கோ நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் முகாம் நடக்கிறது. இதில் பொது மக்கள் நிபுணர்களிடம் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தாய்மார்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
    • அனைத்து ரேஷன்கார்டுக்கும் சிலிண்டருக்கு ரூ.300 வீதம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் துயரத்தை போக்க அனைத்து ரேஷன் கார்டுக்கும், சிலிண்டருக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    தற்போது அரசாணையில் சிவப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.300, மஞ்சள்கார்டுக்கு ரூ.150 என அறிவித்துள்ளது மிகவும் வேதனை தரக்கூடிய செயல். சட்டசபையில் அறிவித்தபடி மஞ்சள் கார்டுக்கு ரூ.300 கியாஸ் மானியம் வழங்காதது மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட செயலாக உள்ளது. இது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தாய்மார்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.

    புதுவையில் ஆயிரக்கணக்கான ஏழை, நடுத்தர மக்கள் மஞ்சள்கா ர்டுதான் வைத்துள்ளனர். அவர்களுக்கு சிலிண்டர் மானியத்தை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது ஏற்புடையதல்ல.

    முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி அனைத்து ரேஷன்கார்டுக்கும் சிலிண்டருக்கு ரூ.300 வீதம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் வாக்குறுதியில் இருந்து மீறக்கூடாது

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கல்லூரி மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.சி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அரசு வேலை பெற பயிற்சி தொடங்கப்படுகிறது.
    • மாணவர்கள் அடையாள அட்டை நகல், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 14-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திய பொது நிர்வாக நிறுவன தலைவர் தனபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய தேர்வு ஆணையத்தின் போட்டி தேர்வுக்கு 15 ஆண்டாக புதுவை கிளை பயிற்சி அளிக்கிறது. இந்த ஆண்டு பிளஸ் 2, கல்லூரி மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.சி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அரசு வேலை பெற பயிற்சி தொடங்கப்படுகிறது.

    இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் பயிற்சி விபரம் விளக்கம் பெற புதுவை ஏவேஷ் வீதியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவன கிளையில் வரும் 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் அடையாள அட்டை நகல், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 14-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    மேலும் விபரங்களுக்கு 0413 2222354, 9345009639 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் மழலையர்களை வாழ்த்தி பேசினார்.
    • பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் மழலையர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வண்ணப் பூக்களை பார்வையிட்டு பாராட்டினர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கான பூக்கள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளித் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் மழலையர்களை வாழ்த்தி பேசினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் மழலையர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வண்ணப் பூக்களை பார்வையிட்டு பாராட்டினர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் பூக்கள் வேடமணிந்து நடனமாடி பூக்களில் அவசி யத்தை விளக்கிக் கூறினர். இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மழலையர்களின் பள்ளி ஆசிரியைகள் அனிதா, சுஷ்மிதா, சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.
    • வங்கி கணக்கில் சேமிப்பு தொகை செலுத்தப்பட்டு பண வைய்ப்புத் தொகைக்கான பத்திரம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நெடுங்காடு தொகுதி கோட்டுச்சேரியை அடுத்த வடமட்டம் பகுதியில் நடந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிக்கு ஆதிதிரா விடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் பயனாளிகளுக்கு தொடர் நோய் சிகிச்சைக்காக 12 பயனாளிகளுக்கு ரூ.4,07,174, ஏழைப் பெண்களின் திருமண உதவித் தொகைக்காக 49 பயனாளி களுக்கு ரூ.39 லட்சம், கருவுற்ற தாய்மார்களுக்கு 64 பயனாளிகளுக்கு ரூ.9,72,000, பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2-வது தவணைக்கு 29 பயனாளி களுக்கு 58 லட்சம், 3-ம் தவணைக்கு 29 பயனாளி களுக்கு ரூ.29 லட்சம், பாரத ரத்னா ராஜீவ்காந்தி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2-வது தவணைக்கு 6 பயனாளிகளுக்கு ரூ.7,30,000, 3-தவணைக்கு 14 பயனாளிகளுக்கு ரூ 11,95,000, முழு கல்வி உதவி திட்டத்தின் கீழ் 354 மாணவர்களுக்கு மொத்தம் ரூ 1.10 கோடி, கலப்பு திருமணம் திட்டத்திற்கு 35 பயனாளிகளுக்கு ரூ 87,50,000, வழங்கப்பட்டது. இதில் சிறப்பம்சமாக கலப்புத் திருமணம் திட்டத்திற்கு 35 பயனாளிகளுக்கு அரசு ஒப்புதல் பெற்ற அன்றே அவர்களது வங்கி கணக்கில் சேமிப்பு தொகை செலுத்தப்பட்டு பண வைய்ப்புத் தொகைக்கான பத்திரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிட ர் நலத்துறை துணை இயக்குனர் மதன் கலந்து கொண்டார். ஆதிதிராவிட நலத்துறை ஆய்வாளர்கள் ஆறுமுகம், காஞ்சனா, முருகேசன், செந்தில்மால், ராஜாசாக்ரடீஸ் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

    • நேரு எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து மனு அளித்தார்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உருளையன்பேட்டை தொகுதியில் உப்பனாறு மேம்பாலம், அண்ணா திடல் விளையாட்டு மைதானம், நேருவீதி பெரியமார்க்கெட், புதிய பஸ்நிலைய மேம்பாட்டு பணி ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகள் அனைத்தும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஸ்தம்பித்து நிற்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு இடையூறாக உள்ளவர்களை அழைத்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின் நேரு எம்.எல்.ஏ கூறியதாவது:-

    இந்த திட்டங்கள் தனிப்பட்ட தொகுதி பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த புதுவை மக்களின் பிரச்சினை. எனவே பணிகள் தடைபட காரணமானவர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசி திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிக்கு சென்ற என்னை போலீசார் தடுத்தனர். அதை மீறி சென்றதால் வழக்குப்பதிவு செய்தனர். இப்போது அரசு பணிகளை தடுக்கும் தனி நபர்கள் மீது ஏன் வழக்குபதிவு செய்ய மறுக்கிறார்கள்? இவ்வாறு நேரு எம்.எல்.ஏ கூறினார்.

    • சாலை வசதிகளை மேம்படுத்தி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
    • சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    புதுச்சேரி:

    நாம் தமிழர் கட்சியின் திருபுவனை தொகுதி தலைவர் ஜெயக்குமார், செயலாளர் முத்துக்குமரன், இணை செயலாளர் பழனி ஆகியோர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருபுவனை தொகுதி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற் குட்பட்ட திருவாண்டார் கோவில் ஞானசவுந்தரி நகர் மற்றும் கலித்தீர்த்தாள் குப்பம் ஜே.எம்.ஜே கார்டன், மதினா நகர் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

    தற்போது பெய்த மழையில் மண் பாதைகளில் ஏற்பட்டுள்ள குண்டு குழிகளில் நீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் தெரு மின்விளக்குள் இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாகனங்களில் பயணிக்கும் போது விபத்தில் சிக்குகிறார்கள். அதோடு சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே இப்பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தி தெரு மின் வி ளக்குகளை பொருத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட ஆணையர் எழில்ராஜன் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • புதுவையில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • அரசு சார்பில் திட்டம் தயாரித்து அனுப்ப வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மத்திய அரசின் பிரதான் மந்திரி மித்ரா திட்ட அறிவிப்பை பயன்படுத்தி, புதுவையில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதையேற்று புதுவை சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக அமைச்சர் நமச்சிவாயத்தை சட்டசபையில் உள்ள அவரின் அலுவலகத்தில், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், புதுவை பஞ்சாலை சங்கத்தின் தலைவர் அபிஷேகம், செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் முனிசாமி, துனைச்செய லாளர் ஏழுமலை, நிர்வாக குழு உறுப்பினர் ஜெயசதீஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

    அப்போது அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான திட்டம் உள்ளது. கடந்த மாதம் மத்திய ஜவுளித்துறை அதிகாரிகளின் குழு புதுவைக்கு வந்து பார்வை யிட்டு சென்றுள்ளது. ஜவுளிப்பூங்கா புதுவையில் அமைக்க அரசு சார்பில் திட்டம் தயாரித்து அனுப்ப வேண்டும். அதை விரைவாக செய்கிறோம் என தெரிவித்தார். 

    ×