என் மலர்
புதுச்சேரி

மழலையர்களுக்கான பூக்கள் விழா கொண்டாட்டத்தின் போது எடுத்த படம்.
முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் பூக்கள் விழா கொண்டாட்டம்
- புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் மழலையர்களை வாழ்த்தி பேசினார்.
- பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் மழலையர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வண்ணப் பூக்களை பார்வையிட்டு பாராட்டினர்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கான பூக்கள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் மழலையர்களை வாழ்த்தி பேசினார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் மழலையர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வண்ணப் பூக்களை பார்வையிட்டு பாராட்டினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் பூக்கள் வேடமணிந்து நடனமாடி பூக்களில் அவசி யத்தை விளக்கிக் கூறினர். இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மழலையர்களின் பள்ளி ஆசிரியைகள் அனிதா, சுஷ்மிதா, சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர்.






