என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மருத்துவ படிப்புகளுக்கு 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்பு படம்.

    மருத்துவ படிப்புகளுக்கு 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    • மருத்துவ படிப்புகளுக்கு முதல் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.
    • விண்ணப்பத்தில் நீட் தரவரிசை இடத்தில் அகில இந்திய தரவரிசை இடத்தை குறிப்பிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு மற்றம் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு சென்டாக் நிர்வாகம் மாணவர் சேர்க்கை நடத்துகிறது.

    நீட் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 3 ஆயிரத்து 140 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மருத்துவ படிப்புகளுக்கு முதல் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு, தனியார் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இன்று 12-ந் தேதி முதல் வரும் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை சென்டாக் இணைய தளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பத்தில் நீட் தரவரிசை இடத்தில் அகில இந்திய தரவரிசை இடத்தை குறிப்பிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×