என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
இந்திய பட்டய கணக்காளர் வரி ஆலோசனை முகாம்
- புதுவையில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது
- இதில் பொது மக்கள் நிபுணர்களிடம் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.
புதுச்சேரி:
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் புதுவை கிளை துணைத்தலைவர் ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவ னத்தின் நேரடி வரிகள் குழு தலைவர் சஞ்சய் அகர்வால் வழிகாட்டுதலின்படி நேரடி வரிகள் குறித்த சந்தேகங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வரும் 13, 14-ந் தேதிகளில் வரி ஆலோசனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுவை இளங்கோ நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் முகாம் நடக்கிறது. இதில் பொது மக்கள் நிபுணர்களிடம் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






