என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crime-police officer"

    • குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். ரவுடி என்ற பெயரில் ஓசியில் பொருட்கள் கேட்டால் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.
    • ரவுடிகள் மாமூல் கேட்டாலோ, மிரட்டினாலோ போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது

    இரவு நேரங்களில் சந்தேகப்படும் நபர்கள் சுற்றி திரிந்தால் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடை அருகில் மது குடித்துவிட்டு தகராறு செய்தால் ஆரம்பத்திலேயே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். ரவுடி என்ற பெயரில் ஓசியில் பொருட்கள் கேட்டால் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.

     11 மணிக்குள் கடைகளை மூட வேண்டும். பள்ளி, கல்லூரி அருகே புகையிலைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்களிடையே தற்போது கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த கடை உரிமையாளர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க வியாபாரிகள் தங்களது கடைகளில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும். ரவுடிகள் மாமூல் கேட்டாலோ, மிரட்டினாலோ போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    ×