என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மஞ்சள் ரேஷன் கார்டுக்கும் ரூ.300 கியாஸ் மானியம்-வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- இது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தாய்மார்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
- அனைத்து ரேஷன்கார்டுக்கும் சிலிண்டருக்கு ரூ.300 வீதம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் துயரத்தை போக்க அனைத்து ரேஷன் கார்டுக்கும், சிலிண்டருக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
தற்போது அரசாணையில் சிவப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.300, மஞ்சள்கார்டுக்கு ரூ.150 என அறிவித்துள்ளது மிகவும் வேதனை தரக்கூடிய செயல். சட்டசபையில் அறிவித்தபடி மஞ்சள் கார்டுக்கு ரூ.300 கியாஸ் மானியம் வழங்காதது மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட செயலாக உள்ளது. இது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தாய்மார்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
புதுவையில் ஆயிரக்கணக்கான ஏழை, நடுத்தர மக்கள் மஞ்சள்கா ர்டுதான் வைத்துள்ளனர். அவர்களுக்கு சிலிண்டர் மானியத்தை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது ஏற்புடையதல்ல.
முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி அனைத்து ரேஷன்கார்டுக்கும் சிலிண்டருக்கு ரூ.300 வீதம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் வாக்குறுதியில் இருந்து மீறக்கூடாது
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.






