என் மலர்
நீங்கள் தேடியது "installed"
- சாலை வசதிகளை மேம்படுத்தி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
- சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி:
நாம் தமிழர் கட்சியின் திருபுவனை தொகுதி தலைவர் ஜெயக்குமார், செயலாளர் முத்துக்குமரன், இணை செயலாளர் பழனி ஆகியோர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருபுவனை தொகுதி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற் குட்பட்ட திருவாண்டார் கோவில் ஞானசவுந்தரி நகர் மற்றும் கலித்தீர்த்தாள் குப்பம் ஜே.எம்.ஜே கார்டன், மதினா நகர் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
தற்போது பெய்த மழையில் மண் பாதைகளில் ஏற்பட்டுள்ள குண்டு குழிகளில் நீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் தெரு மின்விளக்குள் இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாகனங்களில் பயணிக்கும் போது விபத்தில் சிக்குகிறார்கள். அதோடு சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே இப்பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தி தெரு மின் வி ளக்குகளை பொருத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட ஆணையர் எழில்ராஜன் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.






