என் மலர்
புதுச்சேரி

காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக போராட்டம்
- மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா வும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான அனந்தராமன் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
அகில இந்திய காங்கி ரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூரு தீ்ர்ப்பு வழங்கியதை கண்டித்து, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார், முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் அரசு கொறடாவும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான அனந்தராமன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன் விஜயவேணி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரவி, சங்கர், பூரணாங்குப்பம் காங்கிரஸ் கமிட்டி ராஜ சேகரன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த பாபு, ஒருங்கினைப்பாளர் தேவதாஸ், ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர் மோகன்தாஸ், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் முத்துராமன் மற்றும் பல்வேறு மாநில தொகுதி நிர்வாகிகள் மற்றும் மகளீர் காங்கிரஸார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






