என் மலர்
புதுச்சேரி

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
- கலெக்டர் குலோத்துங்கன் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் திடீரென்று ஆய்வு செய்து வருகிறார்.
- 2 மணி நேரம் பாடம் நடத்தி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனையும் வழங்கி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மிகவும் பின்தங்கி இருந்தது. இதனால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதமும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் காரைக்காலில் அரசு பள்ளிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனுக்கு பொது மக்களிடம் இருந்து புகார் வந்தது. இதனை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர்களை மாதந்தோறும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் திடீரென்று ஆய்வு செய்து வருகிறார்.
மேலும் மாணவர்களிடம் குறைகளும் கேட்டு வந்தார். தினந்தோறும் கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு சென்று 2 மணி நேரம் பாடம் நடத்தி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் காரைக்கால் அம்பகரத்தூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்ற கலெக்டர் குலோத்துங்கன் மாணவர்களிடம் குறைகளை கேட்டார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் குலோத்துங்கன் இயற்பியல் பாடம் நடத்தினார். இதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.






