என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்.
    • புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என மத்திய உள்துறை இணை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

     டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு பாராளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்தனர்.

    புதுவையில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என மத்திய உள்துறை இணை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது.

    இன்னும் 3 மாதத்திற்குள் புதுவைக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம். பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் அழைப்பு விடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் மாளிகையில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.
    • கவர்னர் ஜனநாயத்துக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர் போல செயல்படுவதாக கூறி தி.மு.க, காங்கிரஸ் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    புதுச்சேரி:

    சுதந்திர தினவிழாவையொட்டி கவர்னர் மாளிகையில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார், செல்வ கணபதி எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கல்யாணசுந்தரம், அங்காளன், கே.எஸ்.பி.ரமேஷ், ரிச்சர்டு, லட்சுமி காந்தன், பாஸ்கர், வி.பி.ராமலிங்கம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், கருணாநிதி, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி சீனிவாஸ் மற்றும் அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதேநேரத்தில் கவர்னர் ஜனநாயத்துக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர் போல செயல்படுவதாக கூறி தி.மு.க, காங்கிரஸ் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    இதன்படி தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.

    • இவரது மனைவியும் மற்றொரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அருகே வள்ளுவர் மேடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38). இவரது மனைவி நிர்மலா. இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    மணிகண்டன் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவியும் மற்றொரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. நேற்று மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நிர்மலா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் நிர்மலாவுக்கு போன் செய்து உனது கணவர் வீட்டின் அருகே மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்மலா உடனடியாக வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் மயங்கி கிடந்த கணவரை மீட்டு கிருமாம் பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து அவரது மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாதனைகளின் உச்சமாக சந்திராயன் விண்கலம், நிலவில் தடம் பதிக்கும் இவ்வாண்டு இந்திய நாடு மேலும் சாதனைகள் படைத்திடும்.
    • .நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்ட சிந்தனையோடு செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட உறுதி ஏற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டி ருக்கிறோம்.

    நமது தேசத் தலைவர்கள் அரும்பாடு பட்டு தங்கள் இன்னுயிரைத் தந்து நாட்டின் விடுதலையைப் பெற்றுத்தந்தார்கள். அத்தகைய தியாகச் தலைவர்களின் வரலாறுகளை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தொலைநோக்குப் பார்வை கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ் கல்வி, மருத்துவம், அறிவியல், வேளாண்மை, விண்வெளி ஆராய்ச்சி என்று பல துறைகளிலும் இந்தியா இன்று உலகின் முன்னோடி நாடாகத் திகழ்கிறது.நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்ட சிந்தனையோடு செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட உறுதி ஏற்க வேண்டும்.

    அமைச்சர் லட்சுமி நாராணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களுக்கு சுதந்திர தின வாழ்த் துக்கள். தங்கள் இன்னுயிர் தந்து சுதந்திரம் பெற்றுத் தந்த தியாக பெரு மக்களை நினைவு கூறும் பொன்னாள் இது. வேறு எந்த நாடும் சுதந்திரம் பெற்ற பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு சாதனைகள், உள்கட்டமைப்பு வசதிகளை அடைந்தது இல்லை.

    சாதனைகளின் உச்சமாக சந்திராயன் விண்கலம், நிலவில் தடம் பதிக்கும் இவ்வாண்டு இந்திய நாடு மேலும் சாதனைகள் படைத்திடும்.

    எல்லா வேறுபாடுகளை களைந்து மறந்து அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம். காந்தியமும், கர்மவீரரின் கடமைகளும் முன்னேற்றப்பாதைகள் என அறிந்து செயல்படும் முதல்-அமைச்சருக்கு தோள் கொடுத்து புதுவையை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வோம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை புதுவை மண்ணுக்குரியவை என்பதில் பெருமை கொள்வோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • டிப்-டாப் பெண்கள் யாரோ ஓடும் பஸ்சில் ஷாஜிதாபர்வீன் வைத்திருந்த நகை டப்பாவை திருடி சென்றுள்ளனர்.
    • போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் கல்கி நகரை சேர்ந்தவர் அபுதாகிர். இவரது மனைவி ஷாஜிதா பர்வீன் (வயது35). சம்பவத் தன்று இவர் புதுவை முத்தியால்பேட்டையில் உறவினர் வீட்டில் நடந்த புதுமனை புகுவிழாவுக்கு கடலூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வந்தார்.

    பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ் மூலம் முத்தியால்பேட்டைக்கு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் தான் அணிந்திருந்த நெக்லஸ், வளையல், செயின், டாலர் , தோடு, மோதிரம் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கழற்றி ஒரு சில்வர் டப்பாவில் வைத்து மூடி கை பையில் வைத்து அங்கிருந்து தனியார் பஸ் மூலம் புதுவை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார்.

    அங்கு பஸ்சை விட்டு இறங்கியதும் கை பையில் நகை வைத்திருந்த சில்வர் டப்பாவை பார்த்த போது அந்த டப்பா மாயமாகி போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    டிப்-டாப் பெண்கள் யாரோ ஓடும் பஸ்சில் ஷாஜிதாபர்வீன் வைத்திருந்த நகை டப்பாவை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஷாஜிதா பர்வீன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பழைய துறைமுக பகுதியில் ரூ.5½ கோடியில் நகர பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்படும்.
    • புதுவை, காரைக்காலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றினார். அதைத் தொடர்ந்து அவர் சுதந்திர தின உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெரியகாலாப்பட்டில் ரூ.20 கோடியிலும், நல்லவாடில் ரூ.19 கோடியிலும் மீன் இறங்கு தளம் அமைக்கவும், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை ரூ.54 கோடியில் விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்படும்.

    தட்டாஞ்சாவடியில் ரூ.528 கோடியில் சட்டசபை வளாகம், காலாப்பட்டில் ரூ.483 கோடியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளது. பாண்டி மெரினா கடற்கரையில் ரூ.14½ கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நீரை குழாய்கள் மூலம் கொண்டுசெல்ல ரூ.12½ கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மழை காலத்திற்கு முன்பாக அனைத்து வாய்க்கால்களும் 190 கி.மீ. நீளத்துக்கு சுமார் ரூ.4½ கோடியில் தூர்வாரப்படும்.

    பிள்ளையார்குப்பம் படுகை அணை ரூ.20 கோடியிலும், பாகூர் ஏரிக்கரையில் ரூ.8 கோடியில் ஒருவழிப் பாலம், கொம்பந்தான்மேடு அணைக்கட்டு ரூ.13 கோடியில் கரைகளை செம்மைப்படுத்துதல், குடுவையாற்றில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டுவது உள்ளிட்ட நீர் நிலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா திடல் கட்டுமான பணி முடிவடைந்து இந்த ஆண்டே திறக்கப்படும். சின்னையாபுரத்தில் ரூ.23 கோடியில் 220 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். ரூ.23 கோடியில் மின்சார பஸ்கள் வாங்கப்பட்டு இந்த நிதியாண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடிக்கு அருகில் ரூ.15 கோடியில் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களுக்கு தனி பஸ் ஸ்டாண்டு கட்டப்படும். தாவரவியல் பூங்கா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும். சுதேசி பஞ்சாலை வளாகத்தில் ரூ.5½ கோடியில் நகர காட்டுப் பகுதி பசுமை பூங்காவாக மேம்படுத்தப்படும். வ.உ.சி., கலவை கல்லூரி, பான்சியானா பள்ளிகள் பழமை மாறாமல் மீண்டும் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.

    பழைய துறைமுக பகுதியில் ரூ.5½ கோடியில் நகர பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்படும். புதுவை நகர பகுதியில் ஒட்டுமொத்த பாதாள சாக்கடை திட்டமும் ரூ.50 கோடியில் சீரமைக்கப்படும். புதுவையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்படுவதால் கடந்த காலங்களைவிட குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது.

    சுதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் சுற்றுலா தலங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் படிப்படியாக செயல்படுத்துவோம்.

    புதுவையை முன்னேறிய மாநிலமாக மாற்ற எங்கள் அரசின் செயல்பாட்டிற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு, ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    இந்த ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் எனக்கேட்டு அனைவருக்கும் உளம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • துணை செயலாளர் அருணாசலம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஒருங்கிணைந்த ஆதி திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. பொதுச்செயலாளர் கலைமணி, பேரவை தலைவர் முருகையன், கவுரவத் தலைவர் திருமால், நகரத்தலைவர் ஆதிகேசவன், முதன்மை செயலாளர் பாலக்கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் ராம்விலாஸ் பஸ்வான், ஒருங்கிணைப்பா ளர் மகேந்திரவேலன், பொருளாளர் வேல்முருகன், தலைமை நிலைய செயலாளர் இளவயதன் மற்றும் மாணவர் அணி தலைவர், இளைஞர் அணி தலைவர் மாயகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலா ளர் பரமசிவம், அமைப்பாளர் சுப்ரமணி, மாநில செயலாளர் ரகோத்த மன், நகர செயலாளர் முனியன், துணை செயலாளர் அருணாசலம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆதிதிராவிடர் நலத்துறை யில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், நல அதிகாரி, நல ஆய்வாளர், உதவியாளர், பல்நோக்கு ஊழியர் போன்ற பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் சிறப்பு கூறு நிதியிலிருந்து 22 துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை எனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் ரஜினி குமார் நன்றி கூறினார்.

    • மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    • உழவர்கரை மாவட்ட த்தில் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 76-வது தேசிய பிரிவினையின் பயங்கர தினத்தை நினைவுகூறும் விதமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

    உழவர்கரை மாவட்ட த்தில் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், ஜான் குமார் எம்.எல்.ஏ, மாநில துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், முருகன், பா.ஜனதா மாநில செயலாளர்கள் லதா, ஜெயந்தி பட்டியலின மாநில தலைவர் தமிழ்மாறன், அலுவலக செயலாளர் கவுரிசங்கர் உள்ளிட்ட பா.ஜனதா மாநில மாவட்ட தொகுதி அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மவுன ஊர்வலம் கதிர்காமம் பெண்கள் கலைக்கல்லூரி அருகில் துவங்கி இந்திராநகர் தொகுதி வழியாக முருகா திரையரங்கம் அருகில் நிறைவடைந்தது.

    • புதுவை கோர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • போராட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை கோர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கோர்ட்டில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. அதை உடனடியாக நிரப்ப வேண்டும். வக்கீல்களுக்கு, வழக்காளிகளுக்கும் எதிராக செயல்படும் முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை வக்கீல்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இருந்தது. அதன்படி வக்கீல்கள் இன்று கோர்ட்டை புறக்கணித்து போரா ட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் செயலா ளர் சக்திவேல், பொருளாளர் லட்சுமி நாராயணன், இணை செயலாளர்கள் திருமலைவாசன், சம்பத், பாலசுந்தரம், சதீஷ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ், சந்தோஷ், சூர்யா, கவியரசன் மற்றும் மூத்த வக்கீல்கள் பக்தவச்சலம், சுப்பிர மணியன், பாலசுந்தரம், பாலமுருகன், கண்ணன், ராஜேந்திரன், திருகண்ண செல்வன், சுப்பிரமணி, முகுந்தன், ராஜ்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர்.

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்க ணிப்பு போரா ட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டது.

    • 19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளை யாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் விளையாட்டு வீரர்களின் 19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்கள் நல சங்கத் தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கோவிந்த ராஜ், பாடி பில்டர் பிரகதீஸ், மால்கம் கணேஷ் , கூடோ சந்தோஷ், அசோக், வெங்கடாஜலபதி, சிலம்பம் அன்பு நிலவன், சமூக ஆர்வலர்கள் கோகுல் காந்தி, வீரபாரதி, சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு புதுவை அரசு விளையாட்டு வீரர்களை புறக்கணித்து வரும் செயல்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    மேலும் நிகழ்ச்சியில் ஆறுமுகம் ,ரமேஷ், பிரவீன் உள்ளிட்ட ஏராளமான விளை யாட்டு சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சதீஷ் வர வேற்றார். முடிவில் செந்தில் வேல் நன்றி கூறினார்.

    • 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
    • லாஸ்பேட்டை தொகுதிக் குட்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடியை செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.

    புதுச்சேரி:

    76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்று வேண்டும்என்ற பிரதமர் மோடியின் ஆணைக்கிணங்க லாஸ்பேட்டை தொகுதிக் குட்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடியை செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.

    சுதந்திர தினத்தை போற்றி கொண்டாடிட பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனை வரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றிடுவோம் என்று புதுச்சேரி பா.ஜனதா தலைமை அறிவித்திருந்தது.

    அதன்படி தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி லாஸ் பேட்டை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாடாளு மன்ற உறுப்பினர் செல்வ கணபதி தேசிய கொடியை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதிக்குட் பட்டபொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதி பா.ஜனதா பிரமுகர்கள், ஜேயபிரகாஷ், மௌலி தேவன், சந்துரு, வேலு, கலியபெருமாள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
    • புதுவை கடற்கரை சாலையில் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி:

    சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    புதுவை கடற்கரை சாலையில் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழா மேடை அமைக்க ப்பட்டுள்ளது.போலீசார் பாதுகாப்பும் போடப்ப ட்டுள்ளது. இதையும் தாண்டி சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். கடற்கரையில் மணலில் இறங்கி அலையில் கால் நனைத்து விளையாடினர். சிலர் குளித்து விளை யாடினர். நகர பகுதியில் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது.

    நகரின் பல சாலைகளில் கூட்டம், கூட்ட மாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு சுற்றினர். உணவு விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரிப்பால் பல சாலைகளில் ஊர்வல மாக வாகனங்கள் அணி வகுத்து சென்றது.

    ஒட்டு மொத்தமாக புதுவை நகர பகுதி சுற்றுலா பயணிகளால் திணறியது.

    ×