என் மலர்
புதுச்சேரி
- ராகுல்காந்தி வாழ்க... வாழ்க... என கூறியபடி பிரகாஷ் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
- ராகுல்காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவருமே விரும்பினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டம் வி.புதூர் கிராமத்தை சேர்ந்த கட்சி பிரமுகர் பிரகாஷ் மற்றும் புதுச்சேரி ஆண்டியார் பாளையத்தை சேர்ந்த அன்பரசி ஆகியோரது திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் நடத்தி வைத்தனர்.
இதில் ராகுல்காந்தி வாழ்க... வாழ்க... என கூறியபடி பிரகாஷ் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
அப்போது மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:-
ராகுல்காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவருமே விரும்பினர்.
ஆனால் அதற்கான சூழல் அமையாத நிலையில் தற்போது கட்சி அலுவலகத்தில் அனைவரது ஆதரவோடு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றார்.
இப்போது ஆட்சியில் இருக்கிறவர்கள் நாட்டின் சுதந்திரத்தை தாங்கள் தான் கொண்டு வந்த மாதிரி பாவனை காட்டுகிறார்கள். ஆனால் சுதந்திரம் பெற உயிர் தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்று கூறினார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை.
- அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
புதுச்சேரி:
புதுவை சஞ்சீவி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). கொத்தனார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றும் குடிப்பழக்கத்தை கைவிடவில்லையாம்.
இந்த நிலையில் அவரது அண்ணன் கோபி சர்க்கரை நோய்க்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக ராஜ்குமார் இருந்து கவனித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார் அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வெளிநாட்டினர், ஆரோவில் வாசிகள், பொதுமக்கள் போன் பயரை சுற்றி அமர்ந்து கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
- பாரத் நிவாஸில் நடந்த 77-வது சுதந்திர தின கண்காட்சியில் ஆரோவில் வாசிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
சேதராப்பட்டு:
புதுவை அருகே ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது.
இங்கு ஆண்டுக்கு 3 முறை அதாவது அன்னை பிறந்த தினமான பிப்ரவரி 21, ஆரோவில் உதய தினமான பிப்ரவரி 28 அரவிந்தரின் பிறந்த தினமான ஆகஸ்டு 15 ஆகிய 3 நாட்கள் அதிகாலையில் போன் பயர் எனப்படும் வெட்டவெளியில் தீ மூட்டி வெளிநாட்டினர் மற்றும் ஆரோவில் வாசிகள் கூட்டு தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இன்று அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆரோவில் சர்வதேச நகரத்தின் மையப் பகுதியில் உள்ள மாத்தீர் மந்திர் அருகே அமைந்த ஆம்பி தியேட்டர் வெட்ட வெளியில் பார்ன் பயர் தீ மூட்டப்பட்டது.
இதில் வெளிநாட்டினர், ஆரோவில் வாசிகள், பொதுமக்கள் போன் பயரை சுற்றி அமர்ந்து கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட்டதின் நோக்கம் குறித்து அன்னை பேசிய பேச்சு இசையுடன் ஒளிபரப்பப்பட்டது. மூட்டப்பட்ட தீப்பிழம்பில் மாத்திர மந்திரம் பல பலவென மின்னியது. கூட்டு தியானம் முடிந்து பாரத் நிவாஸில் நடந்த 77-வது சுதந்திர தின கண்காட்சியில் ஆரோவில் வாசிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். தொடர்ந்து பாரத் நிவாஸில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
- நடைபெற வேண்டிய விழாக்கள் எல்லாம் சிறப்பாக ஒரு நட்புணர்வோடு நடக்க வேண்டும்.
- தெலுங்கானா விழாக்களுக்கு முதல்-மந்திரி வருவதில்லை. அதை கவலையோடுதான் எதிர்கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
விழா முடிந்த பின்னர் கவர்னர் தமிழிசையிடம் தமிழகத்தில் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது, நீட் தேர்வு தற்கொலை விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-
நாடு 100-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் போது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்று இருக்கும்.
அதேபோல் புதுச்சேரியும் முன்னேறிய மாநிலமாக மாறியிருக்கும். தமிழக முதலமைச்சரின் தேநீர் புறக்கணிப்பு பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
பொதுவாக எதிர் கருத்துகள் இருக்கலாம். ஆனால் நடைபெற வேண்டிய விழாக்கள் எல்லாம் சிறப்பாக ஒரு நட்புணர்வோடு நடக்க வேண்டும். தெலுங்கானா விழாக்களுக்கு முதல்-மந்திரி வருவதில்லை. அதை கவலையோடுதான் எதிர்கொள்கிறேன்.
கருத்து மோதல், கருத்து பரிமாற்றம் இருக்கலாம். ஒருவர் கருத்தை ஒருவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது இல்லை.
விழாவில் கலந்து கொள்ளாமல் இளைய சமுதாயத்தினருக்கு எதை சொல்ல போகிறோம்? தொடர்ச்சியான வழிமுறையை பின்பற்றுவதுதான் சரியானதாக இருக்கும். நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்தவள் நான். இதன்மூலம் பாமர மக்கள் பயனடைந்துள்ளனர்.
இதை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து என்றார்கள். முடியாது என்று தெரிந்தும் பொய் வாக்குறுதி அளித்தனர். நீட் தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு.
நீட் தேர்வு வேண்டாம் என்பவர்கள் கோர்ட்டுக்கு போக வேண்டியதுதானே? அதை விடுத்து மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம். மாணவர்களை படிக்க விடுங்கள். எதிர்மறையான கருத்துகளை பரப்பாதீர்கள். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தான் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
- புதுவை கடற்கரை சாலையில் கோலாகல விழா நடைபெற்றது.
- மேடையிலிருந்து கீழே இறங்கிய முதல்-அமைச்சர், நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புதுவை அரசின் சார்பில் கடற்கரை சாலையில் 77-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் மேடை, கொடிக் கம்பம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் அமர்ந்து சுதந்திரதினத்தை பார்வையி டவும் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.
காலை 8.55 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலைக்கு காரில் வந்தார். அவரை தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா வரவேற்று அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து மேடைக்கு சென்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது. மேடையிலிருந்து கீழே இறங்கிய முதல்-அமைச்சர், நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
தொடர்ந்து மேடை திரும்பிய அவர், சுதந்திர தின உரையாற்றினார். பின்னர் சிறப்பாக பணி யாற்றிய போலீசார், வீர, தீர செயல்கள் புரிந்தவர்கள், சுகாதார கள பணியாளர்க ளுக்கு விருது, பதக்கம், சான்றிதழ்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். தொடர்ந்து பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு நடந்தது.
காவல்துறையின் பல்வேறு பிரிவுகள், முன்னாள் ராணுவவீரர்கள், தீயணைப்பு, என்.எஸ்.எஸ்., என்.சி.சி., அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பு மரி யாதயை முதல்-அமைச்சர் ரங்கசாமி மேடையிலிருந்து ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்கள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பின்னர் சிறந்த அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார். தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சித் தலைவர் சிவா, செல்வகணபதி எம்.பி.,
எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கென்னடி, சம்பத், ஜான்குமார், கல்யாணசுந்தரம், அங்காளன், கே.எஸ்.பி.ரமேஷ், ரிச்சர்டு, லட்சுமி காந்தன், பாஸ்கர், வி.பி.ராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவை யொட்டி கடற்கரை சாலை யில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டி ருந்தது. பார்வையாளர்க ளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது.
புதுவை நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டி ருந்தது. கடற்கரை சாலை யின் பின்புறம் கடலில் கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
- முதல்- அமைச்சர் ரங்கசாமி அரசு துறையில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் சுதந்திர தினவிழா கடற்கரை சாலையில் நடந்தது.
விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, தேசியக் கொடி ஏற்றி வீர, தீர செயல் புரிந்த போலீசா ருக்கு விருதுகளை வழங்கி னார். ஏனாம் சிறப்பு பிரிவு சிறப்பு நிலை ஏ.எஸ்.ஐ. ரமணமூர்த்தி, காரைக்கால் சிறப்புநிலை ஏ.எஸ்.ஐ. செல்வராஜ், புதுவை ஆயுதப்படை சிறப்பு நிலை எஸ்.ஐ. சைமன்டேவிட், ரெட்டியார்பாளையம் போலீஸ் ஏட்டு ரகுராமன் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் காவல் பதக்கமும், புதுவை காவலர் பயிற்சி பள்ளி எஸ்.ஐ பிரதீப்குமாருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் காவல் பதக்கம்,
புதுவை எஸ்.பி. வம்சித ரெட்டி, ஊர்க்காவல்பிரிவு எஸ்.பி. சரவணன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், காவலர் பயிற்சி பள்ளி எஸ்.ஐ. ராஜேஷ், மாகி காவல்நிலைய எஸ்.ஐ. ஜெய்சங்கர், புதுவை குற்ற ஆவணப்பிரிவு சுந்தர்ராஜன், ஆயுதப்படை ஏ.எஸ்.ஐ. பஞ்சநாதன், முத்தியால்பேட்டை காவல் நிலைய ஏ.எஸ்.ஐ. வேல்முருகன், கட்டுப்பாட்டு அறை ஏ.எஸ்.ஐ. மணிமொழி, பெரியகடை காவல்நிலைய ஏட்டு முகுந்தன், கடலோர காவல்பிரிவு ஏட்டு ஆனந்த்,
புகைப்பட பிரிவு ஏட்டு ரங்கநாதன், பயிற்சி பள்ளி காவலர் நாதமணி, காரைக் கால் சிறப்பு அதிரடிப்படை காவலர் தமிழ்வேலன், புதுவை பயிற்சி பள்ளி சிறப்பு காவலர் மார்ஸ் அருள்ராஜ், கோட்டுச்சேரி காவலர் பிரேம்குமார், காட்டேரிக் குப்பம் காவலர் ராஜேஷ் குமார், இந்திய ரிசர்வ் பட்டாலியன் ஏ.எஸ்.ஐ. பாலமுருகன், ஏட்டுகள் பன்னீர்செல்வம், ஆனந்தவேலு ஆகியோருக்கு ராஜீவ்காந்தி காவல் பதக்க மும், புதுவை மாநிலத்தில் 2022-ம் ஆண்டில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட உருளையன் பேட்டை காவல் நிலையத் துக்கு விருதையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
உருளையன்பேட்டை விருதை இன்ஸ்பெக்டர் பாபுஜி பெற்றுக் கொண்டார்.
மேலும் முதல்- அமைச்சர் ரங்கசாமி அரசு துறையில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கினார்.
புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவம், ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சிறந்த கல்வி நிறுவனத்துக் கான முதல்-அமைச்சரின் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பொது நிர்வாகத்தில் சிறந்து விளங் கிய தொழிலாளர் துறைக்கு ரொக்கப்பரிசும், சான்றி தழும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் நாரா யணன், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜீவா னந்தம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார உதவியாளர் சரவணன், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய துணை மருத்துவ செவிலியர் சுபா, வில்லியனூர் சமூகநல செயல்பாட்டாளர் சர்மிளா பானு, புதுவை வர்த்தக சமூக பொறுப்பு பங்கா ளராக எச்.டி.எப்.சி. வங்கி ஆகியோருக்கு முதல்- அமைச்சரின் கள பணியா ளர் விருது வழங்கப்பட்டது.
இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறையில் சிறப்பாக பணியாற்றிய திட்ட அதிகாரி பாலாஜி, சித்த மருத்துவ திட்ட அதி காரி இந்திரா, ஆயுர்வேத மருத்துவ அதிகாரி தீப்தி மரியா, மருந்தாளுநர்கள் பெர்னாட்சன், ஜெகநாதன், நித்யா, முதுநிலை எழுத்தர் சுதா, கணக்கு மேலாளர் அனில்குமார் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டது.
தேசிய மாணவர் படையில் முதுநிலை பிரிவு மாணவர் பூமேதகனுக்கு முதலமைச்சரின் தங்க பதக்கமும், பரத்ராஜிற்கு கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம், தமிழ் செல்வன் கல்வி செயலரின் வெண்கல பதக்கமும், இளநிலை பிரிவில் மணிஷா முதல்-அமைச்சரின் தங்க பதக்கம், ரங்களின் கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம், ஆகாஷ் கல்வி செயலரின் வெண்கல பதக்கம் பெற்றனர்.
- அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.
- விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்க ணித்தனர்.
புதுச்சேரி:
சுதந்திர தினவிழாவை யொட்டி கவர்னர் மாளிகை யில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார், செல்வ கணபதி எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு,
எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கல்யாணசுந்தரம், அங்காளன், கே.எஸ்.பி..ரமேஷ், ரிச்சர்டு, லட்சுமி காந்தன், பாஸ்கர்,
வி.பி.ராமலிங்கம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், கருணாநிதி, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி சீனிவாஸ் மற்றும் அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
அதேநேரத்தில் கவர்னர் ஜனநாயத்துக்கு எதிராக அரசியல்கட்சி தலைவர் போல செயல்படுவதாக கூறி தி.மு.க, காங்கிரஸ் தேநீர் விருந்தை புறக்க ணிப்பதாக அறிவித்தி ருந்தனர்.
இதன்படி தி.மு.க., காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவர்னரின்
தேநீர் விருந்தை புறக்க ணித்தனர்.
- அரவிந்தர் 151-வது பிறந்த நாள் நடைபெற்றது.
- அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி முன்பு மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
புதுச்சேரி:
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தரின் 151-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி அதிகாலை முதல் உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆசிரம பக்தர்கள் ஆசிர மத்திற்கு வந்து வழிபட்டனர்.பக்தர்கள் அனைவரும் அதிகாலை நடைபெற்ற கூட்டு தியானத்தில் பங்கேற்றனர். அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி முன்பு மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி அவர் பயன்படுத்திய அறை மற்றும் பொருட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருந்தது.
- போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு
- போலீஸ் பாதுகாப்புடன் கிராம சபை கூட்டம் அதிகாரிகள் முன்ன ணியில் பொதுமக்களுடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
குருவிநத்தம் ராஜீவ் காந்தி மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதை அறிந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கிராம சபை கூட்டத்திற்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அரசுக்கு எதிராக வும், அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகள் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் குருவிநத்தம், சோரியாங்குப்பம் பகுதியில் சுடுகாட்டுக்கு செல்ல பாலம் அமைத்து தரவும், சாலை வசதி குடிநீர் வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து கவர்னர், முதல்-அமைச்சர் எம்.எல்.ஏ.விடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்காத தால் இன்று நடைபெற இந்த கிராம சபை கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வாயில் கருப்பு துணி அணிந்து கிராம சபை புதிய புறக்கணித்தனர். தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது அரசு எதிராக கோஷ்மிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி யினரை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கிராம சபை கூட்டம் அதிகாரிகள் முன்ன ணியில் பொதுமக்களுடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்து உள்ள குருவிநத்தம் சோரி யாங்குப்பம் கிராமத்தில் பாலம் இல்லாமல் இறந்த வர்களின் உடலை இடுப்ப ளவு தண்ணீரில் நீந்தி சென்று அடக்கம் செய்யும் அவலம்,
இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாத நாட்டிற்கு சுதந்திர தினம் ஒரு கேடா ...? என பாகூர் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மது குடிப்பது வழக்கம். ஒரு சில நாட்கள் ஓட்டல் வேலைக்கு செல்லாமல் மது குடிப்பார்.
- கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு காமராஜர் நகர் கென்னடி தெருவை சேர்ந்தவர் வினோத். இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரி எதிரே தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது டிபன் கடையில் சென்னைv ஆழ்வார் திருநகரை சேர்ந்த நாகராஜ்(49) என்பவர் கடந்த 2 மாதமாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளன.
மது குடிக்கும் பழக்க முள்ள நாகராஜ் தினமும் சாம்பாதிக்கும் பணத்தில் அதிகமாக மது குடிப்பது வழக்கம். ஒரு சில நாட்கள் ஓட்டல் வேலைக்கு செல்லாமல் மது குடிப்பார்.
அதுபோல் நாகராஜ் டிபன் கடைக்கு வேலைக்கு செல்லாமல் பூத்துறை மெயின் ரோட்டில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அங்குள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது குடிபோதையில் அவர் தவறி விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்தி லேயே இறந்து போனார். இதுகுறித்து டிபன் கடை நடத்தி வரும் வினோத் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
- இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் நடந்த விருந்தில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
கவர்னர் விருந்து என்பது அலட்சியம் செய்யும் விழா இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுதந்திர போராட்ட வீரர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மாற்றுதிறனாளிகள் என பலரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு வந்தால் அவர்கள் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். கலந்து கொள்ளாததால் அவர்களுக்கு தான் நஷ்டம்.
அன்போடு அழைத்ததன் பேரில் வந்தவர்களுக்கு வாழ்த்து. பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்வோம். இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.
இவ்வாறு தமிழிசை பேசினார்.
முன்னதாக கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 20-ந் தேதி தொடங்குகிறது
- முதல் நாள் இரவு அனுக்ஞை, மிருத் ஸங்க்ரஹணம், விஷ்வக்சேனர் வீதி உலா நடைபெறுகிறது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை ராம கிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி 52-வது பிரமோற்சவ விழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. விழா 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாள் இரவு அனுக்ஞை, மிருத் ஸங்க்ரஹணம், விஷ்வக்சேனர் வீதி உலா நடைபெறுகிறது. மறுநாள் காலை 10-30 மணிக்கு பிரமோற்சவ விழா கொடி ஏற்றப்படுகிறது.
அதைத்தொடர்ந்து விழா நாட்களில் காலையில் விசேஷ ஹோமங்கள், திருமஞ்சனம் நடக்கிறது. இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருடசேவை 24-ந்தேதி (வியாழன்) இரவும், 29-ந்தேதி (செவ்வாய்) காலை 10 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன. அன்று இரவு புஷ்பயாகம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை ஆகியவை நடைபெறுகிறது. 30-ந்தேதி (புதன் கிழமை) இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.






