search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரமோற்சவம்
    X

    கோப்பு படம்.

    லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரமோற்சவம்

    • 20-ந் தேதி தொடங்குகிறது
    • முதல் நாள் இரவு அனுக்ஞை, மிருத் ஸங்க்ரஹணம், விஷ்வக்சேனர் வீதி உலா நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை ராம கிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி 52-வது பிரமோற்சவ விழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. விழா 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    முதல் நாள் இரவு அனுக்ஞை, மிருத் ஸங்க்ரஹணம், விஷ்வக்சேனர் வீதி உலா நடைபெறுகிறது. மறுநாள் காலை 10-30 மணிக்கு பிரமோற்சவ விழா கொடி ஏற்றப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து விழா நாட்களில் காலையில் விசேஷ ஹோமங்கள், திருமஞ்சனம் நடக்கிறது. இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருடசேவை 24-ந்தேதி (வியாழன்) இரவும், 29-ந்தேதி (செவ்வாய்) காலை 10 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன. அன்று இரவு புஷ்பயாகம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை ஆகியவை நடைபெறுகிறது. 30-ந்தேதி (புதன் கிழமை) இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

    Next Story
    ×