search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
    X

    கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர்.

    கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

    • போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு
    • போலீஸ் பாதுகாப்புடன் கிராம சபை கூட்டம் அதிகாரிகள் முன்ன ணியில் பொதுமக்களுடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    குருவிநத்தம் ராஜீவ் காந்தி மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதை அறிந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கிராம சபை கூட்டத்திற்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அரசுக்கு எதிராக வும், அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகள் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் குருவிநத்தம், சோரியாங்குப்பம் பகுதியில் சுடுகாட்டுக்கு செல்ல பாலம் அமைத்து தரவும், சாலை வசதி குடிநீர் வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து கவர்னர், முதல்-அமைச்சர் எம்.எல்.ஏ.விடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்காத தால் இன்று நடைபெற இந்த கிராம சபை கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வாயில் கருப்பு துணி அணிந்து கிராம சபை புதிய புறக்கணித்தனர். தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது அரசு எதிராக கோஷ்மிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி யினரை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கிராம சபை கூட்டம் அதிகாரிகள் முன்ன ணியில் பொதுமக்களுடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்து உள்ள குருவிநத்தம் சோரி யாங்குப்பம் கிராமத்தில் பாலம் இல்லாமல் இறந்த வர்களின் உடலை இடுப்ப ளவு தண்ணீரில் நீந்தி சென்று அடக்கம் செய்யும் அவலம்,

    இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாத நாட்டிற்கு சுதந்திர தினம் ஒரு கேடா ...? என பாகூர் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×