என் மலர்
புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய காட்சி.
புதுவை கடற்கரை சாலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்
- புதுவை கடற்கரை சாலையில் கோலாகல விழா நடைபெற்றது.
- மேடையிலிருந்து கீழே இறங்கிய முதல்-அமைச்சர், நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புதுவை அரசின் சார்பில் கடற்கரை சாலையில் 77-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் மேடை, கொடிக் கம்பம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் அமர்ந்து சுதந்திரதினத்தை பார்வையி டவும் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.
காலை 8.55 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலைக்கு காரில் வந்தார். அவரை தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா வரவேற்று அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து மேடைக்கு சென்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது. மேடையிலிருந்து கீழே இறங்கிய முதல்-அமைச்சர், நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
தொடர்ந்து மேடை திரும்பிய அவர், சுதந்திர தின உரையாற்றினார். பின்னர் சிறப்பாக பணி யாற்றிய போலீசார், வீர, தீர செயல்கள் புரிந்தவர்கள், சுகாதார கள பணியாளர்க ளுக்கு விருது, பதக்கம், சான்றிதழ்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். தொடர்ந்து பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு நடந்தது.
காவல்துறையின் பல்வேறு பிரிவுகள், முன்னாள் ராணுவவீரர்கள், தீயணைப்பு, என்.எஸ்.எஸ்., என்.சி.சி., அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பு மரி யாதயை முதல்-அமைச்சர் ரங்கசாமி மேடையிலிருந்து ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்கள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பின்னர் சிறந்த அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார். தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சித் தலைவர் சிவா, செல்வகணபதி எம்.பி.,
எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கென்னடி, சம்பத், ஜான்குமார், கல்யாணசுந்தரம், அங்காளன், கே.எஸ்.பி.ரமேஷ், ரிச்சர்டு, லட்சுமி காந்தன், பாஸ்கர், வி.பி.ராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவை யொட்டி கடற்கரை சாலை யில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டி ருந்தது. பார்வையாளர்க ளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது.
புதுவை நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டி ருந்தது. கடற்கரை சாலை யின் பின்புறம் கடலில் கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






