என் மலர்
புதுச்சேரி
- பிறகு தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- புதுவை இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில், கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் நடைபெற்றது.
புதுச்சேரி:
இந்தியா சுதந்திர மடைந்தாலும், பிரெஞ்சு ஆட்சியின் கீழ் புதுவை இருந்து வந்தது.
இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுவை மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் வில்லியனூர் அருகே உள்ள கீழூர் கிராமத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.
அதைத் தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட்டு 16-ந் தேதி புதுவை இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, புதுவை இந்தியாவுடன் இணைந்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறைப்படி ஏற்றது.
இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற கீழூரில் புதுவை சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக, தியாகிகள் நினைவுத் தூண், நினைவு மண்டபம் உள்ளது. புதுவை இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில், கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் நடைபெற்றது.
சபாநாயகர் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் போலீஸ் மரியாதையை ஏற்றனர். இதன்பின் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை செயலர் ராஜீவ்வர்மா, அரசு அதிகாரிகள், காவல்துறையினர், தியாகிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற தியாகி ராமேலிங்கம் கூறியதாவது, ஆண்டுதோறும் இந்த நாளில் கவர்னர் கொடியேற்றுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கவர்னர் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை.
முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 3 ஆண்டாக இந்த சட்டபூர்வ பரிமாற்ற நாள் விழாவை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். புதுவை சுதந்திரத்துக்கு போராடிய தியாகிகளை அரசு மதிப்பதில்லை என வேதனை தெரிவித்தார்.
- சிறப்பு விருந்தின ராக புதுச்சேரி பல்கலை கழக பதிவாளர் ரஜனிஸ் புத்தானி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
- விழாவில் செவிலி யர் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி மோனி, டீன் ஆலிஸ் கிஸ்கு உள்ளிட்ட அனைத்து துறை மருத்து வர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ கல்லூரி யில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கிட மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலை கழக பதிவாளர் ரஜனிஸ் புத்தானி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவ- மாணவிகள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் 20 ஆண்டுகாலம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்க ப்பட்டது. விழாவில் செவிலி யர் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி மோனி, டீன் ஆலிஸ் கிஸ்கு உள்ளிட்ட அனைத்து துறை மருத்து வர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் டாக்டர் மேகி முருகன் நன்றி கூறினார்.
- எனக்காக வைத்திருந்த மது எங்கே என விமலிடம் கேட்ட பொழுது, அஜய் தூங்கியவுடன் எல்லா மதுவையும் குடித்து விட்டதாக விமல் கூறியுள்ளார்.
- கோட்டக்குப்பம் போலீசார் அஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
பெரியக்கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தனராஜ் மகன் விமல் (வயது 20). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் அஜய் (வயது 20). இருவரும் உறவினர்கள். சம்பவத்தன்று இரவு இருவரும் அங்குள்ள தென்னந்தோப்பில் விடிய விடிய, மது அருந்தி உள்ளனர்.
மறுநாள் விடிந்து இருவருக்கும் போதை கலைந்த நிலையில் அஜய் எழுந்து மீதமிருந்த மது பாட்டிலை பார்த்த பொழுது அதில் மது இல்லை. எனக்காக வைத்திருந்த மது எங்கே என விமலிடம் கேட்ட பொழுது, அஜய் தூங்கியவுடன் எல்லா மதுவையும் குடித்து விட்டதாக விமல் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அஜய் மறைத்து வைத்திருந்த கத்தியால் விமலை சரமாரியாக குத்தி உள்ளார்.
இதில் காயமடைந்த விமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விமல் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் அஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் நாடகம், தமிழர் களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் நடைபெற்றது.
- போராட்டத்தில் கையாண்ட முறைகளை தமிழ, ஆங்கிலம், மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிப்படுத்தினர்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம்.வி., பள்ளியில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைஞர் தனசேகரன் துணைத் தலைவர் சுகுமாறன் செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், பொறியியல் கல்லுாரியின் இயக்குனர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தனர் பள்ளி முதல்வர் அனிதா சாந்தகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசினார்.
தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு மாநில மக்களின் கலாசார நடனம், மனதை ஒருநிலைப்படுத் தும் யோகாசனம், ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் நாடகம், தமிழர் களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் நடைபெற்றது.
விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் போராட்டத்தில் கையாண்ட முறைகளை தமிழ், ஆங்கிலம், மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில், பள்ளியின் துணை முதல்வர் இமானு வேல் மரிஜோசப் செல்வம் மற்றும் பள்ளியின் நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளியின் 38-ம் ஆண்டின் விளையாட்டு விழா வினையும் கொண்டாடும் பொருட்டு 38 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.
- ஒலிம்பிக் கொடியை ஏற்றி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 38-ம் ஆண்டிற்கான விளையாட்டு பெருவிழாவினை பள்ளியின் ப்ளூ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அரேனா ஏற்பாடு செய்திருந்தது.
விழாவில் இந்திய நாட்டின் 76-ம் ஆண்டு சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் விதமாகவும், பள்ளியின் 38-ம் ஆண்டின் விளையாட்டு விழா வினையும் கொண்டாடும் பொருட்டு 38 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.
பள்ளியின் தாளாளர் மெய்வழி ரவிக்குமார் 38 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி
னார். பள்ளியின் முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார் புளு ஸ்டார்ஸ் பள்ளியின் கொடியை ஏற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பளு தூக்கும் போட்டியில் ஆசிய விருது பெற்ற யோகேஷ் கலந்துகொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சாலை சிவசெல்வம் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விளை யாட்டின் அவசியத்தையும் அதன் பயனையும் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன்மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பாக தலைவர் பாபு தலைமையில் வணிகர்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
- எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரி:
நுகர்வோர் பயன்படும் வகையில் எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி வணிகவரித்துறையில் நடந்தது.
வணிகவரித்துறை ஆணையர் முகமது மன்சூர் தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடுதல் வணிகவரி துறை அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பாக தலைவர் பாபு தலைமையில் வணிகர்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மத்திய அரசு புதுச்சேரி , ஹரியானா, அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் எந்த ஒரு ஜி.எ.ஸ்.டி பதிவு பெற்ற வணிக நிறுவனத்திடம் இருந்து ஒரு வாடிக்கையாளர் குறைந்தபட்சம் ரூ.200-க்கு மேல் கொள்முதல் செய்யும் பொருளுக்கான விலை பட்டியல் ரசீதைமத்திய அரசு (ஜி.எஸ்.டி.என்) பிரத்தியேக செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறாக பதிவேற்றம் செய்யப்படும் விலைப்பட்டியல் ரசீது அடிப்படையில் பிரதி மாதம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1 கோடிக்கு வரையான பரிசுத் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த குலுக்கல் முறை முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. என்பதனை வணிகவரித் துறை அதிகாரிகள் வணிகர்களிடத்தில் தெரியப்படுத்தினார்.
நுகர்வோர்கள் பயிரிடும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த எனது விலைப்பட்டியல் எனது உரிமை திட்டத்திற்கு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் வரவேற்பு அளித்தனர்.
- கவர்னர் தமிழிசை ஆவேசம்
- மாலையில் தெலுங்கானா செல்ல வேண்டி இருப்பதால் இங்கு நல்ல விருந்தாகவே கொடுக்க நினைத்து உணவு பட்டியலை நானே தயாரித்தேன்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் சுதந்திர தினத்தையொட்டி நடந்த தேனீர் விருந்தை தி.மு.க. வினர் புறக்கணித்தனர். எதிர்கட்சிகள் புறக்கணிப்பு குறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறிய தாவது:-
தமிழகத்தில் கவர்னர் விருந்து மழை காரணமாக நடத்தப்படவில்லை. மழை அங்கு அதிகமாக பொழிகிறது.இங்கு நாம் அனைவரையும் சகோதரத்துடன் அழைத்து கொண்டாட வேண்டும் என்பது ஆசை. காலகாலமாக சுதந்திர தினத்தில் விருந்து வைத்து கொண்டாடுவது வழக்கம். மாலையில் தெலுங்கானா செல்ல வேண்டி இருப்பதால் இங்கு நல்ல விருந்தாகவே கொடுக்க நினைத்து உணவு பட்டியலை நானே தயாரித்தேன்.
அனைவருக்கும் தேவை எது என்பதை பார்த்து பார்த்து செய்தேன். இதில் புறக்கணிப்பு என்பது பெருமைக்குரியது அல்ல. அரசியல்,கொள்கைகளை தாண்டி நடைபெறும் வழிமுறை. இதில் வரவில்லை என்றால் எனக்கு எதுவும் குறையில்லை. வராதவர்களை பற்றி கவலை இல்லை. வந்தவர்களை மகிழ்ச்சியாக வரவேற்றோம்.
நான் தமிழகத்தை சேர்ந்தவள். தமிழகத்தில் எது நடந்தாலும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. தமிழகத்தில் தமிழிசை ஏன் மூக்கை நுழைக்கிறார் என புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா கேட்கிறார். சுதந்திர தினத்தன்று ஒரு கவர்னரை பார்த்து தமிழத்தை பற்றி எப்படி பேச முடியும் என கேட்கிறார்கள். தமிழக சட்ட மன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என கூறும் போது எனக்கு தெரிந்த உண்மையை கூறினேன்.
தமிழகத்தில் நடந்த சம்பவத்திற்கு இங்கு எப்படி பதில் சொல்லலாம். அதற்கு நான் வர மாட்டேன் என தி.மு.க. சிவா கூறுவதால் எனக்கு நஷ்டமில்லை.
புதுவை ஆட்சியை நான் பிடித்து வைத்திருப்பதாக எதிர்கட்சிகள் தவறாக கூறுகிறார்கள். புதுவையின் மீது அக்கறை இருந்தால் தமிழகத்தில் இருந்து புதுவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை வாங்கி தர வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
- ராஜீவ் காந்தி சிக்னலில் பரபரப்பு
- கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் டீக்கடையில் இருந்த பாத்தி ரத்தால் கிருஷ்ணகுமாரின் தலையில் தாக்கினர்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு குருநகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 30). இவர் திருப்பதியில் உள்ள ஏர்போர்ட்டில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் 9-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
2 நாள் விடுமுறைக்காக நேற்று இரவு திருப்பதியில் இருந்து பஸ்சில் இன்று அதிகாலை புதுவை வந்தார். புதுவை ராஜீவ் காந்தி சிக்னலில் இறங்கிய கிருஷ்ணகுமார் தனது தம்பி செல்வகுமாருக்கு போன் செய்து பைக் எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
தம்பிக்காக காத்திருந்த கிருஷ்ணக்குமாரிடம் அங்கு கஞ்சா போதையில் வந்த 2 இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர்.
கிருஷ்ணகுமார் அங்கிருந்து விலகி அங்குள்ள டீ கடைக்கு சென்று உள்ளார்.
தொடர்ந்து வந்த 2 பேரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த தம்பி செல்வக்குமாரிடம் நடந்தவற்றை கிருஷ்ண குமார் கூறியுள்ளார்.
அந்த 2 வாலிபர்களிடமும் சென்று செல்வகுமார் தட்டிக் கேட்கவே அந்த 2 பேரும் செல்வக்குமாரை தாக்கி உள்ளனர். தம்பியை தாக்குவதை பார்த்த கிருஷ்ணகுமார் அதனை தடுத்து நிறுத்த முயன்ற போது கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் டீக்கடையில் இருந்த பாத்தி ரத்தால் கிருஷ்ணகுமாரின் தலையில் தாக்கினர்.
இதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். தலையில் பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமார் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குடிநீர் வினியோக குழாயுடன் இணைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது.
- ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணி த்துறையால் தொடங்கப்பட்டன.
புதுச்சேரி:
வாணரப்பேட்டை, தாமரைநகர் ஜெகநாத படையாட்சி வீதி, கம்பன் வீதி, கோவிந்த செட்டி தோட்டம், அன்னை தெரேசா நகர், ஜெ.ஜெ நகர், பல்லவன் வீதி, இன்ஜினியர் தோட்டம், அன்னை தெரேசா வீதி, காளியம்மன் தோப்பு, அலேன் வீதி, சித்தி விநாயக தோப்பு, கஸ்தூரிபாய் நகர், முருகசாமி நகர், ஈஸ்வரன் கோயில் தோப்பு, ஜெயவிலாஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மோட்டார் பொருத்துதல் மற்றும் குடிநீர் வினியோக குழாயுடன் இணைத்தல் ஆகிய பணிகள் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணி த்துறையால் தொடங்கப்பட்டன.
இந்த பணியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை , தலைமைப்பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர், பாஸ்கர், உதவி பொறியாளர், வாசு, இளநிலை பொறியாளர். வெங்கடேசன்மற்றும் ஊர் பொதுமக்கள் நாராயணன், ராமச்சந்திரன், ஸ்ரீனிவாசன், சேகர், ஜெய ராமன், ஆரோக்கியதாஸ், கலிய பெருமாள், கழக அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், உட்பட பலர் பங்கேற்றனர்.
- அகில இந்திய வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.
- பட்டம் பெற்ற புதுவை வீரர் விஷாலுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
தேசியளவில் உத்திரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் சிறப்பு பிரிவினருக்கான வலு தூக்கும்போட்டி நடந்தது.
இதில் புதுவை வலு தூக்கும் சங்க செயலாளர் பிரவீன், பயிற்சியாளர் பாக்கியராஜ் தலைமையில் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் புதுவை வீரர் விஷால் ஜூனியர் 59 கிலோ எடை பிரவில் டெட் 170, ஸ்குவாடு 170, பென்ஞ் 82.5 பிரிவில் வலு தூக்கி தங்கப்பதக்கம் மற்றும் ஸ்பெஷன் ஸ்ட்ராங்க் மேன் ஆப்-இந்தியா பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே ஜெர்மனியில் நடந்த சிறப்பு ஒலிம் பிக் வலு தூக்கும் போட்டியில் 2-ம் இடம் பிடித்து 4 வெள்ளி ப்பதக்கம் வென்றுள்ளார். பட்டம் பெற்ற புதுவை வீரர் விஷாலுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விருது பெற்று செசாந்த ஊரான புதுவை மதகடிப்பட்டுக்கு வந்த விஷாலுக்கு கிராம மக்கள், விளையாட்டு வீரர்கள் வரவேற்பு அளித்தனர்.
விருது பெற்ற வீரர் விஷால் கடந்த 6 ஆண்டாக புதுவை நயினார்ம ண்டபத்தில் உள்ள சத்யா சிறப்பு பள்ளி வழிகாட்டு தலுடன் பயிற்சி யாளர் பாக்கியராஜிடம் பயிற்சி பெற்றார். விஷாலின் தந்தை திருநாவுக்கரசு புதுவை தீயணைப்பு துறையிலும், தாயார் சுந்தரி விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரி யராகவும் பணியாற்றி வருகின்றனர்.
- தற்காலிகமாக லாரி மூலம் குடிநீர் வழங்க வலியுறுத்தல்
- குடிநீர் இணைப்பு கடந்த 3 மாதங்களாக துண்டிக்கப்பட்டு, சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.
புதுச்சேரி:
திருபுவனையில் சென்னை-நாகப்பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதனால் திருபுவனை பகுதி 500 மீட்டர் தூரத்தில் உள்ள வணிக கடைகள் நிறைந்த பகுதியில், பொதுப்பணி துறையின் மூலம் பயன்பாட்டில் இருந்து வந்த குடிநீர் இணைப்பு கடந்த 3 மாதங்களாக துண்டிக்கப்பட்டு, சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.
அப்பகுதி மக்களுக்கு பொதுப்பணி துறையின் மூலமாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. ஆனால் சாலை போடும் ஒப்பந்த தொழிலாளர்கள் வாட்டர் டேங்கர் லாரிகள் மூலம் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும், ஹோட்டல்கள், வணிக கடைகளுக்கு காலையும், மாலையும் குடிநீர் வழங்கி வருகிறார்கள்.
இது தற்காலிகம் என்றா லும், முறையான, சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.
குடிநீர் குழாய் இணைப்புர்வீஸ் சாலையின் தெற்கு புறம் மழை நீர் வடிகால் கால்வாய் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அது முழுமையாக வேலைகள் முடிந்த பிறகு சாலைகள் போடும் பணி துவக்கத்திற்கு முன்பாக மீண்டும், குடிநீர் குழாய் இணைப்பு இணைக்கப்பட்டு, அதன் பின்னர் சாலை போடும் பணி துவக்கப்பட உள்ளனர்.
இதனால் இப்பகுதியில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லாமல் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிகப்படியான குடிநீரை பொதுப்பணித்துறை மூலம் வழங்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வெளிமாநில ஆண்களும்-பெண்களும் குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
- மது விருந்துக்கு பயன்படுத்திய மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை அடுத்து தமிழக பகுதியான ஆரோவில் அருகே இடையஞ்சாவடி கிராமத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு செல்லும் குதிரை பண்ணை சாலையில் தனியார் விடுதி உள்ளது.
அங்கு வெளிமாநில ஆண்களும்-பெண்களும் குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விடுதி உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சுமார் 20 பெண்கள் மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு மது ஊற்றி கொடுத்து நடனமாட வைத்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ்பிரபாஜ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மது விருந்துக்கு பயன்படுத்திய மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






